என்றோ ஓர்நாள்
உன்னை காண்பேன்!
அந்த அழகிய தேவதை
உன்னில் மறைந்துபோய் இருக்கும்.
திருமணத்தாலான முதுமை
உன் முகத்தில் இழையோடியிருக்கும்.
நீ என்னை பார்க்க விரும்புவாய்.
கணவன் மேலான கண்ணியம்
அதை தடுக்கும்.
என் சுகம் அறிய எத்தனிப்பாய்!
அந்த வியாபித்த ஆசையையும் - உன்
கையிலிருக்கும் குழந்தை தடுத்து நிறுத்தும்.
அந்த கணம்,
தலையை மண்நோக்கி தொங்கவிட்டு - நான்
விழுந்து விழுந்து உன்னை காதல் செய்த
அந்த கணங்களை மீட்டிப்பார்ப்பாய்..
உனக்கோ வேறு வழியில்லை - அங்கே
பிரமாதமாய் என்னை தெரியாததுபோல நடித்துக்கொண்டிருப்பாய்..
அப்பொழுது,
நான் எனக்குள் சொல்லி நகர்வேன்,
"இப்பவும் உன்னைத்தானடி நேசிக்கிறேன் லூசே!"
3 comments:
அடடா...! அருமை...
வாழ்த்துக்கள்...
அப்ப உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லியான்னு சொல்லலியே!
கல்யாணமாகி மகளுக்கு காதலி பெயரை வைக்கிறதுதானே உண்மைக் காதலுக்கு மரியாதை ?
Post a Comment