Thursday, May 30, 2013

என்ன பொண்ணுடா!

வணக்கம் நண்பர்ஸ்... நலமா? இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக  எழுதித் தொலைக்கவேண்டும்  என்று  எண்ணிக்கொண்டிருந்த  பதிவு  இது. அது  என்ன  அப்பிடி  ஒரு  முக்கியம்? அப்பிடி  ஏதாச்சும்  அறிவியல், உளவியல், புவியியல், உயிரியல்  சம்மந்தமா  இருக்குமோ...... அப்பிடீன்னு எல்லாம் நீங்க ஜோசிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.

மாறாக, இது நஸ்ரியா நசீம் என்கின்ற ஒரு அக்காவைப் பத்தியது! இந்த அக்கா லேசுப்பட்ட அக்கா இல்லேங்க.. கொஞ்ச நாளேக்க இங்காலப்பக்கம் வந்து  நிறைய அப்பாவி இளைஞர்களிண்ட நித்திரைய தொலைச்சவங்க. ஹன்சிகா, கஜல், சமந்தா  என்றெல்லாம்  வீணிவடிய திரிஞ்ச நம்ம பசங்க இந்த அக்காவ பாத்து 'யம்மாடினு' வாய பொளக்குற அளவுக்கு விஷயம் இருக்குங்க அவட்ட..


சரி விடயத்திற்கு வருவோம் (கொஞ்சம் சீரியஸா பேச போறாராமா...). காலா காலமாய் தென் இந்திய சினிமாவை மட்டுமல்ல தென் இந்தியாவையே கலக்கும் அழகு எப்பொழுதும் கேரளாப் பக்கம் இருந்தே வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது அந்தப் பக்கம் இருந்து இந்தப்பக்கம் வந்து ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருப்பவர் இந்த நஸ்ரியா.. இன்னும் பலரால் சிறப்பாக அறியப்படாத நஸ்ரியா 'நேரம்' என்கின்ற முதல் தமிழ் படத்தில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்போதைக்கு  இன்னும்  மூன்று  தமிழ்  படங்களில் (தனுஷுடன்  ஒரு  படமும்  அஜய்  உடன்  ஒரு  படமும். நடித்துக்கொண்டிருப்பதாக  சொல்லப்படுகிறது.அழகிய நஸ்ரியா ஒரு நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொலைகாட்சி நிகழ்ச்சி  தொகுப்பாளரும்  கூட. நஸ்ரியா  என்னும்  ஒரு  அழகிய தேவதையை அதிகமான இளைஞர்களின் கண்ணில் படவைத்த பெருமை 'Sony Music Entertainment' யே சாரும். காரணம் யூவ் எனப்படுகின்ற 'Sony Music Entertainment' இன் ஆல்பம் வெளியாகி நஸ்ரியாவின் அழகை இன்னும் அழகாய் காட்டியது. இது youtube இல் 2.3 மில்லியன் பார்வையிடல்களைப் பெற்றிருக்கிறது. அந்த  பாடல்  ஒன்றுதான்  நஸ்ரியாவை  ஒரு  கனவுக் கன்னி என்கின்ற ஸ்தானத்துக்கு கொண்டுபோய் விட்டது எனலாம்.. கண் சிமிட்டாமல் பார்த்திருக்கக் கூடிய அந்த பாடல் இவராலேயே ஹிட் ஆனது எனலாம்.

இதோ அந்த பாடல்.


இந்த  பாடல்  பற்றி  நான்  ஏற்கனவே  எழுதிய  பதிவை  படிக்க: இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01

அண்மையில், சிவகார்த்திகேயன்  முகப்புத்தகத்தில்  நஸ்ரியா இருக்கிறார் என்கின்ற  செய்தியை  தனது  முகப்புத்தகத்தில்  பதிந்திருந்தார். இது  நஸ்ரியா  மீதான  ரசிகர்களின்  எண்ணிக்கையை சட்டென  அதிகரிக்க  முடிந்தது. அதன்  பின்னர், நஸ்ரியாவின் புகைப்படங்கள் முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாய் உலா வர ஆரம்பித்தன.என்ன  அழகுடா? என  பலரை  ஆவெண்ட வைத்த நஸ்ரியா இன்னும்  நிறைய ஆண்களின் நித்திரையை குழப்பாமல் விடப்போவது இல்லை. தமிழில் நல்லா வருவாம்மா நீயி.அழகோ அழகுனா இவதாண்ட மச்சான் என்று நஸ்ரியாவின் படத்தையே பார்த்துக்கொண்டு வீணி வடிக்கும் எனது நண்பனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். (சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கா நஸ்ரியா...)


Wednesday, May 15, 2013

செம காமடி செம காமடி... ஒரு போட்டோ சூட்!

புகைப்படக் கலை என்பது எப்பொழுதுமே ஒரு சுவாரஸ்யமான விடயம். இதை தொழிலாக செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள். அவர்களது தொழில் தினம் தினம் சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருக்கும். மனம் எப்பொழுதெல்லாம் ஏதோவொரு நெருடலில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் எனது வேலை, புகைப்படம் பிடிப்பது, சுவாரஸ்யமான புகைப்படங்களை  தேடி  தேடி  பார்ப்பது, கவிதை  எழுதுவது, சிவகார்த்திகேயனுடைய நகைச்சுவைகளை பார்த்து வாய்விட்டு சிரிப்பது என பட்டியல் நீண்டது.

புகைப்படம்  என்பது  மிகவும்  நுணுக்கம்  நிறைந்த  ஒரு கலை. சரியான நேரத்தில் இயற்கையாக நடப்பவற்றை இயல்பான உணர்வோடு படம் பிடிப்பது என்பது புகைப்படக் கலையின் உச்சம். இவ்வாறான படங்களை நான்  மட்டும்  அல்ல  நீங்களும்  நிர்ச்சயமாய்  ரசிப்பீர்கள். அவ்வாறான சரியான  டைமிங்கோடு  (timing) எடுக்கப்பட்ட  சில  புகைப்படங்கள் எனது கையில் சிக்கிய பொழுது நான் மிகவும் சிரித்து சிரித்து பார்த்து ரசிக்க முடிந்தது. அவற்றில் கொஞ்சத்தை இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் ரசியுங்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.


இது சூப்பர் பாஸ்..

இப்புடித்தான் பல்டி அடிப்பானுங்களோ...


தம்பி நீ பாஸு! ஒண்ட வாயி பெருசுதான்!! 

ஹா ஹா... எப்படா சத்தி எடுப்பானுண்டு இருந்திருப்பான் போல இந்த போட்டோ கிராப்பர்!

இம்ம்புட்டு பெருசா... கையீ...

இது பஞ்சு!! நல்லா வருவா அக்கா நீயி!

நல்லா பறக்குறாரு இவரு... ஐய்..

வானத்தில கொம்பு!!

யோவ்வ்... ஒரு பெரிய மனுஷன் செய்யிற வேலையாயா இது! நன்னாரிப் பயலே!

நோ கொமண்ட்ஸ் ப்ளீஸ்... எப்புடியெல்லாம் பிளானு பண்ணுறானுங்க!

ஐயோ பாவம்....

ஓடு தம்பி ஓடு.. முயற்சி திருவினையாக்கும்!

ஆம்ஸ்ட்ராங் என்னடா ஆம்ஸ்ட்ராங்... நாங்களும் வைப்பம்ல கால! 

இம்புட்டு அழகு!!!

சாரி தம்பி...

அட அழகு குட்டி...

என்னத்த சொல்ல... குட் பெபோமன்சு...

வட போச்சே!

Oooooops!!

அய்....

ஹையோ ஹையோ.....

Friday, May 10, 2013

அந்த ஐந்து நிமிடம்!


அது
விரக்தி சப்பித்துப்பிய
பேய்கள் அற்ற சுடுகாடு!

காற்சட்டையும் வெள்ளை
மேற்சட்டையும் ஓட்டை
முதுகு விரிய நடந்தவன்
நிமிர்த்தி வைத்த மண்புழுவாய்
ஒட்டி ஒல்லியாய்...

மிருகக்காட்சி சாலைக்குள்
இலகுவாய் புகுந்த எனக்கு
இந்த
சிறைச்சாலைக்குள்
அத்தனை தடுப்புக்கள்..

ஐந்து ஆண்டுகள்
தன்னோடு மட்டும்
பேசிக்கொள்ளும்
அவனோடு பேச
'ஐந்தே நிமிடம்'!
அங்கு,
செத்துப்போன
மனசாட்சியும் மனிதாபிமானமும்
எனக்கு
கொடுத்த சுதந்திரம்!

'நண்பா' தவிர
என்வாயில் வார்த்தைகள் இல்லை.
'ம்ம்ம்' தவிர
அவன்பேச சக்தியும் இல்லை.
எமக்கிடையிலிருந்த
கம்பி வலையில்
சிக்கி சீழ் வடித்துக்கொண்டிருந்தது 
எம் நட்பு!

நான்கு நிமிடம்!
கண்நீரைத்தவிர
அவனிடம் - நான்
எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது!
ஆசையாய்
'நண்பா' என ஒரு வார்த்தைகூட...

அதையும்
கண்ணீராலேயே கழுவி
அவன்
கைகளை பற்றியிருந்த
எனது கைகளில்
சொட்டு சொட்டாய் கொட்டிவிட்டான்!

ஐந்து நிமிடம்!
விலக மனம் இல்லை
அகலவும் முடியவில்லை..
காவலாளி போ சொல்லும்வரை
அவன்
கண்ணீரை நிறுத்த முடியவில்லை.
இறுதியில்
ஒரே வார்த்தை!
"நண்பா,
என்னை
துரத்தி துரத்தி
இயக்கத்திற்கு பிடித்தாரே
அந்த அண்ணர் - அவரிடம்
என்னை வெளியில் எடுக்க
உதவி கேட்டுப்பார்..
அவரால் முடியும்..!"


நம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்!

வணக்கம்  மக்கள்ஸ். இன்று  ஒரு  குஷியான,  சுவாரசியமான  ஏதாவது ஒன்றை  பற்றி  பதிவிடலாம்  என்றால், குஷிக்கும்  சுவாரசியத்திற்கும் குறைவே  இல்லாத  நாடு  என்றால்  அது  நம்ம  இந்தியாதான். ஆகவே கொஞ்சம் இந்திய திருநாடு பக்கம் சென்று வரலாம், இல்லை உங்களையும் அழைத்துப் போகலாம் என்றிருக்கிறேன்.

சில விடயங்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலே பல வெளிப்பாடுகளை  நமது  முகத்தில்  காட்டிவிடுகிறோம். சில  படங்களை பார்த்தால்  வாய்  பிளக்கிறது, சில  படங்களைப்  பார்த்தால் புருவம் உயர்கிறது, சில படங்களைப் பார்த்தால் சிரிப்பு வந்து விடுகிறது, இன்னும் சில படங்களைப் பார்த்தால் கண்கள் ஈரமாகி விடுகிறது, வேறு சில படங்களைப் பார்த்தால் 'சீ' என்று வார்த்தை வந்து விடுகிறது. அப்படியிருக்க,  இன்று  கொஞ்சம்  புகைப்படங்களை  கொண்டு வந்திருக்கிறேன்  உங்களுக்காக. இவை  அனைத்தும்  இந்தியாவில் எடுக்கப்பட்டவை. இவற்றை  பார்க்கும்  பொழுது  உங்களுக்கு  என்ன வெளிப்பாடு வருகிறது?

இப்படியான இப்படங்களில் இருக்கும் விடயங்களை ஒத்த விடயங்களை இந்தியாவில் மட்டுமே காண முடியும் என்று எனது நண்பன் சொன்னபோது சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும், நான் இரசித்து இரசித்து சிரித்து பார்த்த புகைப்படங்கள் இவை.
மனுசன்யா நீயி!!!!!!!
 

ரூம் போட்டு ஜோசிப்பானுன்களோ??


அவ்வ்வ்வ்வ்வ்..........


அட சோடாப் போத்தலுக்கு பொறந்தவனே!.


யாருக்கிட்ட!! எங்க வண்டிலையும் இருக்கில எயார் பேக்கு!


அட பொறம்போக்கு மனுசா... நீ போர்க்கும் போதே இப்பிடியா??


எவண்டா அவன் இத அக்க்சிடண்டு எண்டு சொனன்வன்!! ஓட்டோவில எட்டு போட்டிருக்கியா?? இதுதாம்லே!!


இவன மாறி பத்து பேரு வேணும்யா நாட்டுக்கு!!


அட பிக்காளிப் பயல்களே, porn ல எப்பிடியா நடக்கும் அக்சிடண்டு???


நல்லா வருவே தம்பி நீயி!


நம்மள விட மோசமான வீக்கா இருப்பாய்ங்களோ இங்கிலீசில!!


ஆக்கள புடிச்சு செக்கு பண்ணுங்க சார் செக்கு பண்ணுங்க!!!


ஆமா அப்பிடியே ஒரு டையும் கட்டிவிட வேண்டியது!


ஹா ஹா ஹா... ஆரம்பமே இப்புடியா??? ஆனாலும் இந்த தத்துவம் அந்த பயபுள்ளைங்களுக்கு இண்டைக்கு என்கையா கேக்கப் போகுது???


நாய விட மோசமா கடிப்பாய்ங்களோ??


அட வெங்காயங்களா.. நீங்க மனுசங்கையா!!


உங்க கட்சில இடி விழ!


ஹி ஹி ஹி... அண்ணே அடுத்த கலாமு நீங்கதானண்ணே !!!


கோழிப்பண்ணையில இவருதான் நாட்டாமையா இருந்திருப்பாரோ??


யாருக்கிட்ட... டங்குவார அறுத்துடுவன் ஆமா!!


புத்திசாலிக் குடும்பம்!


சத்தியமா ஒன்னலதான்யா முடியும்! ஒத்துக்கிறன்!


அட தெய்வமே! என்னா மூளை... என்னா ப்ளானிங்!! ஸ்ஸப்பா...


 ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு புது புது விசயங்கள உங்களுக்கு காட்டி தந்திருக்கேன்... நீங்கள்  முயற்சி  பண்ணி  ஏதாச்சும்  நடந்தால் அதுக்கு சங்கம் பொறுப்பில்லை. ஆமா! 

Popular Posts