அண்ணா, நீ பிறந்திருக்காவிட்டால் வீரம் பேசும் நம் காப்பியங்கள் காணாமற் போயிருக்கும். தமிழனா என்று அறுமுகப் பார்வை பார்க்கும் பல நாடுகளின் விமான நிலைய அதிகாரிகளுக்குக்கூட எங்களைத் தெரியாமல் போயிருக்கும். பிறத்தலின் ஊடுபாயும் ஒரு அதீத ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டியவன் நீ.
ஆனால் துரோகமும், வஞ்சகமும் யாரைத்தான் தன் இலட்சியத்தில் வெற்றிகொள்ள விட்டது. அவர்களை விடுவோம், இப்பொழுதுகூட பார், உன்னுடைய விடுதலை வேட்கையில் காய்ந்து, ஹர்ஷம் கண்டு, இருத்தலை ஒருவாறு கண்டடைந்து, பின்னர் ஐரோப்பாவுக்கு களவாய் போய் தஞ்சமடைந்து, இன்று பப்பில் Pernod அருந்திக்கொண்டிருக்கும் ஒருவன் உன்னை 'தேவடியாப் பயல்' என முகப்புத்தகத்தில் எழுதிக்கொண்டிருக்கிறான். அதுகூடப் பறவாயில்லை, அதில் கருத்திட வந்த ஒருவன் 'தமிழ் இளைஞர்கள் வழிதவறிச் செல்ல காரணமானவன்' என உன்னைப்பற்றி வாந்தி எடுத்துவிட்டுப் போகிறான். எனக்கென்னவோ நீ தமிழர்களை நம்பியதற்குப்பதிலாக சிங்களவர்களை நம்பியருக்கலாம் போலிருக்கிறது.
இவர்களல்தான் நீ களத்தில் தோற்றுப்போனாய் அண்ணா. உன்கூடவேயிருந்து உனக்கே தாயத்துக் கட்டிய இவன்கள்தான் உன் இலட்சியத்தில் மலம் கழித்துவிட்டுப்போன அசிங்கங்கள். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த நீ, இந்த தாயத்துக் கும்பலிடம் கவனமாக இருந்திருக்க வேண்டும். உலகில் தங்களுடைய இனத்துக்காகவே போராடி மடிந்த மிகப்பெரிய மாவீரர்களையும் அதன் அமைப்பையும் தூசண வார்த்தைகளால் திட்டித் துவைக்கும் உத்தம மனிதர்களும் இலக்கியவாதிகளும் நம் இனத்தில்தான் வந்து பிறந்திருக்கிறார்கள். இந்த தலைவிதியை உன்னால்கூட மாற்ற முடியாமல் போய்விட்டதே!
எது என்னவோ, உன் இலட்சிய தாகம் இன்னும் எங்களிடம் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். மாற்று இணக்க அரசியல், மென்வலு அரசியல், பொறுமையான ஒட்டு அரசியல் என ஏதேதோவெல்லாம் எங்களைக் காப்பாற்றும் என இங்கிருப்பவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உன்னைக்கண்டு அஞ்சியே எதையும் தூக்கிக்கொடுக்காதவர்களா இந்த வேட்டி சால்வை ஐயாக்களிடம் போயா இரக்கம் காட்டப்போகிறார்கள்.
இன்னுமொருமுறை நீ பிறக்காவிட்டால் தமிழினத்தின் முகத்தில் மலம்கழித்துவிட்டுப்போக பலர் தயாராக இருக்கிறார்கள் அண்ணா. காலத்தை நம்பியவன் நீ. நாங்களும் அதற்காகத்தான் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறோம்.
இனிய வாழ்த்துக்கள்.