வணக்கம் நண்பர்களே. வேலைப்பாரம் நீண்ட நாட்களாக தலையை அழுத்தியபடியே இருந்தது. இடையில் நிற்சயமாக ஒரு ப்ரேக் தேவை என்பதை என்னால் மிகச்சரியாகவே புரிந்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அவ்வளவு களைப்பு. சரி, இந்த ஹோலிடேய்ஸ்கு எங்கு போகலாம் என்று பல நண்பர்களையும் இணையத்தளங்களையும் தேடிப்போனதில் கிடைத்த ஒன்று, மியன்மாரில் உள்ள நபாலி பீச். அழகோ அவ்வளவு அழகு. சரி அங்கு போகலாம் என முடிவாயிற்று. குறுகிய விடுமுறை என்றாலும் மகிழ்வோடும், ஜாலியாகவும் இருந்தது. இயற்கையின் அழகின் பிரமிப்பை நாம் அதிகம் உணர்ந்துகொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் அதை ஆச்சரியமாக பார்க்கவேண்டி ஏற்படுகிற பொழுதே அதன் மகத்துவம் புத்திக்குள் புகுந்துகொள்கிறது.
நபாலி, அழகிய கடற்கரை மற்றும் சிறு சிறு தீவுகள் அடங்கிய ஒரு அழகிய ஊர். ஏராளமான வெளிநாட்டவர்கள் விடுமுறையை கழிக்க இங்கே வருகிறார்கள். அழகிய ஹோடெல்ஸ், சுவையான உணவு, அழகிய பெண்கள் (பணியாளர்கள்) என குறைகூற எதுவும் இல்லை. இருந்தும், ஒரு இரவிற்கு 225 டாலர்களை பறித்துக் கொண்டார்கள்.
சரி, இதோ நபாலியில் எனது டிஜிட்டல் கண்களுக்குள் வந்து விழுந்த சில காட்சிகள் உங்களுக்காக,
ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!
.
6 comments:
சூப்பரா இருக்கு ஒவ்வொரு கிளிக்கும்
பரவசப்படுத்தும் படங்கள்...
Blogger thevashanghar said...
சூப்பரா இருக்கு ஒவ்வொரு கிளிக்கும்
//
நன்றி ஷங்கர்.
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
பரவசப்படுத்தும் படங்கள்...
//
நன்றி தனபாலன் அண்ணா.
என்ன ஒரு அழகு நிறைந்த இடம் , கண்ணைப்பறிக்கும் காட்சிகள் அழகோ அழகோ தனி அழகு கொண்டிருக்கிறது
Post a Comment