Tuesday, December 10, 2013

எங்கள் தாய்களின் நம்பிக்கை.


உன்னை
பெற்றெடுப்பதில் பட்ட துன்பம்
பூச்சியமாய் போனது
உன்னை வளர்த்தெடுப்பதில்
நான் படும் கஷ்டம்!

உன்னை வயிற்றில் கொடுத்து
காணாமல் போனவன்
உன் தகப்பன்.

இன்றுவரை - அவன் பற்றி
செய்தியில்லை.
உன்னை வளர்க்க - எனக்கு இங்கோ
நாதியில்லை.

மற்றவரிடம்
கையேந்தி
உன்னை வளர்க்கவும்
எனக்கு இஷ்டமில்லை...

நீ வளரும் வரை
நான் சம்பாதித்து தேய்கிறேன்.
நான்
இறந்த பின்னாவது
உன் - தந்தை திரும்பி வந்தால்
என் கடமையை
சரியாய் செய்து மடிந்தேன் என சொல்.
எனது கல்லறையில்
கண்ணீரோடும் நன்றியோடும்
ஒரு மலர்வளையம் வைத்துப்போகட்டும்!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தளராக தன்னம்பிக்கை...

k jamunakavi said...

தாய்க்கு தனி நிகர் இந்த உலகில்
யாருமே இல்லை ..........
வரிகளில் தன்னம்பிக்கை அதுவே
தாயிலும்

Popular Posts