Sunday, May 25, 2014

டேய் மச்சியும் அடியேனும் !!


அண்மையில் எனது இன்னுமொரு பாடல் வெளிவந்திருக்கிறது. பாடலுக்கு வரிகள் எழுதுவது எனக்கும் என்றும் பிடித்தமான ஒரு வேலை. எவ்வளவு பிஸி என்றாலும் ஒருவாறு நேரத்தை பிடுங்கி எடுத்து இதற்காய் பயன்படுத்திவிடுவேன். கவிதையை எப்படி நேசிக்கின்றேனோ அதுபோலவே பாடல் எழுதுவதையும் நேசிக்கிறேன்.

என்னை முதல் இந்த உலகிற்குள் கொண்டுவந்து தள்ளி விட்ட பெருமை எப்பொழுதும் குறும்பட இயக்குனர் சமிதனையே சாரும். முதல் முறையாக சமிதன் பாடல் ஒன்று எழுத வேண்டும் என கேட்டபோது நானா நானா என பல தடவைகள் கேட்டு என்னிடமா கேட்கிறார் என்பதை உறுதிசெய்துகொண்டேன். சமிதனின் இயக்கத்தில் உருவாவதாய் இருந்த முழு நீள திரைப்படம் ஒன்றிற்கான முதல் பாடல் எழுத கிடைத்த சந்தர்ப்பம் அது. (அப்படம் தவிர்க்க முடியாத காரணங்களினால் கைவிடப்பட்டது). அப்பொழுதுதான் என்னை மிகவும் கவர்ந்த இசையமைப்பாளர் ப்ரனீவ் எனக்கு அறிமுகமானார். அந்த அறிமுகமும் சமிதனாலேயே சாத்தியமானது. எனது முதல் பாடல், அதுவும் முழு நீளப்படம், அப்பொழுதே திரைப்படம் மற்றும் இசைத் துறையில் நன்கு பிரபலமான இருவருடன் வேலை செய்ய வேண்டும் போன்ற பல சவால்கள் விரிந்து கிடந்தன. எப்பொழுதும் மகிழ்ச்சியோடே பயணிக்கும் ப்ரனீவுடனான பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

'காற்றிலே மிதக்கிறேன் நானே..' என்கின்ற முதல் பாடல் பிரனீவின் இசையில் உருவானபோது என்னால் தொடர்ந்து பாடல் எழுத முடியும் என்கின்ற நம்பிக்கையை கொடுத்தது. அப்படி ஆரம்பித்த இந்த பயணம் பல பாடல்களை தாண்டி இறுதியாக இந்தபாடலில் வந்து நிற்கிறது. டேய் மச்சி பாடல் அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. பாடலின் ஸ்கிரிப்ட்டைக் கொடுத்து இதற்கு பாடல் வேண்டும் என கேட்கப்பட்டபோது கொஞ்சம் பயமாக இருந்தது. மொத்த உளைப்பும் நம் சொதப்பல் வரிகளால் வீணாகிவிடக்கூடாதல்லவா? ஒரு நாளைக்குள் பாடல் வேண்டும் என கேட்டபோது நான் ஒரு நீண்ட பயணம் போய்க்கொண்டிருந்தேன். அதனால் பயணம் செய்துகொண்டிருக்கையில் பாடல் எழுதி அனுப்பியாக வேண்டும் என்கின்ற ஒரு பொறுப்பு திணிக்கப்பட்டது. அவ்வாறு உருவான பாடல் இந்த டேய் மச்சி. எனது வரிகளோடு கே ஜே அவர்களின் சில வரிகளும் ப்ரனீவால்; தேவை கருதி இணைத்துக்கொள்ளப்பட்டது.

நட்பின் மழைக்காலம்
மொத்தம் நனைந்திடலாம்.
கண்ணீர்கதைக்கெல்லாம் 
தடைகள் விதித்திடலாம்.

நாங்கள்தான் அழைத்திடும் நொடியில்
ரிங்ரோனும் ரிதமாகும்
நாங்கள்தான் பேசிடா நொடியில்
மேகமெல்லாம் பயராகும்.

நாமெல்லாம் ஒன்றாகப் போகவே
காற்றெல்லாம் நம்மைத்தான் வாழ்த்துமே
உன்நட்பை என்நட்பை காணவே
ஊரெல்லாம் ஊர்வலம் போகுதே

1
நண்பா நண்பா நாங்கள் தூங்கவே
காற்றின் ஊஞ்சல் கொஞ்சம் வேண்டினோம்
உன்னை என்னை வானில் உயர்த்தவே
மின்னும் விண்மீன் கொஞ்சம் திருடினோம்
நாம் பாய்ந்த சுவரெல்லாம்
நம் நட்பின் சாட்சிகள்
நாம் சென்ற இடமெல்லாம் மச்சி..
காசில்லா பணப்பையும்
நம் நட்பின் சந்தோஷம்
நட்போடு நம் வாழ்க்கை மச்சி..

2
ஏய் நண்பா உன் தோழில் நான் சாயவா
என் அம்மா அவள் பாசம் உன்னில் உணர்ந்தேனே
நட்பில் காமம் என்றும் இல்லையே
பார்ப்போர் கண்ணில் அது சாகவே
நம் நட்போ வானம் தான்
அதை சாய்ப்பது கஷ்டம்தான்
நாம் போடும் சண்டைகள் மச்சீ
நீ எம்மை பிரிந்தாலும்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
என்றென்றும் நம்மோடு மச்சி..

பிரதிப் மற்றும் பிரனீவ் வழமைபோல தங்கள் குரல்களால் ராக்ஸ். இந்த சந்தர்ப்த்தை வழங்கிய தயாரிப்பாளர் கிரி, இயக்குனர் மிதுனா மற்றும் ப்ரனீவ் ஆகியோருக்கு நன்றிகள். No comments:

Popular Posts