எது காதல்?
நான் வாழும் நரகத்தை
நீ முடிசூடி ஆட்சி புரிந்ததா?
இல்லை - நான் விட்டுக்கொடுக்கும் சண்டைகளில்
நீ வெற்றிவாகை சூடிக்கொண்டதா?
எது காதல்?
உன்னை நான் அணைத்துக்கொள்ள
என்னை நீ எரித்து முடித்ததா?
உனக்குள் நான் மயங்கிக்கிடக்க
என் தொண்டைக்குழிக்குள் திராவகம் கொட்டியதா?
நான் வாழும் நரகத்தை
நீ முடிசூடி ஆட்சி புரிந்ததா?
இல்லை - நான் விட்டுக்கொடுக்கும் சண்டைகளில்
நீ வெற்றிவாகை சூடிக்கொண்டதா?
எது காதல்?
உன்னை நான் அணைத்துக்கொள்ள
என்னை நீ எரித்து முடித்ததா?
உனக்குள் நான் மயங்கிக்கிடக்க
என் தொண்டைக்குழிக்குள் திராவகம் கொட்டியதா?
காதல் வழிய வழிய - உன்னை
கொட்டித் தீர்த்து தீர்ந்து போனது
நின் பிழையா?
இல்லை -
கண்ணீர் சொரிய சொரிய - உன்னை
கட்டியணைத்து முத்தம் கொட்டியது
என் தவறா?
கொட்டித் தீர்த்து தீர்ந்து போனது
நின் பிழையா?
இல்லை -
கண்ணீர் சொரிய சொரிய - உன்னை
கட்டியணைத்து முத்தம் கொட்டியது
என் தவறா?
நீ குடிக்க குடிக்கு
என்னுள் ஊறிக்கொண்டே போகும்!
நீ பசிக்க
நான் சாதமானேன்!!
இறுதியில்,
நீ வரம் கிடைத்து எங்கோ தாரம் ஆனாய்.
நானோ கரம் தொலைத்து எனக்கே பாரம் ஆனேன்.
4 comments:
வணக்கம்
நீ வரம் கிடைத்து எங்கோ தாரம் ஆனாய்.
நானோ கரம் தொலைத்து எனக்கே பாரம் ஆனேன்....
கவி வரிகள் நன்றாக உள்ளது பலதடவை இரசித்துப்படித்தேன்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த படைப்பு
மிக்க நன்றிகள்..
கடைசி வரிகள் அருமை...
அருமையான கவிதை.
Post a Comment