கவிதைகளால் கிடைத்த சந்தோசங்களை விட பாடல் அதிகம் கொடுக்கிறது. எனது முதல் பாடல். சில மாதங்களிற்கு முன் ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதும்படி அத்திரைப்படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளரும் என்னைக் கேட்ட பொழுது அவர்கள் என்னை கலாய்க்கிறார்களா என முதலில் தோன்றினாலும் பின்னர் அது சீரியஸ் எனப் புரிந்தது. இயக்குனர் சந்தர்ப்பத்தை சொன்னார். நண்பர்களாக இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த பாடலோடு காதலர்கள் ஆகிறார்கள். இதுதான் அந்த காட்சியின் சுருக்கம். ம்ம்ம்ம்... நல்லாத்தான் இருந்தது காட்சி. பின்னர் இசையமைப்பாளர் மெட்டை அனுப்பியிருந்தார். மெட்டை கேட்ட பொழுது அசந்து போனேன்.. அவ்வளவு அழகான ஒரு மெலடி. இந்திய இசைக்கு இணையாக. பாடல் வரிகளை மிகவும் கவனமாக எழுதியாகவேண்டும் என்ற பொறுப்பு இன்னும் கூடியது என்னுள்.
சரி, விடயத்திற்கு வருவோம்.. இந்தப்பாடல் இப்பொழுது வெளியிடப்பட்டாயிற்று. நீங்களும் கேளுங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள். இது எனது முதல் பாடல்... எனவே, கேட்க சகிக்காவிட்டாலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.
- திரைப்படம் : சக்கரம்
- இயக்குனர் : சமிந்தன்
- இசை : பிரநீவ்
- பாடல் வரிகள் : அமல்ராஜ் (அடியேன்..)
பாடல் வரிகள்:
காற்றிலே மிதக்கிறேன் நானே
கவிதையாய் மலர்ந்துபோனேனே
கனவால் புது உலகமும் வந்ததா.
நினைவோடு எரிகிறேன் நானே
நிறுத்தாமல் பேசிக்கொண்டேனே
நம்மைப் போற்ற நிலவும் இல்லையோ..
எரிந்திடும் இந்த பூவைப்பார் புரியும்
உள்தூங்கும் உறவிது என்னவோ
எனக்குள்ளே பல மாற்றங்கள் நிகழும்
நீபார்த்தால் ஓடிப்போய் மறையும்
தினம்மாற திகதியும்மாற வாழ்க்கை வாழ்க்கை இனிக்குமே..
சரணம்
உன் விழியில் விழுந்தேனே
என் உலகை தொலைத்தேனே
உன் உறவை பிரிந்தாலே
உடனே நான் மரிப்பேனே
தனிமையில் சிரிக்கிறேன் தோழா
உன்னிடம் நான் மரிக்கிறேன் போடா
முடிவில்லா சுகங்கள் காதல்தான்..
உனக்குள்ளே காதலும் பூக்க
உடைந்ததே தோழமை மெல்ல
நமக்குள்ளே கார்த்திகை மலர
காதல் காதல் துளிர்க்குதே..
1 comment:
வாழ்த்துக்கள் அன்பரே பாடல் நன்று
Post a Comment