யாழ். இலக்கியகுவிய இணைய கவியரங்கிற்காய் எழுதிய கவிதை!
காதல் - அது
ஈனப்பிறவியின்
ஊன்தின்னும் சாத்தான்!
மோக பிராயத்தின்
ஓலமிடும் ஒப்பாரி!
சொந்தங்கள்
காறித்துப்பும் எச்சில்!
இது
பெரியவர்களின் அறிவுரை!
காதல்...
அம்மா அப்பாவுக்கோ - அது
கௌரவ நரகத்தின் திறவுகோல்!
அண்ணனுக்கோ
இது ஒரு அநியாயம்!
அக்காவுக்கோ
இதுவொரு சனியன்!
பார்ப்பவர்களுக்கு - காதல் ஒரு
நாகரிக தெரு நாட்டியம்..
ஆனாலும்
அனுபவிப்பவர்களுக்கோ - அது
வாழ்க்கை சொப்பனத்தின் அங்காடி!!
கனவுகளுக்குள் கட்டிப்புரளும்
இந்த - காரூண்ய காதலை
இளமையின் வேகத்தை
இதயத்தின் தாகத்தை - நாம்
யார்க்கெடுத்துரைப்போம்?
எப்படியெடுத்துரைப்போம்?
காதல் - அது
ஈனப்பிறவியின்
ஊன்தின்னும் சாத்தான்!
மோக பிராயத்தின்
ஓலமிடும் ஒப்பாரி!
சொந்தங்கள்
காறித்துப்பும் எச்சில்!
இது
பெரியவர்களின் அறிவுரை!
காதல்...
அம்மா அப்பாவுக்கோ - அது
கௌரவ நரகத்தின் திறவுகோல்!
அண்ணனுக்கோ
இது ஒரு அநியாயம்!
அக்காவுக்கோ
இதுவொரு சனியன்!
பார்ப்பவர்களுக்கு - காதல் ஒரு
நாகரிக தெரு நாட்டியம்..
ஆனாலும்
அனுபவிப்பவர்களுக்கோ - அது
வாழ்க்கை சொப்பனத்தின் அங்காடி!!
கனவுகளுக்குள் கட்டிப்புரளும்
இந்த - காரூண்ய காதலை
இளமையின் வேகத்தை
இதயத்தின் தாகத்தை - நாம்
யார்க்கெடுத்துரைப்போம்?
எப்படியெடுத்துரைப்போம்?
1 comment:
இதன் விடை காதல் பிராயத்தில் யாருக்குமே தெரிவதில்லை. அந்த பிராயத்தை தாண்டியதும் அவசியம் ஏற்படுவதில்லை. அருமையான கவிதை வரிகள்.
Post a Comment