தூரமாய் போன நிலவு நீ.
இருந்தாலும்
தீண்டாமல் எப்படி விலகும் மேகம்.
கோவிலில் அர்ச்சனை ஏந்தியபடி நான்.
சாமியோ ஆழ்ந்த உறக்கத்தில்.
பூசாரி வரம் கொடுக்க தயாராகிறான்.
என் வேண்டுதல்கள் எல்லாம்
வரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
கிடைத்த வரம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே.
திருமணமும் ஒரு வரம் தான்.
அது அவளுக்கு.
எனக்கோ அது ஒரு சாபம்.
வரம் அவளுக்கு
சாபம் எனக்கு.
பிரார்த்தனை ஆரம்பிக்கையிலேயே
பிசாசுகள் கூட்டம் தேவாரம் பாட ஆரம்பித்துவிடும்.
பின்னர்
கடவுளின் கண்கள்
எப்படி என் பக்கம் திரும்பும்.
எனது வேண்டுதல்
கோவில் வாசலை தாண்டியதில்லை.
அவள் பிரார்த்தனை
மூலஸ்தானத்தை விட்டதில்லை.
ஒரே கடவுள் -
அவள் மாங்கல்யம் தரிக்கிறாள்.
நானோ கூப்பிய கைகளோடு கடவுளை நிந்திக்கிறேன்.
கோபுரத்திலுள்ள புறாக்களும்
என் பின்னே வருகிறது..
கடவுள் நல்லவர் என தேவாரங்கள் பாடியபடி.
2 comments:
வணக்கம்
கவிதை மிக அருமையாக உள்ளது சோகம் இளையோடியுள்ளது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிந்திக்க வைக்கும் அடிகள்
சிறந்த கவிதை
Post a Comment