
என் உணர்வுத் தேக்கத்தில்
கல்லெறிந்து ஓடுகிறாய்,
கலங்கித் தவிக்கிறேன்.
தீர்ந்துபோகும் வரட்சியில்
தண்ணீர் ஊற்றி விளையாடுகிறாய்,
மொத்தமாய் நனைகிறேன்.
வா வா..
ஆணினத்தின் அத்தனை அகம்பாவத்தையும்
ஒற்றை இதழால் சுழற்றி வீசியவளே!
அழகை இரசித்து கடந்துபோனவனை
அடக்கி ஆள்வது அந்தப்புர முரண்!
விழுந்து கிடக்கிறேன் பார்.
உயர உயர அறிவு பறந்தாலும்
இதயத்தை நிமிர்த்த இன்னொருவன் துணைகேட்கிறேன்..
கல்லெறிந்து ஓடுகிறாய்,
கலங்கித் தவிக்கிறேன்.
தீர்ந்துபோகும் வரட்சியில்
தண்ணீர் ஊற்றி விளையாடுகிறாய்,
மொத்தமாய் நனைகிறேன்.
வா வா..
ஆணினத்தின் அத்தனை அகம்பாவத்தையும்
ஒற்றை இதழால் சுழற்றி வீசியவளே!
அழகை இரசித்து கடந்துபோனவனை
அடக்கி ஆள்வது அந்தப்புர முரண்!
விழுந்து கிடக்கிறேன் பார்.
உயர உயர அறிவு பறந்தாலும்
இதயத்தை நிமிர்த்த இன்னொருவன் துணைகேட்கிறேன்..
என் இரவை நீட்ச்சித்தவளே,
ஒவ்வொரு இரவும் – என்
மெத்தையில் எழுந்தருளி வா.
என் இராக்கால வறுமையை
இரங்கல் கலந்து வாசி.
என் இறவாமை கண்டு மகிழ்ச்சி கொள்!
ஒவ்வொரு இரவும் – என்
மெத்தையில் எழுந்தருளி வா.
என் இராக்கால வறுமையை
இரங்கல் கலந்து வாசி.
என் இறவாமை கண்டு மகிழ்ச்சி கொள்!
என்னை துடைத்தெறியும் கைக்குட்டையே,
துலங்காமல் தவிக்கும் என்
தூங்கா நரம்புகளை துளைத்துச் செல்.
இன்றோ நாளையோ – அது
துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்.
கண்களால் மட்டுமா என்னை காதல் செய்வாய்?
சொண்டினை நிமிர்த்தி எப்படி கொலை செய்வாய்?
என் உயிர் வடியும் மூச்சுக்காற்றில்
முகாரி பாடும் புல்லாங்குழல்
தேவைதானா உனக்கு?
துலங்காமல் தவிக்கும் என்
தூங்கா நரம்புகளை துளைத்துச் செல்.
இன்றோ நாளையோ – அது
துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்.
கண்களால் மட்டுமா என்னை காதல் செய்வாய்?
சொண்டினை நிமிர்த்தி எப்படி கொலை செய்வாய்?
என் உயிர் வடியும் மூச்சுக்காற்றில்
முகாரி பாடும் புல்லாங்குழல்
தேவைதானா உனக்கு?
இறுமாப்பை
காதலால் போர்த்தியவளே,
உன்னால்
வீதியோரத்தில் வீசப்பட்டவனின் விதியைப்பார்.
அன்று,
வீதி வராமல் வீட்டில் கிடந்திருந்தால்,
விதியும் மதியும் நின்மதியாய் இருந்திருக்கும்!
காதலால் போர்த்தியவளே,
உன்னால்
வீதியோரத்தில் வீசப்பட்டவனின் விதியைப்பார்.
அன்று,
வீதி வராமல் வீட்டில் கிடந்திருந்தால்,
விதியும் மதியும் நின்மதியாய் இருந்திருக்கும்!
இன்று போ,
மீண்டும் நாளை வா.
நானோ,
நகரப் பேருந்தில் நகர்வலம் வருவேன்!
மௌனத்தை களை,
யௌவனத்தை பெருக்கு,
ஒட்டும் இதழை ஒதுக்கி
ஓட்டை விழுந்த என் நம்பிக்கையை உயிர்ப்பி.
உயிர் பெறுகிறேன்!
பாவம்,
கசங்கிக்கிடக்கும் இந்த தெருக்காதல்
உயிர்த்தெழுந்து உன்னிடம் வரட்டும்.
மீண்டும் நாளை வா.
நானோ,
நகரப் பேருந்தில் நகர்வலம் வருவேன்!
மௌனத்தை களை,
யௌவனத்தை பெருக்கு,
ஒட்டும் இதழை ஒதுக்கி
ஓட்டை விழுந்த என் நம்பிக்கையை உயிர்ப்பி.
உயிர் பெறுகிறேன்!
பாவம்,
கசங்கிக்கிடக்கும் இந்த தெருக்காதல்
உயிர்த்தெழுந்து உன்னிடம் வரட்டும்.
No comments:
Post a Comment