நிலா உதிர்க்கும்
சொட்டுண்டு ஒளி கொட்டலில்
அவள் அமர்ந்திருக்கிறாள்..
மேலே நிலா தேய்ந்துகொண்டிருக்கிறது
கீழே இவள் காய்ந்துகொண்டிருக்கிறாள்.
கன்னத்தின் குவிவும்
அவள் கிண்ணத்தின் நெளிவும்
பாதசாரிகளை
பக்கமாய் இழுக்கிறது.
ஒற்றைப்பின்னலில்
புஷ்பம் தொங்குகிறது..
மற்றப்பின்னலில்
கஷ்டம் தொங்குகிறது..
தானம் கொடுப்பது வேறு.
பிச்சை கேட்பது வேறு..
அவள் அன்னையை
அருகினில் படுக்கவைத்து
அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
நானோ,
மனதை திறந்து,
பையை எடுத்து,
தானம் செய்கிறேன்!
'அம்மா உயிர்பெறட்டும்!'
'நீங்க நல்லா இருக்கணும்!'
ஏழுவயது சிறுமி
வரம் கொடுக்கிறாள்.
என் நாள்
பூரணமடைகிறது!
3 comments:
அவர்கள் வாழ்வு மாறி சிறக்க வேண்டும்...
தவமிருப்பவளே வரம் தரும் அற்புதம்
மிகவும் ரசித்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஒற்றைப்பின்னலில்
புஷ்பம் தொங்குகிறது..
மற்றப்பின்னலில்
கஷ்டம் தொங்குகிறது..
தானம் கொடுப்பது வேறு.
பிச்சை கேட்பது வேறு..
கஸ்டத்தையும் அழகாக்குறீர்கள், பிச்சையையும் வேறாக்குகின்றீர்கள். நல்ல வரிகள்.
Post a Comment