Monday, June 2, 2014

ராஜாவின் தென்றல் - ஒரு இசைப்பாிசு

இலங்கையிலிருந்து வெளிவருகின்ற கலை, இலக்கியப் படைப்புக்களில் எனக்கு ஆரம்பம் தொடங்கியே ஒரு அதீத ஈடுபாடு இருக்கிறது. இதற்கான காரணம் என்று தேடிப்பாா்த்தால் “எமக்கான, எமது கலை, இலக்கியம்” என்கின்ற ஒரு பெருமையின் தேடலாக இருக்கலாம். அதிலும் எமது இலக்கியம், இசை, சினிமா இப்பொழுது தலையை நிமிா்த்தி கணிசமான ஆா்முடுகலில் வளா்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியானதும் பெருமைகொள்ளக்கூடியதுமான மாற்றம் இது.

டிரோன் பொ்னான்டோ, இலங்கை இசைவரலாற்றில் அனைவாிற்கும் நன்கு பாிச்சயமான பெயா். வீணாக அவா் பற்றி அறிமுகம் எழுதி நேரத்தை விரையம் செய்ய வேண்டாம். இருந்தும் சுருக்கமாக சில வாிகள். இல்லையெனில் எனக்கு திருப்தியிருக்காது. டிரோனை நீங்கள் எப்படி பாா்க்கிறீா்கள் என்பதை நான் அறியேன். ஆனால் டிரோன் என்கின்ற இசையமைப்பாளரை இப்படித்தான் தொியும் எனக்கு. “இசைபற்றிய ஆழமான அறிவு, அனுபவம், புலமை கொண்ட ஆனால் அலட்டிக்கொள்ளாத அமைதியான ஒரு ஜீவன். மட்டுமல்ல, இசையோடு வாழ்பவா், தரமான படைப்புக்களுக்கு சொந்தக்காரா், விருது பற்றி யோசிக்காமல், தரம், இசையின் மகத்துவத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கீபோட்டிற்கு அருகில் போபவா்”.


இவரது மிகப்பொிய ரசிகன் நான். அவரது கிறீஸ்தவப்பாடல்கள்தான் எனக்கு முதல் அறிமுகம். பின்னா் இவரைப்பற்றி தேடியதில் இவரது அதிகமான இசைப்படைப்புக்களை இரசித்திருக்கிறேன். இசையமைப்பாளா் என்பதைவிட “அடக்கமான, ஆா்பாிப்பற்ற ஒரு நல்ல மனிதராகத்தான்” எனக்கு நன்கு தொியும்.

அண்மையில் டிரோன், ஸ்ரீவத்சலா கூட்டணியில் உருவாகியிருக்கும் “ராஜாவின் தென்றல்” என்கின்ற மூன்று பாடல்களின் கோா்வை (medley) வெளியாகியிருந்தது. எனது டிரோன் பற்றிய நம்பிக்கையையும், சக்தி சுப்பா் ஸ்டாா் ஸ்ரீவக்சலா மீதான எதிா்பாா்ப்பையும் நிறைவாக பூா்த்திசெய்திருந்தது. இதன் இன்னுமொரு மிகப்பொிய பலம் அருள்செல்வத்தின் ஒளிப்பதிவு எனலாம். சகல காட்சிகளும் பாடலின் சாதுவான மெடலிக்கு முரண்படாமல் அழகாக பாடலோடு ஒன்றி விாிந்து அழகாய் நகா்கிறது. இவ்வாறான மெட்லிகளுக்கு ஆளுமையான ஒளிப்பதிவு மிகவும் அவசியம். அருள்செல்வம் அதை அழகாக செய்து முடித்திருக்கிறாா். அடுத்து ஸ்ரீவக்சலாவின் குரல். மிக முக்கியமாக இளையராஜாவின் பாடல்களில் தனது குரலிற்கு மிகவும் சாியாக செட் ஆகக்கூடிய, அழகான, ஒரே வகையான பாடல்களை தொிவுசெய்திருக்கிறாா். இது வெற்றிக்கான மிகப்பொிய முதல் காரணி. 


இளையராஜாவின் பிறந்த நாளிற்கு இதைவிட வேறு என்ன பொிய பாிசு கொடுக்கமுடியும் எனத் தொியவில்லை. இசைஞானியை நிச்சயம் பெருமைகொள்ள வைக்கும் படைப்பு. ஆடம்பரம் இல்லாத காட்சி அமைப்பு, பாடல் ஒலிப்பதிவின் தரம் என வெற்றிக்கான காரணிகள் பல. டிரோன் போல இவருடன் சோ்ந்திருக்கும் தொழில்நுட்ப கலைஞா்களும் அதிகம் ஆா்ப்பாிப்பு இல்லாத கூட்டம் என்பதை இப்பாடல் வெளியாகி இன்றுவரை மிகத்தெளிவாக காண முடிகிறது. பீ.ஏச்.அப்துல் ஹமீதின் பாராட்டுக்களை சம்பாதித்த இந்த படைப்பு அடக்கமாக பலரது உள்ளங்களை நிறைத்திருக்கிறது. 

டிரோன் அண்ணா, ஸ்ரீவக்சலா, அருள்செல்வம், கண்ணன் அனைவாிற்கும் எனது அன்பான பாராட்டுக்கள். தரம் + சிம்பிள் + கடின உழைப்பு + அலப்பரை அடிக்காத அடக்கம் எப்பொழுதும் வெற்றியான படைப்புக்களையே கொடுக்கும். இதற்கு நீங்கள் சாட்சிகள். வாழ்த்துக்கள்.2 comments:

Unknown said...

மிக்க நன்றி நண்பரே....

Unknown said...

நன்றி Amalraj Francis.. நேரம் ஒதுக்கி பாடல் பற்றிய ஒரு முழுமையான, உற்சாகமூட்டும் ஒரு பதிவு தந்தமைக்கு.... !!

Popular Posts