Friday, December 27, 2013

ஐ லவ் யூ..!!

வணக்கம் நண்பர்களே. இந்த வருடத்தின் கடைசி பதிவு என நினைக்கிறேன். இன்று மாலை நீண்ட தூக்கத்தின் பின்னரான சோம்பேறி பொழுதுகளில் வழமைபோலவே மனம் முகப்புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் குஷியாக உலா வரலாம் என்றால் ஒரு புது பதிவிட  வேண்டும். அதனால் இந்த கீழ் காணும் பதிவை இட்டேன். கிளைமாக்ஸ் செம விறு விருப்பாய் போய் மிகப்பெரிய சண்டையில் முடிந்தது.

யாருக்கு எத்தனை தடவை எங்கு சொன்னாலும் திகட்டாத சலிக்காத ஒரே வார்த்தை "ஐ லவ் யூ". அவ்வளவு ரொமாண்டிக், அவ்வளவு பவர்.
Do not miss the chance to say "ஐ லவ் யூ".
பட் யாருகிட்டவும் உத வாங்கினா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல.

இதுதான் அந்த ஸ்டேடஸ். இதன் அர்த்தம், அல்லது புரிந்துக்கொள்தல் அவ்வளவு கடினமானதாக இருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. இருந்தும் பலர் காண்டு காண்டு என கமெண்டில் வாங்கி எடுத்திருக்கிறார்கள். ஒருவர் சொல்கிறார் அதெப்படி இந்த வார்த்தைய எல்லாருக்கும் சொல்றது? ஒருதர  விட்டு எல்லாருக்கும் சொன்னா நீங்க ஒழுக்கம் சரியில்லாதவரு என்ற ரேஞ்சுக்கு நம்மள கொண்டுபோயிருந்தாங்க. இன்னும் ஒருத்தர் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கும் மட்டும் இந்த வார்த்தைகள சொல்லுங்க. அப்பிடீன்னு அட்வைஸ். ப்பா.. இதுக்கெல்லாமா விளக்கம் கொடுக்க முடியும்.

முதலாவது, நான் என்ன சொல்ல வாறேன் என்றத சரியாய் புரிஞ்சுக்கல இந்த இவர்கள். இரெண்டாவது ஆங்கிலத்தில் "ஐ லவ் யூ" என்கின்ற சொல்லின் சரியான அர்த்தங்களையும் அதை எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்கின்ற விடயத்தையும் சரியாக தெரியாதவர்கள். அதாவது நம்ம ஊரில காதலிக்கும் ஒரு பையனும் பொண்ணும் தங்களுக்குள் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு அந்தரங்கமான வார்த்தைகளாக இதை விளங்கி வைத்திருக்கிறார்கள். படித்தவர்கள் உட்பட. உண்மையில் அது மட்டுமல்ல இந்த வார்த்தைகளின் உபயோகம், நாம் யார் யாரை நேசிக்கிறோமோ, விரும்புகிறோமோ, அன்பு செய்கிறோமோ அவர்களுக்கெல்லாம் இதை தாராளமாக சொல்ல முடியும். அது நமது பெற்றோர்களோ, சகோதரர்களோ, பிள்ளைகளோ, நண்பர்களோ அல்லது மனைவியோ என யாராகவும் இருக்கலாம். அதாவது உங்களை நான் அன்பு செய்கிறேன் என நம்மை அன்பு செய்பவர்களிடம் சொல்லுவது எவ்வளவு அழகானது. அதை கேர்ள் பிரெண்டுக்கு மட்டும்தான் சொல்ல முடியும் என்றது எவ்வளவு முட்டாள் தகனமான கருத்து. ஆக, இந்த சொற்கள் சொல்லும் இடம், நபரை பொறுத்தே அதன் வீரியம், ரொமாண்டிக், மீனிங் என வேறுபடுகிறது. நான் முடிந்த போதெல்லாம் அம்மாவிடம் சொல்வேன். "ஐ லவ் யூ அம்மா". 

இப்பொழுதெல்லாம் சின்ன சின்ன விடயங்களுக்கு எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரும் ட்றேண்ட் முகப்புத்தகத்தில் அதிகரித்து வருகிறது. சிலர் எதையும் சரியாக புரிந்துகொள்ளாமல் தங்கள் பண்டித தனங்களை காட்டுவதற்கு சண்டையை ஆயுதமாய் எடுக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு மட்டுமே வந்து தொலையும். போங்க, போய் பிள்ளைங்கள படிக்க வைங்க!

ஐ லவ் யூ பிரண்ட்ஸ்! ஐ லவ் யூ பிரெண்ட்ஸ்! ஐ லவ் யூ பிரெண்ட்ஸ்!

Wednesday, December 18, 2013

அந்த அழகிய தேவதை!


என்றோ ஓர்நாள்
உன்னை காண்பேன்!
அந்த அழகிய தேவதை
உன்னில் மறைந்துபோய் இருக்கும்.
திருமணத்தாலான முதுமை
உன் முகத்தில் இழையோடியிருக்கும்.
நீ என்னை பார்க்க விரும்புவாய்.
கணவன் மேலான கண்ணியம்
அதை தடுக்கும்.
என் சுகம் அறிய எத்தனிப்பாய்!
அந்த வியாபித்த ஆசையையும் - உன்
கையிலிருக்கும் குழந்தை தடுத்து நிறுத்தும்.
அந்த கணம்,
தலையை மண்நோக்கி தொங்கவிட்டு - நான்
விழுந்து விழுந்து உன்னை காதல் செய்த
அந்த கணங்களை மீட்டிப்பார்ப்பாய்..
உனக்கோ வேறு வழியில்லை - அங்கே
பிரமாதமாய் என்னை தெரியாததுபோல நடித்துக்கொண்டிருப்பாய்..
அப்பொழுது,
நான் எனக்குள் சொல்லி நகர்வேன்,
"இப்பவும் உன்னைத்தானடி நேசிக்கிறேன் லூசே!"


Tuesday, December 10, 2013

எங்கள் தாய்களின் நம்பிக்கை.


உன்னை
பெற்றெடுப்பதில் பட்ட துன்பம்
பூச்சியமாய் போனது
உன்னை வளர்த்தெடுப்பதில்
நான் படும் கஷ்டம்!

உன்னை வயிற்றில் கொடுத்து
காணாமல் போனவன்
உன் தகப்பன்.

இன்றுவரை - அவன் பற்றி
செய்தியில்லை.
உன்னை வளர்க்க - எனக்கு இங்கோ
நாதியில்லை.

மற்றவரிடம்
கையேந்தி
உன்னை வளர்க்கவும்
எனக்கு இஷ்டமில்லை...

நீ வளரும் வரை
நான் சம்பாதித்து தேய்கிறேன்.
நான்
இறந்த பின்னாவது
உன் - தந்தை திரும்பி வந்தால்
என் கடமையை
சரியாய் செய்து மடிந்தேன் என சொல்.
எனது கல்லறையில்
கண்ணீரோடும் நன்றியோடும்
ஒரு மலர்வளையம் வைத்துப்போகட்டும்!

Sunday, December 8, 2013

உருகிடவா... உருகி விடலாம். உண்மையாகத்தான்!!


தலைக்கு மேல் வேலைகளை வைத்துக்கொண்டு அதே தலையில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு இந்த பாடல்களை கேட்பது ஒன்றும் டைம் வேஸ்ட் என்று தோன்றவில்லை. அது எனது (நமது) கடமை என்றே சொல்லிக்கொள்ள வேண்டும். அண்மையில் இலங்கையில் இருந்து வரும் பல செய்திகள் இந்த பாடல்களைப் பற்றியும் பாடல் வெளியீட்டு விழாக்கள் பற்றியும் பேசிக்கொள்ளும் போது நான் தூரத்தில் இருப்பது கவலைகொடுத்தது. அதோடு பாடல்களை கேட்டுவிடவேண்டும் என்கின்ற ஆர்வமும் புரையேறிக்கொண்டிருந்தது.

சிந்துஜா எனக்கு மிகவும் பரீட்சயமான ஒரு பெண். பல ஆண்டுகளாக பழக்கம். எனக்கு மிகவும் பிடித்த எனது ஆசிரியையின் மகள், நான் அதிகம் விரும்பும் ஒரு வீட்டு சூழலில் பல சமூக பிரச்சனைக்களுக்கு மத்தியில் வளர்ந்த பிள்ளை, நல்லதொரு தங்கை என பல வகை காரணங்கள் எனக்கு சிந்துவை பரீட்சயமாக்கியவை. இப்பொழுது யாவரும் அறிந்த, புகழ் பெற்ற 'பெண் இசை ஆளுமை' எனக்கு பரீட்சயமானவர் என்பதில் நிற்சயமாக நான் பெருமை கொள்கிறேன், கொள்வேன். இந்த வெற்றிக்கு அவர் கொடுத்திருக்கின்ற விலை, கஷ்டம், துன்பம் என்பனவற்றில் கொஞ்சம் எனக்கும் தெரியும் என்பதால் இதுபற்றிய குறிப்பொன்றை எனது வலைப்பூவில் பதிதல் கட்டாயமாகிப்போனது.


உயர் கல்வியை (இசை சார்ந்த) முடித்துவிட்டு நேரடியாகவே பல திமிங்கலங்கள் உள்ள இந்த துறைக்குள் ஒரு சிறு மீன்குஞ்சாக நுழைவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் என அன்றெல்லாம் நான் எண்ணியதுண்டு. அந்த தைரியம் அவர் தாயாரிடம் இருந்தே வந்திருக்கவேண்டும். அதுவும் இளம் பெண்ணாக தனியவே இந்த நீச்சலில் தாளாமல் வெற்றிகரமாக கரை சேர்தல் எத்தனை கடினமானது? எதையாவது சாதித்தாக வேண்டும் என்கின்ற வெறி ஒன்றே சிந்துவின் கண்களில் அன்றெல்லாம் தெறித்துக் கொண்டிருக்கும். உண்மையில், தனியாளாக இதை எப்படி சாதித்தார் என்பதில் இப்பொழுதும் எனக்கு ஆச்சரியம் கலந்த கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதேபோல, அவர் பணியாற்றிய பலர் மிகவும் சீனியர்கள் (ராஜ் உட்பட). இவற்றை எல்லாம் ஜோசிக்கும் போது சிந்துமேல் அதிகம் அதிகமாய் மரியாதை அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள் சிந்து.

அதேபோல, சிந்து ஒரு பெண் என்கின்ற காரணத்தால் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை அவர் முயற்சிகளை முடக்க பல ஆண்கள் முயற்சித்ததையும் என்னால் இங்கு கூறாமல் இருக்க முடியாது. இது நம் உலக நியதி என எடுத்துக்கொண்டு பயணித்தல் சிந்துவை இந்த உயரத்திற்கு கொண்டுவந்திருக்கலாம்.

பாடல்களை பற்றி அதிகம் பேசுவதற்கு 'பாடல்களை அதிகம் ரசிப்பவன்' என்பதை தாண்டி எனக்கு எந்த தகுதியும் இல்லை. இருந்தாலும் இந்த பாடல்கள் சார்ந்த 'எனது உணர்வுகளை' பதிவிடுதலே சிறந்தது என நினைக்கிறேன். இந்த இசைத்தட்டில் சிந்துவின் இசை துறை சாதனைகள் எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை ஒன்றை தவிர. அது, பாடல் வரிகள். எனக்கு சிந்துவை பாடகியாக, பாடல் அமைப்பாளராக நீண்ட நாட்களாக தெரியும். ஆனால், ஒரு திறமைமிக்க பாடலாசிரியராக நான் அவரை கண்டுகொண்டது இப்பொழுதுதான். பாடல் வரிகள் மிகவும் நேர்த்தியாக போடப்பட்டிருக்கிறது. இசைக்காக வரிகளை முறிக்காமல், இழுக்காமல், வளைக்காமல் சொற் கோர்வைகளை கையாண்டிருப்பது புருவங்களை உயர்த்தவே வைத்தது. சூரியன் வானொலியில் ஒலிபரப்பப்படும் இவர் எழுதி ராஜ் இசையமைத்த நிலைய குறியிசைகளும் இதே உணர்வையே எனக்கு கொடுத்திருந்தது. ஈழத்து இசைத்துறையில் ஒரு அருமையான 'பெண்' பாடலாசிரியர் நம் கண் முன்னாலேயே உருவாகியிருப்பது மகிழ்வளிக்கிறது.

உன்னை பார்க்கும் போது..
சந்துருவின் குரல் பாடலிற்கேற்ற ரொமாண்டிக் மூட்டை கொண்டுவதிருக்கிறது எனலாம். வரிகளும் சூப்பர். பாடலின் தொடக்க இசையும் இன்னும் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருந்திருக்கலாமோ என்று தோணியது. பாடலின் முடிவு கொடுக்கும் திருப்தியை தொடக்க இசை கொடுக்கவில்லை என்று தோன்றுகிறது. இசை கோர்ப்பும் சந்துருவின் குரலை பயன்படுத்தியிருக்கும் விதம் ஒரு முழுமையான காதல் பாடலிற்கான அத்தனை அம்சங்களையும் கொடுத்திருக்கிறது எனலாம். 'சாலை எங்கும் உந்தன் விம்பம், தூங்கவில்லை எந்தன் நெஞ்சம், நீ பேசும் பேச்சை ரசிக்கின்றேன்... உன்னாலே தொலைந்துபோகிறேன், உயிரோடு உறைந்து போகிறேன்... ' இந்த இடம், கண்களை மூடி, தலையசைத்து கேட்க வைக்கிறது..

உருகிடவா...
பிரஷாந்தினி... காதிற்குள் ஒரு சில்மிஷம்.. அடிக்குரல் கூட அவ்வளவு அம்சமாய் காதுகளிற்குள் வந்து விழுகிறது. பாடல் நன்றாக வந்திருக்கிறது. பிரெட்ரிக் சரியாக பிரஷாந்தினியின் குரல் வளையோடு ஒத்துப்போகிறார். 'மெல்லிய ஆடை மேனி மறைக்க மார்புகள் மீது கூந்தல் சரிய...' ப்பா.. இதை சொல்லாவிட்டால் இப்பாடல் பற்றிய எனது குறிப்பு முற்றுப்பெறாது!. எனக்கு பிடித்த பாடல் இது.. மழை நின்ற பின்னும் தூறல் நிற்கவில்லை.. வாயில் முணுமுணுத்தபடி...

மலையோர காற்று...
நீண்ட நாட்களின் பின்னர் சிந்துவின் குரல்.. மன்னாரின் பாடகர்களில் என்னை மிகவும் கவர்ந்த குரல்களில் இது தவிர்கமுடியாதது. மண்ணின் எழில் சொல்லும் விதம் சூப்பர்.. திலினியின் குரல் அழகு.. இடையில் வரும் சகோதர மொழி வரிகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இதுதான் இப்பாடலின் ஹய் லயிட் என்று சொல்வேன். கேட்கும் பொழுது செமையாக இருக்கிறது.. அழகாக இருக்கிறது.. இதை கேட்கும் பொழுது கொஞ்சம் பாத்யா - சந்தோஷ் பாணி நினைவில் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும், இந்த பாடலில் எனக்கு அதிகம் பிடித்த இடம் என்றால் இதுதான் என்று சொல்வேன். இந்த ஐடியாவிற்கு ஒரு சலுட். பட், 'ஜாதி மத பேதங்கள் இல்லை, இனவெறி ஒன்றிங்கு இல்லை...' மொழியும், கலையும், இலக்கியமும் எப்பொழுதும் உண்மை பேசவேண்டும் என எதிர்பார்ப்பவன் நான்! உண்மை சொல்லாவிடினும் இதை தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது... சரி பரவாயில்லை.

தாய்க்கு நிகரேது மானிடா...

ஆரம்பமே 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம்..' சினிமா பாடலை ஜோசிக்க வைத்தாலும் நிறம்ப எதிர்பார்ப்புக்களோடு உள்ளே நுழைய வேண்டியிருந்தது.. காரணம், அம்மா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அத்தோடு இன்னுமொரு காரணமும் இருந்தது. அது இந்த பாடலை பாடியிருப்பவர். சுதர்ஷன்.. எதிர்பார்ப்பு மிக்க ஒரு பாடகர். பாடசாலை காலங்களில் 'மன்னாரின் பாலசுப்ரமணியம்' என இவரை அழைப்பதே எமக்கு சந்தோசம். பாடல் பிரமாதம்! சொல்வதற்கு வேறில்லை. சுதர்ஷனின் குரலிற்கு நான் என்றும் யாசகன். வரிகள் செம! இடையே வரும் சிந்துவின் தாலாட்டு, பாடலின் உணர்விற்கு மெருகேற்றுக்கிறது. மெட்டு அம்மா பாடலிற்கு செமையாய் பொருந்துகிறது. 'பீல்' சரியாக வெளிப்படுகிறது.


உருகிடவா.. உருகிப்போனேன். சிந்துவின் படைப்பு எனக்கு எதிர்பார்ப்பு கடந்த ஆச்சரியம். இன்னும் கொஞ்சம் ராஜை சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாமோ என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தாலும் ஆரம்பம் - இது போதும் பிரமாதம் என்று சொல்வதற்கு.

'சிந்து, வானம் இப்பொழுது உன் அருகில் தான், உன் பறத்தலின் வேகத்தை குறைக்காதே, சீக்கிரம் தொட்டு விடுவாய். எப்பொழுதும் களைகளை பற்றி கவலைப்படாதே, அப்பொழுதுதான் நல்ல விளைச்சலை கொடுக்கமுடியும் உன்னால்.. 'பெண்' என்பது எதற்கும் தடையில்லை, வேகமும் ஆளுமையும் குறையாவிட்டால்! எதற்காகவேனும் உன் தன்னம்பிக்கையை இழந்துவிடாதே.. உயரப்பறத்தலில் தன்னம்பிக்கை ஒரு சிறகு.. வாழ்த்துக்கள்!'


அத்தோடு இந்த இசைத்தொகுப்பில் பணியாற்றிய அத்தனை பாடகர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரிற்கும் எனது வாழ்த்துக்கள்!

Tuesday, October 29, 2013

கண்ணம்மாவும் கபோதியும் - சிறுகதை


'என்னடா ஒரு மாதிரியாய் இருக்கிறாய்.. இன்னும் அந்த சம்பவத்த பத்தியே ஜோசிச்சுக்கிட்டு இருக்கியா??' எண்டு அருகில் இருந்த என் நண்பன் தோளில் தட்டிய போதுதான் மீண்டும் சுயநினைவிற்குள் வர முடிந்தது. வாகனம் வேகமாக முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தது.

அவள் கண்ணம்மா. ஒரு இருபத்து நான்கு வயது இருக்கும் எனது மதிப்பில். அவர்கள் வீட்டை தட்டிய போது கதவை முதலில் ஓடிவந்து திறந்தவளும் அவள்தான். வாய் நிறையப் புன்னகை. கண்களில் ஏதோ ஒரு தேடல் ஆனால் பார்வையில் கொஞ்சம் தடுமாற்றம். என்னையும் நண்பனையும் கண்டதும் அவளுக்குள் உருவான அந்த படபடப்பு அவள் முகத்தில் தெட்டத் தெளிவாய் தெரிந்தது. ஏதோ, ஆண்கள் என்றாலே பிசாசுகள் என்கின்ற அளவிற்கு அவள் கதவை சட்டென சாத்தியத்தில் தெரிந்தது. மீண்டும் அவளது தாய் ஓடிவந்து சாத்திய கதவை திறந்து 'உள்ளே வாருங்க தம்பிகளா..' என அந்த அழகான முல்லைத்தீவு தமிழில் உள்ளே அழைத்தாள். நான், எனது நண்பன், கண்ணம்மா மற்றும் அவள் தாய். ஒரே ஒரு நாற்காலி இருந்தும் அந்த ஒன்றை எடுத்துக் கொடுத்து இருக்கும்படி கேட்டுக்கொண்டாள் அந்த அம்மா. அவள் பார்வை ஒரே நாற்காலியில் எப்படி எம் இருவரையும் அமர வைப்பது என்ற சங்கடத்தில் அங்கும் இங்கும் முட்டிமோதிக்கொண்டது. 'கீழ உக்காரலாம் அம்மா..' என கூறியபடி அவள் அடுத்த கையில் இருந்த ஓலைப்பாயை வாங்கி நாங்களே விரித்து அதன்மேல் அமர்ந்துகொண்டோம்.

பேச்சின் ஆரம்பமே இழப்புக்களில் தொடங்கியது. தொடர்ந்து பல வகையான தலைப்புகளில் பேச்சு போய்கொண்டிருந்தது. முள்ளிவாய்க்காலும் பொக்கனையும் நந்திக்கடலும் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ஏக்கம் என சகல உணர்வு வெளிப்பாடுகளும் அந்த அம்மா முகத்தில் தோன்றி மறைந்துகொண்டிருந்தது. இடைவெளிக்குள் 'தேத்தண்ணி ஊத்தட்டா மகன்?' அம்மாவின் அழைப்பில் ஒரு தூய்மை தெரிந்தது. வேண்டாம் என்று சொல்லி அவள் சந்தோசத்தை கெடுக்க மனமில்லாமல் 'நிற்சயமாக' என எனது வாய் மொழிந்தது. ஐந்து நிமிடம் அவள் அந்த இடத்தில் இல்லை. தேநீர் தயாரித்துக்கொண்டிருக்கிறாள். அந்த ஐந்து நிமிடத்தில் இங்கு நான், நண்பன், கண்ணம்மா. கண்ணம்மாவிடம் ஏதாவது பேசலாம் என முயன்ற ஒவ்வொரு தடவையும் எனக்கும் என் நண்பனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. கண்ணம்மா ஒரு வேளை வாய் பேச முடியாதவளாய் இருக்கலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் அவள் 'கலப்படமற்ற அப்பாவிப் புன்னகை'. அவளுடன் பேசுவதில் தோல்வியே இறுதியானது. அம்மா தேநீரோடு வருகிறாள். 'மகன், அவள் என்னைப்போல பேசமாட்டாள்! அனால் ஊமையும் இல்லை!!' அம்மா சொன்ன இந்த வார்த்தைகள் எங்களுக்கு புரிந்ததாய் இல்லை. எனது விழிகள் மீண்டும் அம்மாவை பார்த்து வெட்டி முட்டி விழிக்க எனக்கு எதுவும் விளங்கவில்லை என்பதை அவள் சுதாகரித்துக்கொண்டாள்.

தேநீர் நாக்கை கொஞ்சம் பதம் பார்த்தது.. சூடு கொஞ்சம் அதிகம். பேச்சு மீண்டும் ஆரம்பமானது. எனது எதிர்பார்ப்போ கண்ணாமா பற்றிய தேடலாகவே இருந்தது. 'கண்ணம்மாவிற்கு என்ன ஆகியிருக்கும்?' இது என் மனம் பூராகவும் வியாபித்து குருதிக்கலன்களை கொஞ்சம் கொஞ்சமாய் நசுக்க ஆரம்பித்தது. தாமதம் வேண்டாம் கேட்டு விடலாம். முடிவெடுத்த நான் 'அம்மா கண்ணம்மா நலமாக இருக்கிறாளா?? இல்லை ஏதும் சுகவீனங்களா??' கேள்வி கொஞ்சம் நேரடியாகவே இறங்கியது. அம்மாவிடமிருந்து பதில் வரும் முன்னமே அந்த வயதாகிய ஓரக் கண்களில் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அழுது அழுது ஓர் இடியை இறக்கினாள் எங்கள் மனதில். 'தம்பி கண்ணம்மா திருமணமாகவில்லை அனால் அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவனுக்கு மூன்று வயதாகிறது.....' என கூறிமுடித்து 'கரன்...' என அழைக்கையில் ஒரு சிறுவன் திடிரென வந்து நின்றான் நடுவில். அவனை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எங்கள் இருவரையும் பார்த்து நிறுத்தாமல் சிரித்துக்கொண்டு அவன் தாய் கண்ணம்மா மடியில் அழகாய் உட்கார்ந்துகொண்டான். அம்மா தொடர்ந்தாள். அவள் இடைவிடாத கண்ணீர் என் கண்களுக்குள்ளும் பாய்ந்தது.

கண்ணம்மா இடம்பெயர்வின் போது தனது தந்தையையும் அண்ணனையும் ஒரே பங்கருக்குள் ஒரே நாளில் இரண்டு செல்களுக்கு பறிகொடுத்திருந்தாள். அந்த அதிர்ச்சியில் இவள் சித்தம் கலங்கி சுயநினைவிளந்தவளாக உளவியல் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி மீண்டும் தனது அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள். இந்த நிலையில் அந்த கொடூரமான நாள் வந்தது. எவனோ ஒருவன் கண்ணம்மா மட்டும் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு போய் சுயமாக எதையும் சிந்திக்க தெரியாத, புத்தி சுயாதீனமற்ற இந்த ஏழை கண்ணம்மாவை புணர்ந்திருக்கிறான். நீண்ட நாட்களின் பின்னர் அவள் கருத்தரித்திருப்பதை கண்டுகொண்ட அவள் தாய் எதுவுமே தெரியாதவளாய், எதுவும் செய்ய முடியாதவளாய் அந்த குழந்தைக்கு பிரசவம் பார்த்து அந்த சிறுவனை வெளியில் எடுத்திருக்கிறாள். கரன் பிறந்துவிட்டான் கண்ணம்மாவிற்கு. கரனின் தந்தை அதுதான் அந்த கபோதி யாரென இன்றுவரை கண்ணம்மாவிற்கோ அவள் தாய்க்கோ தெரியவில்லை. இன்னும் கண்ணம்மாவிற்கு என்ன நடந்தது என்பதில் தெளிவில்லை. பாவம் அவள்.

எனது கண்கள் முழுவதும் நனைந்தது. அப்பொழுதும் கூட எதுவுமே தெரியாதவர்களாய் கண்ணம்மாவும் கரனும் என்னைப்பார்த்து புன்னகைக்கிறார்கள். நான் புன்னகைப்பதா இல்லை அழுவதா? என்ன கொடுமை கடவுளே என கொஞ்சம் கடிந்துகொண்டேன். அம்மாவை சமாதானம் செய்வதில் நண்பன் மும்முரமாக இருந்தான். நானோ கரனோடு பேசுவதிலும் அவன்கூட விளையாடுவதிலும் குறியாய் இருந்தேன். விடைபெறும் நேரம் நெருங்க, எனக்கோ அந்த இடத்தை விலகுவதில் விருப்பம் இருக்கவில்லை. அங்கு இருந்து தொடர்ந்து பேசவும் வார்த்தைகளில்லை. கண்ணம்மாவில் இப்பொழுது கொஞ்சம் முன்னேற்றம் தெரிவதாக அம்மா சொன்னாள். எனக்கோ அவள் இப்படியே இருந்துவிடுவதுதான் அவளுக்கு நல்லது என தோன்றியது. இல்லையேல், அவள் குணமடைந்தால் நம் சமூகம் மீண்டும் அவளை இந்த நிலைக்கு கொண்டுவந்துதான் சேர்க்கும். அந்த வீடு அவளுக்கு சிறைதான். ஆனாலும் வெளியில் வந்தால் அவளுக்கு இரண்டு பெயர்களை சூட்டும் நம் சமூகம். ஒன்று லூசு! இன்னொன்று 'நடத்தைகெட்டவள்'. கடவுளே இவள் இப்படியே இருந்துவிடட்டும். குணமடைய வேண்டாம். இது எனது பிரார்த்தனை.


குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவம். பெயர்கள் அல்ல.Thursday, October 24, 2013

என்ன வகையான பொண்ணுங்கள சார் எதிர்பாக்கிறீங்க??

வணக்கம் நண்பர்களே, கொஞ்சம் இடைவெளியின் பின்னர் இந்தப்பக்கம் வருகிறேன். இப்பொழுதெல்லாம் எழுதுவது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது. வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் போடும் சண்டையிலே சகல நேரமும் தீர்ந்து போகிறது. இருந்தும், அடிக்கடி எதையாவது எழுதியாகவேண்டும் என்பது நேரம் கடந்த அவா.

தாய் நாட்டை விட்டு கொஞ்சம் வெளியில் வந்து இப்பொழுது இந்த புது இடத்திற்கு பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது வாழ்க்கை (இங்கு வந்த புதிதில், அம்மாவை நினைத்து கண்கலங்கியது அது வேறு விடயம்... உஷ்ஷ்..). அண்மையில் இந்த நாட்டைச்சேர்ந்த ஒரு பெண் நண்பர் கேட்ட கேள்வி ஒன்று என்னை கொஞ்சம் சஞ்சலப்படுத்தியது. இன்னும்தான்.

'உங்க நாட்டில் எவ்வகையான பெண்களை ஆண்களுக்கு அதிகம் பிடிக்கிறது?'


இதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. இவ்வாறான கேள்விகளுக்கு நான் விடை சொல்லி பழக்கப்பட்டவன் அல்ல (இதைப்பற்றி அதிகம் விவரணம் சொல்லி ஜமாய்க்க நான் பெரும் கவிஞனும் இல்ல...) அப்பொழுது அந்த நண்பருக்கு ஏதோ சொல்லி சமாளித்த ஞாபகம். ஆனாலும், அதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்தால்தான் என்ன என்று ஒரு பிரயத்தனம் (நாம வேற கலியாண வயசில இருக்கிறமா... கொஞ்சம் யூஸ்புல் ஆகுமெண்டுதான்..)

ஆமா, எவ்வகையான பெண்களை ஆண்களுக்கு அதிகம் பிடிக்கிறது?

ஆண்களின் வகைப்படுத்தலில் பல ரகமான பெண்கள் இருக்கிறார்கள். அழகான அம்சமான, அழகான அம்சம் இல்லாத, அழகற்ற அம்சமான என தோற்றத்தை வைத்து நம்ம பசங்க வகைப்படுத்தி விடுகிறார்கள். அதென்ன அழகு? அதென்ன அம்சம்? அழகு என்பது அதிகமாக முகத்தை வைத்தே சொல்லுகிறார்கள். வெள்ளை கறுப்பு மட்டும் இந்த அழகை தீர்மானிப்பவை அல்ல. அதையும்தாண்டி முகவெட்டு, முக அமைப்பு, முகத்தின் வெளிப்பாடு, சிரிப்பு விதம் என ஏராளமாக சொல்லப்படுகிறது. அதை விடுத்து, அதிகமான அல்லது பெரும்பாலான ஆண்கள் அழகான, அம்சமான பிகருகளையே சாரி பெண்களையே விரும்புகிறார்கள். அம்சம் என்றால் என்ன என்று கேட்காதீர்கள். சுருங்க சொல்வதென்றால் அது அது அங்கு அங்கு அப்படி அப்படியே இருப்பதுதான் அம்சம்.

ஆண்கள் அழகான பெண்களை அதிகம் விரும்ப காரணம் என்ன? பெண்கள் அழகாய் இருப்பதே ஆண்களை கவர்ந்து கொள்ளத்தான் என்பது  யாவரும் அறிந்த விலங்கியல் கொள்கை. அதிகமான ஆண்கள் தங்கள் மனைவி அழகாய் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சில அடிப்படை காரணங்களை கொண்டது. ஒவ்வொரு ஆணும் தனது மனைவி அழகாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அதிகம் மூன்றாம் நபரிற்க்காகவே. தன்னோடு அழைத்துச்செல்லும் மனைவி மற்றவர்கள் மத்தியில் அழகாய் அம்சமாய் இருக்க வேண்டும் என்பதே அடிப்படையில் ஆண்களின் நோக்கம். இரண்டாவது அழகான பெண்களுடனேயே உடலுறவு வைத்துக்கொள்ள அதிகமான ஆண்கள் பிரியப்படுகிறார்கள். இது உளவியல் ரீதியாக சொல்லப்படுகின்ற உண்மை. இயற்கையில் அழகிலேயே அதிகமான ஈர்ப்பு இருக்கிறது. இது தெரிந்தே (?) அல்லது இதன் அடிப்படையே பெண்கள் தங்களை அழகாக்கிக் கொள்வதில் அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

சரி, நேரடியாகப் பேசினால், திருமணத்தின் போது சில ஆண்கள் பெண்களின் அழகை எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் மேலே சொல்லப்பட்ட எதிர்பார்ப்புக்களைக் கொண்டவர்கள். இன்னும் சில ஆண்கள் அழகு கொஞ்சம் குறைவாய் இருந்தாலும் அம்சமாய் இருக்க வேண்டும் (அதாவது உடல் தோற்றம், அங்கங்கள் அழகாய், கவர்ச்சியாய்..) என எதிர்பார்ப்பவர்கள். இவர்கள் அதிகமாக பாலுறவில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்னும் சில ஆண்கள், அழகோ, அம்சமோ இல்லாவிடினும் நன்றாக படித்தவராகவும் நல்ல உத்தியோகத்தில் இருப்பவராகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். இவர்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு பட்டதாரி + அரசாங்க உத்தியோகம். இந்த ஆண்கள், அதிகமாக ஊருக்காக வாழ்பவர்கள். தங்கள் சுய மரியாதையை தங்கள் மனைவி மூலம் கூட்டிக்கொள்ள எத்தனிப்பவர்கள். சமூக போலி அந்தஸ்துக்களால் பூரிப்படைபவர்கள். இன்னுமொரு வகை ஆண்கள், எதுவும் வேண்டாம் 'அதிகம்' சீதனம் கொடுத்தால் போதும் என எதிர்பார்ப்பவர்கள். இவர்கள் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் அதிகம் சுயநல பாட்டிகள். தான் என வாழ்பவர்கள். பணத்தின் மீது அதிகம் நாட்டம் கொண்டவர்கள்.


வேறு சில ஆண்கள், குடும்பப்பாங்கான பெண் வேண்டும் என ஊரூராய் தேடுதல் நடத்துபவர்கள். கலியாணத் தரகர்களின் பட்டியலில் கூட இப்பொழுதெல்லாம் இந்த ரக பெண்கள் மிச்சம் சொற்பம். இவ்வகை பெண்களை விரும்பும் ஆண்கள் அதிகமாக நீண்ட காலம் பெற்றோருடனும் சகோதரர்களுடனும் வாழ்ந்து பழகியவர்கள். வீடு + பாசம் + கலாச்சாரம் என்பவை இவர்களுக்கு கடவுள்கள். இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பெண்கள் மீது அதிகம் சந்தேகம் கொண்டவர்களும் இவ்வகையான குடும்பப்பாங்கான பெண்களையே தேடுகிறார்கள். இவர்கள் வேலி தாண்ட மாட்டார்கள் என்பது இந்த ஆண்களின் நம்பிக்கை (நல்லா வருவீங்கடா நீங்க!) இறுதியாக, ஒரு வகை ஆண்கள். தங்கள் நிறம், தரம், வசதி, தராதரம், படிப்பு, உத்தியோகம் இவற்றிற்கு ஏற்றாற்போல் இருக்கும் பெண்களை விரும்புபவர்கள். இவர்கள் பேராசை இல்லாதவர்கள். இருப்பதே நல்லது, போதுமானது, சந்தோசமானது என வாழ்க்கை நடத்துபவர்கள். இயலுமையில் மட்டும் திருப்தி கொள்பவர்கள்.

அப்பாடா, ஒரு வகையாக கேள்விக்கு விடை கண்டுபிடித்தாயிற்று. ஆயினும், அதிகமான காதல்கள் தற்செயலாக நடந்தேறினாலும் பின்னர் ஏற்படும் தகராறுகளின் பின்னணியில் இந்த எதிர்பார்ப்புக்களே நிறைந்திருக்கும். தங்கள் தேவை மேற்கூறியவற்றில் எது என சரியாக தெரிந்துகொண்டு தங்கள் காதலியையோ மனைவியையோ தேடுபவர்களும் இருக்கிறார்கள். நான் இவ்வாறான அதிகம் ஆண்களை பார்த்திருக்கிறேன். இவர்கள் காதல், குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.

எனவே,
ஆண்களே, காதலி, மனைவி தேடலில் முதல் நீங்கள் என்ன ரகம் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான், உங்களுக்கு ஏற்றாற்போல் பிகர்கள் சாரி பெண்கள் கிடைப்பார்கள்.
பெண்களே, ஜாக்கிரதை, எவனாச்சும் வந்து ஆட்டையைப் போடுகையில் அவன் எந்த ரகம், எதை தேடுகிறான் என முதலில் சுதாகரித்துக்கொள்ளுங்கள். தப்பிவிடுவீர்கள். உங்கள் திருமனத்திலும்தான்!

ஸ்ஸப்பா.. செம டயர்ட்.. ஒரு காப்பி பார்சல்... வரட்டா...

ஆமா, நானு இதில எந்த ரகம்??? ....................... அது அதேதான்!!Saturday, October 5, 2013

திருட்டுப்பார்வை


அந்த
கருமை விழிகள்..

என் வெண்படலத்தின் மீது
மாய கோலமிட்ட
முதல் கண்கள்!

திருட்டுத்தனம்
சிம்ம சொப்பனமாய் - அவள்
திருட்டுப்பார்வை.

அவள்
வெட்டி விழிக்கையில்
முட்டித் தெறிக்கும் போதை
என் கண்களில்.

என்
இமைகளுக்கு முட்டுக்கால் கொடுத்து
நிற்க வைத்ததும்
இந்த
ஒற்றை பார்வைக்காகவே!

காற்றில் வழிந்தோடும்
ஒளிக்கீற்றுக்களை பிடித்து
ஒரு மின்மினி செய்து
சொட்டு ஒளியில் - என் கண்கள்
உண்ணா நோன்பு நடத்தியதும்
இந்த
விழிகளை விழுங்கவே!

அந்த பார்வையின்
ஒரே வீச்சு,
ஒன்பதுமுறை செத்தது மூச்சு!

பிடிமானம் இன்றியே
என்
இமைகள் தொங்கியது
அவள்
ஓரப்பார்வையின்
ஒற்றைக்கீற்றில்!

அந்த
கரும் விழிகள்
கடன் கொடுக்கலாம் எனக்கு,
மரித்தலை விற்று
உயிர்த்தலை வாங்குவதற்கு!

Sunday, August 11, 2013

தலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க!


வணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்லது நம்ம மைந்து போலவோ அவ்வளவு திறமை இல்லேங்க.. இது விமர்சனம் இல்லேன்னா அப்புறம் இது என்ன மண்ணாங்கட்டின்னு நீங்க கேக்க முதல், இது தலைவா பற்றிய ஒரு சின்ன அனுபவம். அவ்வளவுதான். (நாங்களும் ஏதாச்சும் எழுதனும்லே..!)

நாங்க எல்லாம் முதல் ஷோ, VIP ஷோ (ஆமா நம்மள அதுக்கு கூப்பிட்டிட்டாலும்..) பாக்கிற மூஞ்சிகள் இல்லேங்க.. ஆனாலும் ஒருவாறு வரும் படங்களை பார்க்க கூடிய அளவிற்கு பார்த்து முடித்திடும் கூட்டம். அந்தவகையில் தற்பொழுது பாரிய எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் திரைக்கு வந்து சக்க போடு போட்டுக்கொண்டிருக்கும் (அப்பிடீன்னு நம்ம நண்பர் போட சொன்னார்..) தலைவா திரைப்படத்தை பார்ப்பதற்கு நேற்று போயிருந்தேன். அது ஒரு மாலை நேர ஷோ. ஆண்கள், பெண்கள், வயது முதிர்ந்தோர், சிறுவர்கள் என திரையரங்கு நிறைந்திருந்த கூட்டம். ரஜினி, விஜய் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையரங்கு நிறைந்திருக்கும் கூட்டத்தோடு பார்த்தால்தான் அதன் உண்மையான கிக்கு கிடைக்கும் என்பது எனக்கு நன்கு தெரிந்ததே.

திரைப்படம் ஆரம்பமானது. எனக்கும் விஜய் என்கின்ற ஒரு நடிகரை பிடிக்கும். அனால் நான் 'எலேய் எங்க தளபதிலே..' என்று மற்றவன் சட்டையை பிடிக்கும் அளவிற்கு அவர் விசிறி கிடையாது.. ஆனால் விஜயின் நடனம், நளினம், சண்டை போன்ற சினிமா இயல்புகள் என்னை கவர்ந்தவை. திரையரங்கில் எனக்கு அடுத்த சீட்டில் இருந்தவர் ஒரு மிகப்பெரிய விஜய் விசிறி. அவருக்கு ஐந்தே வயதுதான் ஆகிறது, வேட்டைக்காரன் மற்றும் துப்பாக்கி பஞ்சுகளை சொல்லி சொல்லி எங்க வீட்டில் எனைவரிற்கும் நெஞ்சில் உதைக்கும் நம்ம அண்ணன் பெற்றெடுத்த புத்திரன். அனால், அவரிற்கு இருந்த ஒரேயொரு பிரச்சனை, 'சித்தப்பா, என்னால இண்டைக்கு விசில் அடிக்க முடியாதே..!' என மிகவும் கவலையாக என்னிடம் அவன் சொன்னபோது நான் 'ஏன் சார்..?' என கேட்க அவர் தனது விரலை நாங்கள் இருந்த வரிக்கு பின்னால் உள்ள வரிசையில் ஒரு சீட்டை நோக்கி காட்டினார். நானும் திரும்பி பார்த்தபோது 'உண்மைதான்' என உணர்ந்துகொண்டேன். அங்கே இவரின் கிளாஸ் டீச்சர் அதுதாங்க நேர்சரி டீச்சர் சிரித்தபடி அமர்ந்திருந்தார். 


தலைவா ஆரம்பமானது, அனைவரும் கதிரைகளின் நுனியில் அமர்ந்திருந்தது போலவே நானும், அண்ணா, தளபதி, அமலா பால், இயக்குனர் விஜயின் விளையாட்டுக்கள், நடனம் போன்றவற்றை எதிர்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முதல் பதினைந்து நிமிடங்கள், பின்னர் விஜய் நடன மேடையில் குதித்ததிலிருந்து இருபது நிமிடங்கள் திரையில் பேசும் எதுவும் காதுகளை தெளிவாக வந்து சேர்ந்ததில்லை. அவ்வளவு சத்தம். அங்கு வந்திருந்தவர்களில் முக்கால் வாசிக்கும் அதிகமானவர்கள் விஜயின் விசிறியாய் இருந்திருப்பார்கள் போலும். அதற்குள்ளும் சிலர் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். இதிலாவது ஏதாவது வித்தியாசமாய் செய்திருப்பாரா விஜய் என்று எதிர்பார்த்து வந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன்.. எனது வாயோ திறந்தது நம்ம சந்தானம் பேசும் பொழுதும், அமலா பால் வந்துபோகும் நேரம் மட்டுமே! (வாய் திறந்தது என்றால் எனக்கு விசில் அடிக்க தெரியும் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பாகாது; எனக்கு மட்டும் விருப்பம் இல்லையா என்ன??)

திரைப்படத்தை பற்றி எதுவும் சொல்ல தேவையில்லை. இன்றுவரை போதுமான அளவு விமர்சனங்கள் தலைவாவை கொண்டாடியும் காறித்துப்பியும் வந்திருக்கின்றன. எனது நண்பன் ஒருவன் இடைவேளை முடிந்து ஒரு பதினைந்து நிமிடத்தில், இந்து சமுத்திரமே தெரியும் அளவிற்கு அப்படியொரு கொட்டாவியை விட்டுத்தள்ளினான். எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. காரணம் அவன் விஜய் இரசிகன். இருந்தும் மீசையில் மண் ஒட்டாததுபோல சுதாகரித்துக் கொண்டான். 'மச்சான், முதல் பாதியை விஜயும் இரண்டாவது பாதியை ஹரியும் எடுத்திருக்கலாம்..' என அவன் பின்னர் சொன்னபோது இதே கருத்தை நம்ம மைந்தன் சிவா சொன்னது ஞாபகம் வந்தது. "ச்சே இவன் (விஜய்) திருந்தவே மாட்டான்யா.!" என இன்னொருத்தன் சொன்னபோது 'முதுகு பத்திரம், விஜய் வெறி ரசிகர்கள் இங்கு நிறைந்து இருக்கிறார்கள்..' என்றேன். 


இரண்டாவது பாதி உண்மையிலேயே ரொம்பவே இழுவைதான். இடைக்குள் வரும் அந்த இரண்டு பாடல்கள் கொஞ்சம் அந்த இழுவையை சமாளித்துப்போகிறது கைதட்டல், விசில்களினால். உண்மையைச் சொன்னால் எனக்கோ முதல் பாதியை இன்னும் ஒரு தடவை பார்க்கவேண்டும் போல் இருந்த அதே சமயம் இரண்டாவது பாதியை பார்க்கும் பொழுது ஒரு எரிச்சலும், ஹரி - சூரியா (சிங்கம் 2) மேல் இன்னும் கொஞ்சம் மரியாதையும் உண்டாகிப்போனது. இவ்வாறு திரைப்படம் முடிந்து வெளியே வந்து சிலரிற்காய் காத்துக்கொண்டு நின்றபோது படம் பற்றி பலர் பலவாறு பேசிக்கொண்டு வெளியேறினார்கள். நான் நினைக்கிறேன் பொது சினிமா விரும்பிகள் அவ்வளவாய் தலைவாவை கொண்டாடியதாய் தெரியவில்லை. ஆனால், விஜய் விசிறிகள் மேல் எனக்கு பயங்கரமாய் கோவம் மட்டுமே வந்து தொலைத்தது. விஜய் என்கின்ற நடிகரை பிடிக்கும் என்பதற்காய் சினிமாவின் பொது, ஆளுமை நிறைந்த இரசனையை ஓரம் கட்டிவிட முடியாது இல்லையா? ஒருவகையில் எதை எப்படி நடித்தாலும் அதை கொண்டாடும் மனநிலையில் விஜய் இரசிகர்கள் இருப்பதால்தான் சினிமாவில் வித்தியாசமாய் எதையும் செய்யவேண்டும் என்கின்ற தேவை, பொறுப்பு விஜய் இடம் குறைவாக இருக்கிறதோ என தோணியது. 

அங்கிருந்த விஜய் இரசிகர்கள் அனைத்தையும் இத்திரைப்படத்தில் கொண்டாடினாலும் அதில் எனக்கு உச்சக்கட்ட கோவத்தை ஏற்படுத்திய ஒரு விஜய் விசிறியின் பீட்பெக், அவர் மற்றவரிற்கு சொல்கிறார், "மச்சான், செம படம் இல்ல... எப்பிடி ஒரு கதை.. செமையா ஜோசிச்சிருக்காங்க.. விஜய் என்னமா நடிக்கிராண்டா..!!!!"

எனக்கோ அந்த நண்பரை கூப்பிட்டு ஆரத்தழுவி, முத்தமிட்டு, ஒரு 1000 ரூபாய் காசாவது சந்தோஷ பரிசாக கொடுத்து அவனோடு நின்று ஒரு புகைப்படமும் எடுத்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது. 

இதைக்கேட்டபோது - என் தலையே வெடிச்சிரிச்சு!Wednesday, August 7, 2013

பிள்ளையாருக்கு லீவு விட்டிருக்கு!

- சிறுகதை -

ஜேசுநாதர், பிள்ளையார், புத்தர், அல்லாஹ் இலங்கையை அர்ச்சித்த கடவுள்கள். இவர்களிடத்தில் வெட்டுக்குத்து வந்ததாகவோ, ஏரியா பிரச்சனை நடந்ததாகவோ, கதிரை கலவரம் மூண்டதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. எவரும் சொல்லித்தரவும் இல்லை. அவர்கள் நால்வருக்குள்ளும் நல்லதொரு அண்டர் ஸ்டாண்டிங் இருப்பதாகவே எனக்குத்தெரியும். தாங்கள் நால்வரும் ஒருவரே எனக்கூட தங்களின் சில பிரசங்கிகளால் அறிவிக்கப்பட்டதாகக்கூட எனக்கு யாரோ சொல்லிக்கொடுத்த ஞாபகம். இவர்கள் நல்ல நண்பர்கள். நல்ல சகோதரர்கள். தங்களுக்குள்ளே நல்லதொரு உறவை வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும், இதை சொல்லும் பொழுது இவற்றை ஏற்றுக்கொள்வதாய் சுகுமார் சாடை காட்டாமல் எதிர் புறமாய் தலையை அசைத்துக் கொண்டது எனக்கு கோவத்தை உண்டுபண்ணியது. 

நன்றாக ஞாபகமிருக்கிறது அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சூரியன் வெளியே வருவதற்குள் நான் விமான நிலையத்துள் சென்று சேர்ந்துவிட்டேன். காலை வருவதற்குள் லண்டனில் இருந்து என் நண்பன் சுகுமார் வந்திடவேண்டும். இதுவே எனக்கு சொல்லப்பட்ட திட்டம். ஒரு பக்கம் சிலர்  சிலரை கட்டிக்கொண்டு அழுவதையும், மறு புறம் சிலர் ஓடிச்சென்று கட்டியணைத்து சுகம் விசாரிப்பதையும் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எனது கண்களில் திடிரென வந்து விழுந்தான் சுகுமார். "டேய் எப்பிடிடா இருக்கா??" என கேட்டவாறு கட்டியணைத்தவனை நானும் இறுக அணைத்து "நல்லா இருக்கேண்டா! எப்பிடி???" என்றேன். பதின்மூன்று வருடங்கள் ஸ்கைப்பிலும், முகப்புத்தகத்திலும் மட்டும் வந்தவன் இன்று நேரடியாக எனக்குமுன் நிற்கிறான். இருவரும் பேசியபடி வெளியே வந்து ஊர் நோக்கி புறப்பட்டோம்.

ஊரை சென்று அடைவதற்குள் சுகுமாரிடமிருந்து ஏகப்பட்ட விசாரணைகள், கேள்விகள். சில கேள்விகள் தவிர்த்து பலகேள்விகளுக்கு என்னிடம் விடையிருந்தது. அரசியல், தமிழ் தேசியம், போராட்டம் போன்றவையே அந்த சில. தனது வன்னியையும், வடக்கையும் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக இணையத்திலும், தொலைக்காட்சிகளிலும் மட்டும் பார்த்து கேட்டு வளர்ந்தவன் இல்லையா, அதுதான் நேரில் வந்ததும் ஏகப்பட்ட சந்தேகங்கள் அவனிடம். திரும்ப திரும்ப அவன் கேட்ட சில கேள்விகளால் கோவம் அடைந்த என்னை சரி செய்து சாரி கேட்டு இறுதியாக ஒரேயொரு வில்லங்கமான கேள்வி மட்டும் கேட்டு முடித்தான். வரப்போகும் மாகாணசபை தேர்கள் தொடர்பாக நீ என்ன நினைக்கிறாய் என்கின்ற கேள்வி அது.  அதற்கு ஒரு வாசல் மூடினால் இன்னொரு வாசல் கட்டாயம் திறப்பான் கடவுள் என்றேன். அவ்வளவுதான். புரிந்துகொண்டானோ இல்லையோ ஓகே என தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

அவன் ஊர் போய் சேர்ந்தோம். அவனிற்கோ ஏகப்பட்ட சந்தோசம். என்ன மச்சான் நம்ம ஊரு இவ்வளவு மாறிப்போச்சு என வியக்கும் போதெல்லாம் ஊர் மட்டுமில்ல மச்சி நம்ம சனமும்தான் என பதில்சொல்லி அவன் புருவங்களை உயரப்பண்ணுவேன். A9 ஐ பார்த்து எவ்வளவு அழகா செய்திருக்கிறாங்க என்றபோது 'ரோட்டுக்களை மட்டும்' என சொல்லி தலை குனிந்தேன். இருந்தாலும் இங்க வந்ததும் அந்த  பழைய ஞாபகங்கள் எல்லாம் வருதுடா எனச் சொன்னபோது மட்டும் 'உஷ்' எனச்சொல்லி அவன் வாயை மூடினேன். 

ஒருவாறு ஊரை அடைந்தபோது மணி இரவுச்சாப்பாட்டிற்கு சரியாய் இருந்தது. அவன் விருப்பப்படியே சிவப்பு அரிசிச் சோறும்,  இரணை மடு குள விரால் மீன் குழம்பும், முருங்கைக்காய் பிரட்டலும் பரிமாறப்பட்டது. வயிற்றையும் மனதையும் நிரப்பிய அந்த சாப்பாட்டோடு படுக்கைக்கு போனோம். எனக்கோ தூக்கம் கண்களை பிய்த்துக்கொண்டு வந்து இமைகளில் தொங்கிக்கொண்டிருந்தது. 'நான் எவ்வளவு காலத்திற்கு பிறகு நம்ம தேசத்திற்கு வந்திருக்கேன்... ஒனக்கு தூக்கம் கேட்குதா..?' என என்னை திட்டினான் சுகுமார். 'ஆமா, நாங்க முழிச்சிருக்க வேண்டிய நேரத்திலெல்லாம் முளிச்சிருந்ததால்தான் இப்பெல்லாம் எங்களுக்கு இப்படி நித்திரை வருது.. நீங்க அப்ப  நல்லா  தூங்கிநீங்கதானே.. இப்பவாவது கொஞ்சம் முளிச்சிருங்க..!' எனச்சொல்லி மறுபக்கம் புரண்டு படுத்தேன். இருந்தும் அவன்தான் வென்றான். 'சரி சொல்லித்தொலை' என சிணுங்கிய கோவத்தோடு அவன் பக்கம் மீண்டும் புரண்டேன்.

விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம். திரும்பவும் பாடசாலைக்காலம், பருவகாதல், எழுட்சிப்போராட்டம், இடப்பெயர்வுகள், காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்கள், தொலைவுகள், இரத்த சிந்தல்கள், மர்மங்கள், அரசியல், ஆதிக்கம், ஆக்கிரமிப்பு என அன்று இரவு பூராவும் நாங்கள் பேசியவையின் பட்டியல் நீண்டுகொண்டு போனது. இறுதியாக 'சுமதி எங்க மச்சான்?' என்ற கேள்வி எதிர்பாராமல் அவன் வாயில் நழுவி நிலத்தில் வந்துவிழுந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என சொல்லி பேச்சை முடித்துவிடலாம் என எண்ணியபோது 'அவ உசுரோட இருக்காவா?' என இரண்டாம் கேள்வியால் என்னைச் சுட்டான் சுகுமார். 'ஆமாட, உசுர் மட்டும் இருக்கு.. தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் இருக்காடா.. கடைசி நேரத்தில அப்பிடி ஆகிடிரிச்சி..' என சொல்லிமுடிக்கையில் அவன் எழுந்திருந்து படுத்திருந்த பாயின் நுனிகளை நீண்டிருந்த அவன் நிகங்களினால்பிய்த்துக்கொண்டிருந்தான் சுகுமார். சுமதி இவன் பள்ளிக்காதலி. அந்த நாட்களில் பாடசாலை பங்கரினுள்தான் இந்த காதல் முதல் முதல் செட் ஆகியது. பின்னர் நடந்தவை பற்றி நானோ சுகுமாரோ இவ்விடத்தில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் தமிழன் என்றால் அது புரியும்!

நீண்ட நாட்களின் பின்னர் காலையில் சுகுமார் சூரியனை தாயகத்தில் தரிசிக்கிறான். 'ஒரே சூரியன் எண்டாலும் அத வன்னில இருந்து பார்த்தா அதுக்கு ஒரு கம்பீரம் தெரியுது மச்சான்..' என சொல்லிக்கொண்டு வானத்தை அண்ணாந்துபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான் அவன். நானோ பழகிப்போன சூரியனோடு எதற்கு பேச்சு என தூக்கத்தில் குறியாய் இருந்தேன். நேரம் கொஞ்சம் கழிந்ததும், வெளியே போகலாம் என முடிவெடுத்து வீட்டின் பின் புறத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்தோம். இரயில் வந்தாலும் வன்னியில் உலாவ சைக்கிளை விடவும் ஒரு இனிமையான வாகனத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும், அதை பார்க்க வேண்டும், இதை பார்க்க வேண்டும் என அவன் அளப்பரைகளில் சைக்கிள் மிதிக்கவே வேண்டாம் என ஆகியது எனக்கு. 

சுகுமார் கேட்டது போலவே அங்கும் இங்கும் என அவன் பார்க்க, போக வேண்டி ஆசைப்பட்ட சகல இடங்களையும் கூட்டிச்சென்று காட்டி ஆகிவிட்டது. நேரம் நண் பகல் கடந்து மாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. எனக்கோ சைக்கிள் மிதித்து கால்களில் தலைகாட்டிய வலி ஒருபுறம், வயிற்றை அடிக்கடி நக்கிப்போகும் பசி மறு புறம். வீட்டிற்கு கிளம்பலாம் என நினைத்து சைக்கிளை திருப்புகையில் 'மச்சான்  முக்கியமான இடம் ஒண்டை விட்டுட்டோமே.. நம்ம ஆலமரத்து பிள்ளையாரடி..' என சத்தமிட்டான் சுகுமார். 'ஆமால்ல...' என மறுபடியும் சைக்கிளை திருப்பி நாங்கள் அன்றெல்லாம் மாலை வேளையில் அடிக்கடி கூடும் அந்த ஆல மரத்தடி பிள்ளையாரை நோக்கி மிதிக்க ஆரம்பித்தேன். போகையில் அவனிற்கு என்ன ஞாபகம் வந்ததோ தெரியவில்லை எனக்கோ அந்த நாட்களில் அந்த பிள்ளையார் கோவிலிற்கு தாவணி கட்டிவரும் அழகிய பெண்களை பார்த்து ஜொள்ளு விட்ட காலங்கள் தான் மனதில் வந்து வந்து மறைந்து கொண்டிருந்தது.

ஒருவாறு அங்கு வந்து சேர்ந்தோம். அங்கு சைக்கிளை ஓரமாய் நிறுத்தியதுதான் தாமதம். 'டேய், என்ன மச்சான், இங்க இருந்த நம்ம பிள்ளையார காணோம்!! அவர் இருந்த இடத்தில புத்தர் இருக்கார்?? என்னடா ஆச்சு..?? தடபடவென ஆர்ப்பரித்தான் சுகுமார். 'சொல்லுடா... என்ன ஆச்சு..?' திரும்ப திரும்ப அதே கேள்வி.என்னிடம் பதில் இருக்கா என்ன? ஏதோ பிள்ளையாரை நானே கடத்திக்கொண்டுபோய் கொலை செய்த மாதிரி... இவன் பேச்சு.. கொஞ்சமேனும் ஆச்சரியம் இல்லாமல், கொஞ்சம் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி அவன் முகத்தை திருப்பி அவனிடம் சொன்னேன்..

"என்ன மச்சான் செய்யிறது.. கூல் டவுன்... இங்க இருந்த நம்ம பிள்ளையார் லீவில போயிருக்கார்.. அதான் அவருக்கு பதிலா இப்ப இவர் வந்திருக்கார்... பட் மீண்டும் நம்ம பிள்ளையார்  நிற்சயம் வருவார்!!... டோன்ட் வொறி கண்ணா.. இப்ப நீ வா நாம வீட்டுக்கு போவம்!!"Thursday, July 4, 2013

வன்னியில் விசாலமாகும் பாலியல் வகையறாக்கள்!'பாலியல்', 'வன்புணர்வு', 'முறையற்ற உடல் தொடர்பு'  என்பன நமது கலாச்சாரத்தில் மிகவும் பாரதூரமான தவறுகளை குறிக்கின்ற சொற்கள். அதுவும் பாரம்பரிய விழுதுகள் வியாபித்து கிடக்கும் வடக்கு பிரதேசங்களில் சொல்லவே தேவை இல்லை. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயே இந்த அசாதாரண, சமூக, கலாச்சார பிரச்சனைகள் உருவெடுத்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த ஒரு விடயம். இதுவே என்றும் இல்லாதது போன்று நமது கலாச்சார ஆசாமிகளின் வெறுப்பேத்தும் கலாச்சார பிரச்சாரங்களுக்கு வித்திட்டது. இன்றெல்லாம் பத்திரிகைகள் வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்களில் இலகுவாக காணக்கூடிய ஒரு செய்தித் தலைப்பு எதுவென்றால் அது இது சார்ந்ததாகவே இருக்கிறது. தணிக்கைகள் இல்லாமல் நமது ஊடகங்களில் வரும் செய்திகளில் நீலப்படங்களாகவே எமது கதைகள் உருவப்படுத்தப் படுகின்றன.

ஒழுக்கம் உயிரிலும் பெரிதாய் மதிக்கப்படும் தமிழ் கலாச்சாரத்திற்கு இவை இப்பொழுது பெரும் சவாலாகவே அமைந்திருக்கின்றன. போரிற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல் பிரச்சனைகள் பிரதானமாக மூன்று  வகையறாக்களில்  வடக்கில்  பதிவு  செய்யப்பட்டிருக்கின்றன. 1. சிறிய அளவிலான பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பாலியல்  தொந்தரவுகள்  அல்லது  பாலியல்  சேட்டைகள். 2. கற்பழிப்பு/வன்புணர்வு மற்றும்  இது  சார்  பிற  தீவிர  குற்றங்கள். 3.  விருப்பத்தின்  பேரிலான முறையற்ற உடல், பாலியல் தொடர்புகள். இந்த மூன்று வகையறாக்களும் அதிகமான எண்ணிக்கையில் இப்பிரதேசங்களில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதுவே  இப்பொழுது  அல்லது  இனி  வரும் காலங்களில் இப்பிரதேசங்களில் வாழும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் முன்னுரிமை திட்டங்களாக முன்மொழியப்படலாம். இந்த கட்டுரை மூலம் பொதுவாக இந்த மூன்று வகையறாக்களையும் பற்றி பேசினாலும் இந்த மூன்றாவது வகையறாவைப்பற்றி அதிகம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

அது ஒரு மெல்லிய மாலை பொழுது. அவள்  முகத்தில்  ஒளி  இல்லை. ஆனாலும் அழகாக சிரிக்கிறாள். அவள் உடல் தோற்றமும், பேச்சும், அழகிய புன்னகையும், அவள் அருகில் ஓடிவந்து நின்றுகொண்ட அவளுடைய ஒரு  அழகிய மகளும்  அந்த பெண் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் தாய் என்பதை எனக்கு  அடையாளம்  காட்டியது. அவளுடன்  பேசி  முடித்து  வெளியில்  வருகையில் 'முறையற்ற பாலியல் தொடர்பு' பற்றியதான  எனது  கருத்தியல் சுக்குநூறாகிப்போயிருந்தது. அந்த பெண் கடந்த போரில் கணவனை இழந்த இளம் பெண். மூன்று பிள்ளைகள். மூன்றும் பெண்பிள்ளைகள். சிறு வயதில் திருமணம் முடித்த இந்தப் பெண் நால்வரின் வயிற்றுப்பாட்டிற்கு வருமானம் ஈட்ட எந்தவித தொழிலும் தெரியாத ஒரு குடும்பத்தலைவி. அருகில்  இருக்கும்  பெரிய  பண்ணையிலும், சில  தனிப்பட்டவர்களின் தோட்டங்களிலும் பணி புரிவதை தவிர இவளால் செய்யக்கூடிய காரியங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும்  வீட்டில்  பிள்ளைகளோடு இருப்பதையே அதிகம் இரும்புகிறாள். இவ்வாறான இந்த பெண் மீது அந்த சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டு "இவள் நடத்தை சரியில்லாதவள், பணத்திற்காக படுப்பவள்!"

"எனக்கு குறித்த நபருடன் அல்லது நபர்களுடன் (ஆண்கள்) உறவு இருக்கிறது, அவர்கள்தான்  என்  குடும்பத்தை  பொருளாதார  ரீதியில் கவனித்துக்கொள்கிறார்கள்" என்கின்ற  அப்பெண்ணின்  வார்த்தைகள் எனக்கு அதற்குள் முக்காடு போட்டு ஒளிந்திருக்கின்ற பல உண்மைகளையும், அவள் சொல்ல மறைக்கும் விடயங்களையும் சரியாக மொழிபெயர்துக்காட்டியது. பின்னர் கணவனை நினைத்து அவள் சிந்திய சிறு  துளி  கண்ணீர்  அவள்  கணவன்  மீதான  அன்பையும், இப்பொழுது கணவன் ஸ்தானத்தில் வைத்திருக்கும் ஆண்கள் மீதானா இவளின் தேவையையும் சரியாக தெளிவு படுத்தியது. பிள்ளைகளுக்காகவே நான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்கின்ற பாணியில் அவளது தவறான பாலியல் தொடர்புகளை நியாயப்படுத்தும் பேச்சில் எனக்கு நூறு விகிதம் உடன்பாடு இல்லை என்றாலும் அவளது மனிதாபிமான மற்றும் இயலாமை தளத்தில் நின்று ஜோசிக்கையில் கொஞ்சம் நியாயம் இருப்பது போன்று  எனது  தலை  அசைந்தது  அவள்  பேசும்  போது. என்னதான் நியாயப்படுத்தல்கள் வழங்கப்பட்டாலும்,  முறையற்ற பாலியல் தொடர்புகள் எமது சமூக கலாச்சாரத்தினால் முற்றாக ஏற்றுக்கொள்ளப் படமுடியாத ஒன்றாக இருந்தாலும் இந்த பெண்ணின் தனது உறவு பற்றிய தெளிவும், நியாயமும் என்னை 'பாலியல் தொடர்புகள்' மீதான பார்வையை கொஞ்சம் மாற்ற முனைந்தது  ஏதோ  உண்மைதான். அதற்காக  அதை முழுமையாக ஆதரிப்பவன் நான் என்பதும், இதில் பிழை இல்லை என்று சொல்லும் யதார்த்தவியல் இது என்றும் அர்த்தம் இல்லை.

வடக்கில் 40,000 இற்கும்  மேற்பட்ட  போரினால்  கணவனை  இழந்த பெண்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. அதிலும் அரைவாசிக்கு மேற்பட்டோர் 22 - 28 வயதிற்கு உட்பட்ட இளம் விதவைகள் என்பதும் மிக முக்கியமான  விடயம். ஆக, இரண்டு  காரணிகள்  இந்த  பெண்களை முறையற்ற  பாலியல்  தொடர்புகளிற்கு  அழைத்துச்செல்லலாம். ஒன்று, இவர்கள் இளம் பெண்கள் என்பதனால் இவர்கள் உடலியல் மற்றும் உணர்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த முறையற்ற பாலியல் தொடர்புகளை  இவர்களாகவே  ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தவிடயம், பரிசீலனை  செய்யக்கூடிய  ஒரு  காரணம்  என்றாலும் உடலியல் மனிதாபிமான நோக்கில் (கலாச்சார, சமூக... நோக்கில் அல்ல!) இவர்கள் இந்த விடயத்தில் நலிவுற்றவர்களே (Vulnerable). இரண்டாவதாக, பொருளாதார ரீதியில், பொருளாதார நலிவுத்தன்மை காரணமாக இந்த  பிரச்சனைக்குள் சிக்குபவர்கள். இவர்கள்  பண்டமாற்று  முறையில் பணத்திற்கு, உடல்  என  வேறு  வழியற்ற  தங்கள்  பொருளாதார பிரச்சனையை  தீர்த்துக்கொள்ள  முனைபவர்கள். இவர்கள்  தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள உடலை பயன்படுத்துபவர்கள். இருந்தும் இவர்களை வெறுமனே விபச்சாரிகள் என்று சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த  இரண்டு வகையான தரப்பினர்களையும் இப்போதைய வடக்கில் அதிகம் காண முடியும். இவற்றில் மிகச்சிறிய அளவிலான தொடர்புகளே முறைப்பாடுகளாகவோ அல்லது விமர்சனங்களாகவோ வெளியில் வந்திருக்கின்றன, வருகின்றன. பெரும்பாலானவை வெளியில் வராமல் இருப்பதற்கு நமது சமூகம் மீதான பயமும், கலாச்சாரம்  மீதான  மரியாதை  பயமும்  காரணங்கள் என்று சொல்லலாம். இவ்வாறான  பல  சம்பவங்களை  கிராம  மட்டத்தில் மக்களுடன்  பணியாற்றும்  அரச, அரச  சார்பற்ற  பணியாளர்களிற்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.


அத்தோடு, அடுத்த  இன்னுமொரு  பாரிய  விடயம். பாலியல் சார்ந்த விடயங்கள் எமது இளம் மற்றும் பாடசாலை மாணவ பருவத்தினரிற்கு சரியாக தெரிந்திருக்கின்றதா என்கின்ற விடயமும் பல தடவைகளில் என்னை சுற்றிக்கொண்ட கேள்விகளில் ஒன்று. பாலியல் சார்ந்த தெளிவும் அல்லது பாலியல் கல்வியும்/அறிவும் இல்லாமல் அல்லது போதுமான அளவு இல்லாமையும் இப்பொழுது நடக்கின்ற அல்லது இனிவரும் காலங்களில் நடக்க இருக்கின்ற பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்து விடுமா என்கின்ற ஒரு கேள்வியும் என்னிடம் இருக்கிறது.

அன்றைய பாலியல் வன்முறைகள் பற்றிய பயிற்சி பட்டறையில் இருபத்து நான்கு பங்கேற்பாளர்களில் இருபது பேர் பெண்கள். அதில் 95 வீதமானோர் திருமணமாகாத, இளம் பெண்கள். அனைவரும் வன்னியின் பல பாகங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களது முகத்தில் சிரிப்பில்லை, அதிகமாய் வெட்கம்  முகமெல்லாம்  பரந்து  விரிந்து  கிடக்கிறது, இந்த தலைப்பை பற்றி பேச, கேட்க, தெரிந்துகொள்ள, அடிமனதில் பெருமளவு ஆசை மறைந்து கிடக்கிறது. அதுவும்  எனது  கண்களுக்கு  தெரிகிறது. பயிற்சியை  வழமை  போல்  ஆரம்பிக்கிறேன். அதிகமானோரின்  கண்கள் என்னைவிட அவர்கள் பெருவிரலையே பார்த்த வண்ணம் இருக்கின்றன...

எமது பெண்கள் 'பாலியல்'சார்ந்த விடயங்களை தெரிந்துகொள்ள அல்லது பேசுவதற்கு அவை ஏதோ பேசக்கூடாத தூஷண வார்த்தைகளாகவே எண்ணிக்கொள்கின்றனர். அப்படிதான்  எண்ணும்படி  பெற்றோர்களும் சொல்லிக்கொடுக்கின்றனர் தங்கள் பிள்ளைகளிற்கு மறைமுகமாக. அதன் விளைவு, பல பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அறிவை, தைரியத்தை  இவர்கள் பெறாமல் போய்விடுகிறார்கள். பாலியல்  சார்ந்த பிரச்சனைகளை வருமுன் காப்பதில் இந்த பாலியல் கல்வி அல்லது அறிவு மிகவும் அவசியம் ஆகிறது. இதில் வெட்கப்படுவதற்கும், பேச ஸ்தம்பித்துப் போவதற்கும் அவசியமே இல்லை.

பயிற்சி பட்டறை தொடர்கிறது.. நான் அவர்களிடம் கேட்கும் கேள்விகளிற்கு பதில் இல்லை. நன்  சொல்பவற்றிற்கு  குமீர்  என்ற  சிரிப்பு  மட்டும் வருகிறது. பாலியல் - பால் சார்ந்த விடயங்களை பற்றி நான் பேசும் பொழுது ஒரு கலாச்சார + இன துரோகி வகையறாக்களில் சிலர் என்னை பார்த்ததும் நினைவிருக்கிறது. இறுதியில், அந்த இளம் பெண்கள் மனம் திறந்து பேசுகிறார்கள் என்னிடம். "எங்கள் கிராமத்தில் இந்த பாலியல் மற்றும் பாலியல் வன்முறைகள் பற்றி இளைஞர்களிற்கு கட்டாயம் விழிப்புணர்வு வேண்டும்", "பெண்களாகிய எங்களிற்கு எங்கள் பற்றிய பல பாலியல் சார்ந்த விடயங்கள் இன்றுதான் தெரிந்துக்கொள்ள முடிந்தது, இதை  பற்றி  நாங்கள்  தெரிந்துகொள்ள முற்பட்டால் எங்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்கின்ற இந்த  பயத்தினாலேயே இதுபற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களிற்கு  இல்லாமல்  போய்விட்டது", "குடும்பத்தில்  கணவனிற்கும் மனைவியிற்கும் ஏற்படும் அதிகமான பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும்  இந்த  பாலியல், பால் நிலை பற்றிய தெளிவு அல்லது அறிவு இல்லாமைதான் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது", "குடும்ப வன்முறைகளுக்கும் இந்த பாலியல் பால் நிலை சார்ந்த விடயங்களிற்கும் இருக்கின்ற தொடர்பு பற்றி நான் இன்றில்லை என்றோ  அறிந்திருக்கவேண்டும்", "பாலியல்  வன்முறைகள் வெறுமனே  கற்பழித்தல்  மட்டுமல்ல  அதை  விட  கொடுமையான இவ்வளவு  விடயங்கள்  இதற்குள்  இருக்கிறதே..". இவை  அந்த பயிற்சியில் பங்கேற்ற சில பெண்கள்  என்னிடம் இறுதியில் கொட்டித்தீர்த்தவை.

ஐரோப்பிய நாடுகளில் ஏன் இந்தியாவில்கூட கட்டாயமாக்கப்பட்டிருக்கும் பாலியல் கல்வியின் முக்கியத்துவம் நம்மவர்களிற்கு தெரியாமல் போனது எனக்கும் என்றைக்கும் ஆச்சரியம் தருபவையே. ஆகக்குறைந்தது, நண்பர்கள், குடும்பம்  போன்ற  நிலைகளிலாவது  இவற்றை வெளிப்படையாக பேசி தெரிந்துகொள்ளும் துணிச்சல் இந்த இளம் பராயத்தினரிற்கு புகுத்தப்பட வேண்டும். அத்தோடு, கலாச்சாரம் என்பது வாழ்கையில் சரியான விடயங்களை கற்றுக்கொள்ள தவறான என்று நாம் எண்ணும் விடயங்களை கூட ஊடகமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதேபோல, இங்கு பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், போதுமான  அளவு  பொது  மண்டபத்தையும், பொது  விளையாட்டு மைதானத்தையும், புது  புது  ரோட்டுக்களையும்  கிராமங்களிற்கு அமைத்துக்கொடுத்து களைப்பாறாமல் பின்னர் இவ்வாறான சமூக மென் செயற்பாடுகளை (Soft Components) முன்னெடுக்க முன்வர வேண்டும். சமூக மென் பிரச்சனைகளிற்கு தீர்வுகாணாமல் சமூக வன் செயற்பாடுகளையும் கட்டுமானங்களையும் விரிவு படுத்துவதில் பயனில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். இளைஞர்கள் என்ற இலக்கு குழுவை இலக்கு வைக்கும் செயற்பாடுகள் இப்பொழுது வடக்கில் அதுவும் அபிவிருத்தியை நோக்கிய கட்டத்தில் (Development Phase) மிகவும் முக்கியம்.


Wednesday, July 3, 2013

யாரும் கண்டுக்காத ஜிப்ரானின் 'கண்ண கண்ண...'

பாடலின்  இரசனை  மனிதர்களுக்கு  மனிதர்கள்  வேறுபடும். அதாவது, எப்படியான  பாடலையும்  இரசனை  மிக்கதாக  மாற்றுவது  கேட்கும் செவிகளின்  இரசனை  அளவையே  பொறுத்தது. அத்தோடு  திரை உலகத்தில் பல  அழகான பாடல்கள் அந்த படம் வெற்றி பெறாமல் போவதாலோ  அல்லது பெரிய அளவிலான விளம்பரப்படுத்தல் இல்லாததனாலோ அல்லது மிகப்பெரிய இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் அப்பாடலோடு சம்மந்தப்படாததாலேயோ அப்பாடல்கள் அதிகம் பேசப்படாமல் போய்விடுகிறது. ரகுமானின் மிகச்சாதாரணமான மெட்டு ஓஹோ என்று பேசப்படுவதற்கும் ஜிப்ரான் போன்ற அதிகம் பிரபல்யம் ஆகாத இசை இயக்குனர்களின் மிகப் பிரமாதமான மெட்டு யாராலும் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பதும் இசை இரசனை சார்ந்தது அல்ல என்பதும், இது எதனால் என்பதும் யாவருக்கும் தெரியும்.
விடயத்துக்கு  வருவோம். அண்மையில்  வந்த  ஒரு  சாதாரண  பட்ஜெட் படமாகிய வத்திக்குச்சி திரைப்படம் ஜிப்ரானின் இசையில் நான்கு பாடல்களை கொண்டிருந்தது. இந்தப்படம் அதிகம் பேசப்படாமல் போனது (படத்தை பற்றி சொல்லத்தெரியவில்லை காரணம் வத்திக்குச்சி நான் பார்க்கவில்லை) இந்தப்பாடல்கள்  அதிகம்  வெளியில்  வராமல் போனதற்கான ஒரு காரணம். இந்த படத்தில் இடம்பெற்ற 'கண்ண கண்ண உருட்டி உருட்டி என்ன மிரட்டினா....' என்று  ஆரம்பிக்கும்  ஒரு  அழகான பாடல் தேடிப்போய் இதை கேட்டவர்களின் காதுகளை இருக்கமாய் கட்டிப்போட்டது. நானும் ஒரு இசை இரசிகையின் வேண்டுதலில் முதல் முறை இந்தப்பாடலை கேட்டபோது சர்வமே குளிர்ந்து. சரி முதலில் இந்த பாடலை கேளுங்கள் வரிகளுடன்.

இந்தப்பாடலின் பலம் என்று என்னால் சொல்லக்கூடியவை மூன்று.

1. பாடலை வரிகளுக்கு ஏற்றாற்போல் தேவையான பாவத்தை குரலிலும் மெட்டின் அசைவுகளிலும் அழகாய் கொண்டுவந்து சேர்த்து அழகாய் பாடும் சுந்தர் நாராயண ராவ். தமிழ் இசைக்கு இவர் ஒரு புதியவர் என்று சொல்லலாம். இவரை  தமிழ்  இசைத்துறைக்கு  அழைத்து  வந்தவர் இசையமைப்பாளர்  ஜிப்ரான். வத்திகுச்சி  படத்தில்  பாடிய  இரண்டு பாடல்கள் மூலம் இவரிற்கு தமிழ் சினிமா வருகை ஆரம்பிக்கப்பட்டது.


2. ஒரு  அழகான  கவிதையை, சந்தம்  பிழைக்காமல்  மெட்டோடு அப்படியே  ஒட்டியபடி  அழகாய்  கொண்டு  போகும்  அறிவுமதியின்  பாடல் வரிகள். அறிவுமதி  அதிகம் சொல்லத்  இல்லை. அதிகம் பாடல்கள் எழுதாத, அதிகம் அலட்டல் இல்லாத ஒரு சிறந்த பாடலாசிரியர் என்கின்ற கவிஞர். இவரது நட்புக்காலம் என்கின்ற கவிதைத் தொகுப்பு உங்கள் கைகளில் கிடைத்தால் தயவுசெய்து மிஸ் பண்ணாதீர்கள்.


3. மெட்டுக்கேற்றாற்போல்  வரிகளையும், குரலையும், பாடும் விதத்தையும்  பக்காவாக  ஒழுங்கு  செய்திருக்கும்  ஜிப்ரான். 2011 இன் விஜய் டிவி விருதுகளில் தனது வாகை சூடவா பட பாடல்களுக்காக ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு  விருதை  பெற்றவர். அதைவிட  மிக  முக்கியமாக  சொல்ல வேண்டிய விடயம் விஸ்வரூபம் - 2 இன் இசை இயக்குனர் இவரே. சிறந்த இளம் இசையமைப்பாளர்.

 
இந்த மூன்று விடயங்களும் ஒன்று சேர்ந்து ஒரு அழகான, இரசிக்கக்கூடிய பாடல் ஒன்றை தந்திருக்கிறது. ஆனாலும், இந்தப்பாடல் அதிகளவான இசை இரசிகர்களை சென்றடையவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்கு  பல  காரணங்கள்  இருக்கலாம்  இருந்தாலும்  இசை இரசிகர்கள்  காதுகளில்  இதமாக  ஒலித்து, இப்பாடல்  பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. நீங்கள்  ஒரு  நல்ல  இசையை  இரசிக்கத் தெரிந்தவராக  இருந்தால் இது நிற்சயம் உங்களுக்கு பிடிக்கும் பாருங்களேன்!

Tuesday, July 2, 2013

MY ANGEL OF ADORATION.Good afternoon friends. It's really so long since I placed an English post on my blog. I was too busy either with my job or writting Tamil posts. Hence, now, I am back, and coming with a very cute poem that I found great in somewhere I was too busy looking for some other stuff.

Yes. The time to take you all to feel your mom other than anything in the world. I do too. This poem, says some great stories about mom and I realized, I wanna try to be a mom in next birth if that is true.. I do not want to keep you here for such long, and here you go, read it, enjoy the love of mom and do not forget to comment it when you say huh after reading sorry enjoying it.

Note: I am sorry that I could not find the name of the author and but it is definetely not me!!


There she lay in the midst of smiles
The queen of my heart
Princess of purity
Angel of adoration
& a lady of love
She's the one who lights up my life
She's the one who brings up my sun(brightness)
She takes away all my pains..
with the soothing words her heart could say
She turns each of my tears
To the rain of happiness falling in my life
She raises me each time
From the depths of sorrows I fall in
She shows me what love is
When I see all hatred surrounding me
She scolds me when I go wrong
Placing me in the right path of my life
She holds my hands so firm & strong
When the fears of mine tremble them
she understands me so damn well,
Making my dreams & wishes all real..

she's the lady,my heart adores
& she's the lady,my heart admires
She's the one who inspires me
in everything I do & everywhere I go
she does everything so clean & keen
I wonder how she's a perfect woman!
My heart always wishes to say her few words
that "I LOVE U MOM for all my life"
My heart always wishes to thank her
to bring me into this loving world

Thank u MOM for everything
I owe a lot for the joy u bring...


புருவம் உயருகிறதா?

வணக்கம் மக்கள்ஸ்.. இதற்கு  பல  தடவைகள்  பல  சுவாரஸ்யமான 'புகைப்படங்கள் பற்றி பேசியிருக்கிறேன். உங்களில் பலரைப்போன்று புகைப்படக்  கலையில்  எனக்கும்  அம்புட்டு  ப்ரியம்.. புகைப்படங்களை இரசிப்பது என்பது நம்மை இரசனையின் அடுத்த ஒரு எல்லைக்கே கொண்டு பொய் சேர்த்து விடும்.

சரி, இம்முறை, படங்களில் வித்தைகள் இல்லை.. ஆனால் ஆச்சரியமான அல்லது நமது புருவங்களை சொட்டேனும் உயர்த்தக்கூடிய இவ்வுலகில் உண்மையாக உள்ள சில விடயங்களை இங்கு உங்களோடு புகைப்படங்களாக பகிர்ந்து கொள்ளலாம்.. என்ன சொல்லுறீங்க, கம் ஒன்..
Monday, July 1, 2013

உஷ்... கவிஞர்கள்!! ஓடுங்கடா ஓடுங்கடா...பல்லு விளக்கியதையும், பாட்டி தடக்கி விழுந்ததையும் ஸ்டேடஸ் இடும் முகப்புத்தகம்  பற்றி  எவரிற்கும்  அறிமுகம்  தேவையில்லை. அதிகமாய் இளைய  தலைமுறையினரை  ஆட்கொண்டு, அடிமைப்படுத்தி வைத்திருக்கும்  ஒரு  சமூக  வலைப்பின்னல்  இந்த  முகநூல். இந்த முகநூலின் பாவனையைப் பொறுத்து இது நல்லதா இல்லை கெட்டதா என்கின்ற முடிவிற்கு வரலாம். என்னைப்பொறுத்தவரை முகநூலை நல்ல வழியில் பாவிப்பதும், தீய வழியில் பாவிப்பதும் அதை பாவிக்கும் நம்மைப் பொறுத்தது. நானும்  இந்த  முகப்புத்தகத்தின்  ஒரு இரசிகன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முகப்புத்தகத்தில் எனது நேரத்தை செலவு செய்வது தேவை இல்லாத விடயங்களை தேடி ஓடும் மனதை கட்டுப்படுத்த, வீணான  பிரச்சனைகளில்  மூக்கு  நுழைப்பதை  தவிர்க்க, தனிமையில் இருக்க, தேவையற்ற  வீண்  உரையாடல்களை  தவிர்க்க, பயனற்ற  வெளிச்செல்லல்களை (Outing)  குறைக்க, ஓய்வாக  இருக்க என ஏராளமான நன்மைகளை நான் பெறுவதற்கே.

இப்பொழுதெல்லாம்  ஒரு  என்சைக்கிளோபீடியாவாக, செய்திகளை உடனுக்குடன்  அறிந்துகொள்ளும் நியூஸ்  மீடியாவாக, உலக புதினங்களையும் இரசனைமிக்க விடயங்களையும் அறிய கிடைக்கும் ஒரு ஊடகமாக, நமது  நண்பர்களுடன்  தேவை ஏற்படும் போதெல்லாம் அருகில் இருப்பது போல் அளவளாவ உதவும் இலகு தொலைத்தொடர்பு சாதனமாக மற்றும் நம்ம மன வேதனைகளை சந்தோசங்களை நண்பர்களுடன் கொட்டித்தீர்க்கும்  ஒரு  நண்பர்கள்  மீட்டிங்  ஸ்பாட்  ஆக  என  பல  வகைகளில் முகப்புத்தகம் எனக்கு பயன்படுகிறது. அதிலும்  நம்மில்  பலர், என்னைப்போல ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக (அதிலும் நம் மனம் சரியில்லாத வேளைகளில்...) இதை பயன்படுத்துகிறோம். சரி, விடயத்திற்கு வருவோம். இதை  அப்பிடியே  எதிர்மறையாய்  பயன்படுத்தும்  பல வீணாய்ப்போன முகப்புத்தக பயனர்களை பார்க்கும் பொழுது மேலெழுந்த கடுப்பின் உச்சகட்டமே இந்த பதிவு.

அதிலும் இந்த கவிஞர் பட்டாளம் காட்டும் அட்டகாசங்கள் சொல்லில் மாளாதவை (எனது முகப்புத்தக பக்கத்தில் அதிகம் கவிஞர்கள் இருப்பதால் இது எனக்கு தெரியும்). கவிதை  எழுதுபவர்கள்  எல்லாரும்  கவிஞர்கள்  இல்லை என்பது லாஜிக் என்றாலும் முகப்புத்தகத்தில் கவிதைகள் எழுதும் பிரமாதமான இளம் கவிஞர்களை வளர்த்து விட்டதும், கெடுத்து விட்டதும், இந்த முகப்புத்தகம் தான். இந்த கவிஞர்கள் எழுதும் கவிதைகள் (??) எங்கள்  பக்கங்களை  சென்றடையும்  போது அதை நாம் வாசிக்கிறோம். பிடித்திருந்தால் லைக் இடுகிறோம். அதற்கும்  மேலாக  அக்கவிதையில் ஈடுபாடு  இருந்தால்  கமெண்ட்  செய்கிறோம். இதிலே  முக்கியமான விடயங்கள் என்னவென்றால், அல்லது  என்னை  கடுப்பேத்தும்  மூன்று விடயங்கள் என்னவென்றால்,

1. கவிதை எழுதியவர்கள் அக்கவிதைக்கு வரும் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்ள இலக்கிய அல்லது எழுத்து ஆளுமை இல்லாமல் இருப்பது. மற்றவர் கருத்து விதண்டாவாதம் அல்லது காழ்ப்பு எனில் அவர்களுடன் பொதுவான இடங்களில் சண்டையிடுவதில் எந்த புத்திசாலித்தனமும் இல்லை. அவர்களிடத்திலிருந்து  நாங்களாகவே  ஒதுங்கிக்கொள்ள முடியும்.  முகப்புத்தகத்தில் எங்கள் வீராப்புக்களைக் காட்டுவது எமது மரியாதையை நாமே கெடுத்துக்கொள்ள பொருத்தமான ஆப்பில் நாமே சென்று குந்துவது போன்றது.

2. சில மாற்றுக்கருத்துக் கொண்டுள்ள இன்னும் சில கவிஞர்கள் அதை நாம் ஒரு சமூக வலைத்தளம் ஒன்றில் இருக்கிறோம் என்கின்ற சிந்தனை கொஞ்சம்  கூட  இல்லாமல் அநாகரிகமாக  மற்றவர்களுக்கு கருத்திடுவது. (இதற்கு inbox என்கின்ற ஒரு வசதியும் முகப்புத்தகத்தில் இருக்கிறது.) கருத்துசுதந்திரம் முகப்புத்தகத்தில் போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் உங்கள் நண்பரின் பதிவிற்கு கீழே கருத்திடல் பெட்டி திறந்தே எப்பொழுதும் இருப்பது. அதற்காக  எதையும்  எழுதலாம்  என்று நினைப்பது தவறு இல்லையா. இங்கே  கருத்திடல்  அல்லது  பதில் கருத்திடலில் அநேகர் தங்களின் மரியாதையை தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள். பாவம்!

3. சிலர் என்னத்தை எழுதினாலும் (எழுதியவருக்கே இது கவிதையா என சந்தேகம் இருக்கும்) அதை செம செம நைஸ் நைஸ் என ஓடி வந்து கருத்துடுபவர்கள். ஒரு சதத்திற்கு கூட பிரயோசனம் இல்லாமல், அந்த கவிதைக்கு இன்றி அந்த நபரிற்கு முதுகு சொறியும் ஒரு  கூட்டம் : இந்த  கூட்டத்தால்  குறித்த படைப்பாளிக்கு எந்த பிரஜோசனமும் இல்லை. இவர்களின் மிகப்பெரிய அடி  முட்டாள் தனம், இந்த  கவிஞர்  எதை  சொன்னாலும்  சரி என வாதிடுபவர்கள். ஐயா சாமிகளா உங்களுக்கின்னு கடவுள் ஒரு மூளைய வச்சிருக்கான், கொஞ்சம் பாவியுங்கோ.

இந்த மூன்று  விடயங்களும்  என்னை  மாத்திரம்  அல்ல, முகப்புத்தகத்தில் இருக்கும் பலரை முகம் சுளிக்க வைக்கும் விடயங்கள். முகப்புத்தகத்தில் நடந்தேறும் சண்டைகளில் அதிகமானவை இந்த கவிஞர் பட்டாளத்தின் உள்ளேயே நடந்தேறுகிறது. அதிலும் சில சண்டைகளைப் பார்த்தல் அது நம்ம ஊரு வேலிச் சண்டையை வென்றுவிடும். பாவிக்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் தாங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இருக்கிறோம் என்பதையும், இதனால் தங்கள் சுய கௌரவம் பாதிக்கப்படும் என்பதையும் துளிகூட ஜோசிப்பதில்லை. இவை இலக்கிய சண்டைகள் என்றால் கூட பரவாயில்லை. முகப்புத்தகத்தில் இடும் கவிதையின்  கருத்து, ஒரு  வரி, ஒரு சொல் போன்றவற்றிற்காய் சிறு பிள்ளைத்தனமாக சண்டையிடும் கவிஞர்கள் தாங்கள் ஏதோ பாரதிதாசன் என எண்ணிக்கொள்பவர்களோ தெரியவில்லை..

அட மக்கள்களா, முகப்புத்தகம்  ஒரு  நல்ல  பொழுதுபோக்கு  மற்றும் பயன்மிக்க சமூக ஊடகம். அதை  தயவுசெய்து  உங்கள்  குப்பைத்தொட்டிகள் ஆக்காதீர்கள். காரணம்  உங்கள்  குப்பைகளை  நாங்களும்  எவ்வாறோ கடந்துபோக வேண்டி இருக்கிறது காரணம் இது பொதுவான சமூக வலைப்பின்னல். உங்கள்  கேவலம்  கெட்ட  சண்டைகளையும், கருத்து பரிமாறல்களையும் உங்கள் இன்பாக்ஸ் இல் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் நின்மதியாய் முகப்புத்தகத்தில் இமூச்சு விடுவதற்கு.Monday, June 24, 2013

என் மணமகன் எவன்?நாளிகைகள்
கழியட்டும்..
கண்ணில் இட்ட மையும்,
முகம் காட்டும் பொய்யும்,
மறைப்பின்றி ஜொலிக்கிறது.

தோழிகள் அருகில்,
சோடனை வெளியில்,
அம்மா இட்ட வளையல் குலுங்க,
பாட்டி இட்ட கம்மல் சினுங்க,
கல்யாண சாம்ராட்சியத்தின்
கன்னிக்கதிரையில்
கன்னம் சிவக்க நான்.

கலியாணப் பொண்ணு
காந்தர்வ அழகு,
என்
கன்னக்குழியில் விழுந்து தெறிக்கிறது
செல்லக் கிள்ளல்கள்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி
எல்லோர் உதட்டிலும் கிளர்ச்சி
அது -
மணமகன் வரும் நேரம்!
எனக்கோ
மனமெங்கும் பெரும் பாரம்!!

மாங்கல்யம் ஜொலிக்கிறது
மணமேடையில் - எனக்கோ 
மனமெல்லாம் வலிக்கிறது!

மணமகன் வருகிறான் - என்
மனம் புரிந்தவன் வருவானா?

கைகளுக்கு
வளையலிட்ட அம்மா - என்
மனதிற்கு
தையலிட்டதேன்??

திருமணம்
எனக்கானதெனின்,
மணமகன் மட்டும்??

மண மேடை
பாடையாவதும்,
என் மனமேடை
பூக்கள் பூப்பதும்
இன்றுதான்! இன்றுதான்!

என்னை அள்ளிக்கொள்ள
எவன் வருவான்??

இவர்கள்
மணமகனா?? - இல்லை
என்
மனமகனா??

நான்
காலாவதியாய் போனாலும்
போகட்டும்,
என்னை மட்டும்
தயவுகூர்ந்து
உங்கள் மணமகனுக்கு
தீர்த்து விடாதீர்கள்.
அவன்
பணம் கொண்டு வருகிறான்..
மனம்??

இல்லை,
இந்த பெண்ணொருத்தி
வாழ்ந்திடட்டும் என்றால்,
என்
மன்மதன்
மணமேடை வரட்டும்!
உங்கள் பிள்ளைக்கு
இறுதி பிச்சை போடுங்கள்
இந்த - 'என்'
வாழ்க்கையை மட்டும்.

Thursday, May 30, 2013

என்ன பொண்ணுடா!

வணக்கம் நண்பர்ஸ்... நலமா? இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக  எழுதித் தொலைக்கவேண்டும்  என்று  எண்ணிக்கொண்டிருந்த  பதிவு  இது. அது  என்ன  அப்பிடி  ஒரு  முக்கியம்? அப்பிடி  ஏதாச்சும்  அறிவியல், உளவியல், புவியியல், உயிரியல்  சம்மந்தமா  இருக்குமோ...... அப்பிடீன்னு எல்லாம் நீங்க ஜோசிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.

மாறாக, இது நஸ்ரியா நசீம் என்கின்ற ஒரு அக்காவைப் பத்தியது! இந்த அக்கா லேசுப்பட்ட அக்கா இல்லேங்க.. கொஞ்ச நாளேக்க இங்காலப்பக்கம் வந்து  நிறைய அப்பாவி இளைஞர்களிண்ட நித்திரைய தொலைச்சவங்க. ஹன்சிகா, கஜல், சமந்தா  என்றெல்லாம்  வீணிவடிய திரிஞ்ச நம்ம பசங்க இந்த அக்காவ பாத்து 'யம்மாடினு' வாய பொளக்குற அளவுக்கு விஷயம் இருக்குங்க அவட்ட..


சரி விடயத்திற்கு வருவோம் (கொஞ்சம் சீரியஸா பேச போறாராமா...). காலா காலமாய் தென் இந்திய சினிமாவை மட்டுமல்ல தென் இந்தியாவையே கலக்கும் அழகு எப்பொழுதும் கேரளாப் பக்கம் இருந்தே வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது அந்தப் பக்கம் இருந்து இந்தப்பக்கம் வந்து ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருப்பவர் இந்த நஸ்ரியா.. இன்னும் பலரால் சிறப்பாக அறியப்படாத நஸ்ரியா 'நேரம்' என்கின்ற முதல் தமிழ் படத்தில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்போதைக்கு  இன்னும்  மூன்று  தமிழ்  படங்களில் (தனுஷுடன்  ஒரு  படமும்  அஜய்  உடன்  ஒரு  படமும். நடித்துக்கொண்டிருப்பதாக  சொல்லப்படுகிறது.அழகிய நஸ்ரியா ஒரு நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொலைகாட்சி நிகழ்ச்சி  தொகுப்பாளரும்  கூட. நஸ்ரியா  என்னும்  ஒரு  அழகிய தேவதையை அதிகமான இளைஞர்களின் கண்ணில் படவைத்த பெருமை 'Sony Music Entertainment' யே சாரும். காரணம் யூவ் எனப்படுகின்ற 'Sony Music Entertainment' இன் ஆல்பம் வெளியாகி நஸ்ரியாவின் அழகை இன்னும் அழகாய் காட்டியது. இது youtube இல் 2.3 மில்லியன் பார்வையிடல்களைப் பெற்றிருக்கிறது. அந்த  பாடல்  ஒன்றுதான்  நஸ்ரியாவை  ஒரு  கனவுக் கன்னி என்கின்ற ஸ்தானத்துக்கு கொண்டுபோய் விட்டது எனலாம்.. கண் சிமிட்டாமல் பார்த்திருக்கக் கூடிய அந்த பாடல் இவராலேயே ஹிட் ஆனது எனலாம்.

இதோ அந்த பாடல்.


இந்த  பாடல்  பற்றி  நான்  ஏற்கனவே  எழுதிய  பதிவை  படிக்க: இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01

அண்மையில், சிவகார்த்திகேயன்  முகப்புத்தகத்தில்  நஸ்ரியா இருக்கிறார் என்கின்ற  செய்தியை  தனது  முகப்புத்தகத்தில்  பதிந்திருந்தார். இது  நஸ்ரியா  மீதான  ரசிகர்களின்  எண்ணிக்கையை சட்டென  அதிகரிக்க  முடிந்தது. அதன்  பின்னர், நஸ்ரியாவின் புகைப்படங்கள் முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாய் உலா வர ஆரம்பித்தன.என்ன  அழகுடா? என  பலரை  ஆவெண்ட வைத்த நஸ்ரியா இன்னும்  நிறைய ஆண்களின் நித்திரையை குழப்பாமல் விடப்போவது இல்லை. தமிழில் நல்லா வருவாம்மா நீயி.அழகோ அழகுனா இவதாண்ட மச்சான் என்று நஸ்ரியாவின் படத்தையே பார்த்துக்கொண்டு வீணி வடிக்கும் எனது நண்பனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். (சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கா நஸ்ரியா...)


Wednesday, May 15, 2013

செம காமடி செம காமடி... ஒரு போட்டோ சூட்!

புகைப்படக் கலை என்பது எப்பொழுதுமே ஒரு சுவாரஸ்யமான விடயம். இதை தொழிலாக செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள். அவர்களது தொழில் தினம் தினம் சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருக்கும். மனம் எப்பொழுதெல்லாம் ஏதோவொரு நெருடலில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் எனது வேலை, புகைப்படம் பிடிப்பது, சுவாரஸ்யமான புகைப்படங்களை  தேடி  தேடி  பார்ப்பது, கவிதை  எழுதுவது, சிவகார்த்திகேயனுடைய நகைச்சுவைகளை பார்த்து வாய்விட்டு சிரிப்பது என பட்டியல் நீண்டது.

புகைப்படம்  என்பது  மிகவும்  நுணுக்கம்  நிறைந்த  ஒரு கலை. சரியான நேரத்தில் இயற்கையாக நடப்பவற்றை இயல்பான உணர்வோடு படம் பிடிப்பது என்பது புகைப்படக் கலையின் உச்சம். இவ்வாறான படங்களை நான்  மட்டும்  அல்ல  நீங்களும்  நிர்ச்சயமாய்  ரசிப்பீர்கள். அவ்வாறான சரியான  டைமிங்கோடு  (timing) எடுக்கப்பட்ட  சில  புகைப்படங்கள் எனது கையில் சிக்கிய பொழுது நான் மிகவும் சிரித்து சிரித்து பார்த்து ரசிக்க முடிந்தது. அவற்றில் கொஞ்சத்தை இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் ரசியுங்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.


இது சூப்பர் பாஸ்..

இப்புடித்தான் பல்டி அடிப்பானுங்களோ...


தம்பி நீ பாஸு! ஒண்ட வாயி பெருசுதான்!! 

ஹா ஹா... எப்படா சத்தி எடுப்பானுண்டு இருந்திருப்பான் போல இந்த போட்டோ கிராப்பர்!

இம்ம்புட்டு பெருசா... கையீ...

இது பஞ்சு!! நல்லா வருவா அக்கா நீயி!

நல்லா பறக்குறாரு இவரு... ஐய்..

வானத்தில கொம்பு!!

யோவ்வ்... ஒரு பெரிய மனுஷன் செய்யிற வேலையாயா இது! நன்னாரிப் பயலே!

நோ கொமண்ட்ஸ் ப்ளீஸ்... எப்புடியெல்லாம் பிளானு பண்ணுறானுங்க!

ஐயோ பாவம்....

ஓடு தம்பி ஓடு.. முயற்சி திருவினையாக்கும்!

ஆம்ஸ்ட்ராங் என்னடா ஆம்ஸ்ட்ராங்... நாங்களும் வைப்பம்ல கால! 

இம்புட்டு அழகு!!!

சாரி தம்பி...

அட அழகு குட்டி...

என்னத்த சொல்ல... குட் பெபோமன்சு...

வட போச்சே!

Oooooops!!

அய்....

ஹையோ ஹையோ.....

Popular Posts