Saturday, October 6, 2012

சுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்!

வணக்கம்  நண்பர்களே. அண்மையில்  எனது  தேடலில் கிடைத்த  ஒரு அசத்தலான  மற்றும்  ஆச்சரியமான  விடயம்  இன்றை  உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறேன். காசேதான் கடவுளப்பா என்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல பணக்காறர்களுக்கும் இன்று பொருத்தமான ஒன்றுதான். இன்றெல்லாம்  அதிகமாக  பணமே  அனைத்தையும்   தீர்மானிக்கிறது. பணத்திற்காகவே வாழ்க்கையில் அதிகம் ஓடவேண்டியிருக்கிறது. அதுவும் இல்லையெனில் வாழ்கையில் ஒரு அவசரமான தேடலே இல்லாமல் போய்விடும்.

சரி விடயத்திற்கு வருவோம். உலகில் இருக்கின்ற பணக்கார நாடுகளில் 'அமைதியான பணக்கார நாடு' என சொல்லப்படுவது புரூனே (Brunei). பணத்தின் மேலே தூங்கும் ராயல் அரச குடும்பங்களில் புருனேயின்  சுல்தானும் குடும்பமும் ஒன்று. தற்போதைய  புருனேயின்  சுல்தானாக  இருப்பவர் ஹசன்னல் போல்கியா (Hassanal Bolkiah). இவர் புரூனியின் 29ஆவது சுல்தான்.


உலகின் தற்போதைய முதல் பத்து பணக்கார அரச தலைவர்களின் பட்டியலில்  முதல்  இடத்தில்  இருப்பவர்  இவர்தான். இவருடைய  தற்போதைய  சொத்து மதிப்பு 22 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்தத்தொகை இங்கிலாந்து மகாராணியாரின் சொத்தின் 36 மடங்கு அதிகம்! இவர் ஒரு வாகன விரும்பி. கார்  மற்றும்  ஏனைய  வாகனங்களை  அதிகம் விரும்பும் ஒருவர். இவரிடம்  இருக்கும்  மொத்த சொந்தக்  கார்களின்  எண்ணிக்கை  என்ன  தெரியுமா? 1,932!! உலகின்   முகப்பிரபலமான, விலை மதிப்புள்ள சகல  ரகக் கார்களும்  இவரிடம்  உண்டு. இவரிடம்  உள்ள  கார்களை  ஒவ்வொரு நாளைக்கு  ஒன்றாய்  பயன்படுத்துவதாயின்  இதற்கே 20 ஆண்டுகள் எடுக்கும். 

இவரிடமுள்ள கார்களின் பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்.

Rolls Royce’s - 604 Nos
Mercedes-Benzes - 574 Nos
Ferraris - 452 Nos
Bentleys - 382 Nos
BMWs - 209 Nos 
Jaguars - 179 Nos
Koenigseggs - 134 Nos
Lamborghinis - 21 Nos
Aston Martins - 11 Nos 
SSC - 1 No 

அவ்வ்வ்வ்... வாயை கொஞ்சம் மூடுங்கோ!

இத்தனை கார்களையும் எங்குதான் நிறுத்தி வைத்திருக்கின்றனர் என்று பார்த்தால் இவரது ஐந்து சொந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தோடு சேர்ந்த விசாலமான கட்டடத்தினுள்ளேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை கார்களுக்கும் ஒவ்வொரு பகுதி இந்த கட்டடத்தினுள்ளே இருக்கிறது.கார் விரும்பிகளிற்கு இந்த இடம் ஒரு  சொப்பனமாகவே இருக்கும்.

இவர் பாவிக்கும் சகல பொருட்களும் தங்கத்தாலானவையாகும். இவருடைய உணவருந்து கரண்டி கூட தங்கத்தினாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஏன் இவர் அணியும் ஆடைகளில் கூட பொத்தான் போன்ற பல விடயங்கள் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருக்கிறது.


சுல்தானின் வாசஸ்தலம்:

உலகின் அதிக விசாலமான அதிக சொகுசு நிறைந்த மாளிகையாக இவரது வாசஸ்தலம் விளங்குகிறது. இந்த மாளிகையில் 1788 அறைகள் இருக்கின்றன. அத்தோடு இங்கு காணப்படும் தளபாடங்களில் தங்கம் மற்றும் இரத்தினக் கற்களிலான வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. இந்த மாளிகையில் இருக்கும் தனிப்பட்ட வாகனத் தரிப்பிடத்தில் 110 கார்கள் நிறுத்திவைக்க முடியும்.
சுல்தானின் விமானம்:
 
இவரிடம் ஐந்து சொகுசு விமானங்கள் இருந்தாலும் Boeing 747 எனப்படுகின்ற அதி சொகுசு விமானமே இவராலும் இவர் குடும்பத்தாலும் அதிகம் பிரயானத்திற்காய் பயன்படும்  விமானமாகும். உலகத்திலுள்ள அதி சொகுசு விமானம் என்கின்ற பெருமையையும் இதுவே பெறுகிறது. இவ்விமானம் நூறு மில்லியன் டாலர் பெறுமதியைக் கொண்டது என்றாலும் இந்த விமானத்தின் உட்புறத்தை சொகுசு வீடு போன்று ஆக்குவதற்கு நூறு மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கின்றன. இவற்றைத்தவிர அவரிடம் மேலும் நான்கு விமானங்களும் இரண்டு உலங்கு வானூர்திகளும் இருக்கின்றன. இவரது அதிசொகுசு Boeing 747 இன் படங்கள் இதோ,
 
 
மேலே உள்ள படங்களில் தங்க நிறத்தில் தெரிபவை எல்லாம் சந்தேகமே வேண்டாம் தங்கம் தான்!


சுல்தானின் கார்களில் ஒன்று:

கீழே காணப்படும் இந்தக் கார் சுல்தானின் விசேட வேண்டுகோளிட் கிணங்க Rolls Royce கார் கம்பனியால்  விசேடமாக தயாரித்த கார் ஆகும். இது இப்பொழுது  லண்டனில்   இருக்கிறது. சுல்தானின்  பிரித்தானிய விஜயங்களின் போது  பயன்படுத்துவதற்காய் இந்த கார் லண்டனில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சுல்தானின் மகனின் திருமணம்:

சுல்தானின் மகனின் திருமணம் இடம்பெற்ற வேளையில் இத்திருமண கொண்டாட்டங்கள் 14 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இத்திருமண கொண்டாட்டங்களுக்கான  மொத்த  செலவு  வெறுமனே  5 மில்லியன் டாலர்ஸ்.  (சப்பா...). இத்திருமண  25 நாட்டுத் தலைவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

ரொம்பக் குடுத்துவச்சவன்யா நீயி! அப்பிடி ஒரு அப்பாக்கு மகனாயும் இப்பிடி ஒரு பிகருக்கு புருசனாயும் .......இங்க இவ தலமேல நீட்டிக்கிட்டு இருக்கிறது எல்லாம் தங்கமுங்க தங்கம்!!

இந்த வாகனத்தில தெரியிறதுகூட தங்கம்தான்!!

சுல்தானின் முக்கியமான சமாச்சாரம்:

முக்கியமான சமாச்சாரம் என்றாலே அது சம்சாரம் தானே! இதுவரை சுல்தானிற்கு மூன்று மனைவிமார். கனக்க ஜோசிக்காதேங்கோ மக்கள்ஸ், இவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கையைப் போல மனைவிமாரின் எண்ணிக்கையும் இருக்கும் எண்டுதான் நானும் நெனச்சேன்.. பட் அந்த விசயத்தில இந்த ஆளு ரொம்ப நல்லவரு. மூணோட நிறுத்திட்டாரு!

Raja Isteri Pengiran Anak Saleha - 1965 - Present.

Pengiran Isteri Hajah Mariam - 1982 -2003

Azrinaz Mazhar Hakim - 2005 - 2010

அப்பாடா! இந்த பில்லியனில் தூங்கும் சுல்தான் பத்தி எனக்கு தெரிஞ்சதை எல்லாம் உங்களுக்கும் சொல்லி முடிச்சாச்சு.. சரி வரட்டா ........


7 comments:

ப.கந்தசாமி said...

பொறந்தா புருனே சுல்தானா பொறக்கணும். நம்ம பிறவி எல்லாம் புழி பூச்சிக்கு சமம்தான்.

எல்லாம் சரி, மனுசனுக்கு ராத்திரில தூக்கம் வருமா?

பி.அமல்ராஜ் said...

பழனி.கந்தசாமி said...
பொறந்தா புருனே சுல்தானா பொறக்கணும். நம்ம பிறவி எல்லாம் புழி பூச்சிக்கு சமம்தான்.

எல்லாம் சரி, மனுசனுக்கு ராத்திரில தூக்கம் வருமா?
///

ஹி ஹி ஹி... உண்மைதான் ஐயா... எங்க வரும் அந்த மனுஷனுக்கு தூக்கம்!

Yaathoramani.blogspot.com said...

படங்களும் பதிவும்
பார்க்கப் பார்க்க படிக்கப் படிக்க
பிரமிப்பின் உச்சம் கொண்டு செல்கிறது
சுவாரஸ்யமான பதிவுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

mubarak kuwait said...

இந்த புருனை மக்கள் எப்போதான் புரட்சி செய்வார்களோ தெரிய வில்லை, இஸ்லாமிய சட்டப்படி இவ்வளவு வசதிகளை அனுபவிக்க இவருக்கு எந்த உரிமையும் இல்லை இது பொது மக்களின் சொத்து முறையாக இவர் எல்லோருக்கும் பிரித்து கொடுக்க வேண்டும், இவர் அனுபவிக்கும் வசதிகளை ஒரு போதும் இறைவன் விரும்ப மாட்டான்.
என்ன வசதி வாய்ப்போடு வாழ்ந்தாலும், வயுறு நிரம்பும் மட்டும் தான் உன்ன முடியும் , உடலில் சக்தி உள்ள வரைதான் காமத்தில் ஈடுபட முடியும்
ஒரு நாள் இறக்கும் போது வெறும் கையோடுதான் மண்ணறைக்குள் செல்ல வேண்டும். அனுபவித்த அணைத்து சொத்துகளுக்கும் இறைவனிடம் கணக்கு கொடுக்க வேண்டும், வீண் விரயம் செய்ததுக்கெல்லாம் தண்டனை இருக்கு, நபிகள் நாயகம் இந்த சமூகத்துக்கு வரும் வறுமையை கண்டு அஞ்ச வில்லை, இந்த சமூகத்தில் செல்வம் அதிகம் வந்து விடுமோ எண்டுதான் அஞ்சினார்கள். காரணம் செல்வம் அதிகம் சேர்ந்தால் வழிகேட்டு விட வாய்ப்புக்கள் அதிகம். புருனை சுல்தான் ஒரு உதாரணம். இந்த பகட்டு வாழ்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

kavithaini said...

அருமையான பதிவு............அப்பாடா ஏக்கப் பெருமூச்சு........மெல்ல....மெல்ல...

Unknown said...

என்ன வாழ்க்கைடா சாமி....ஒரு காரை வித்தாலே நாம சுகம்மா இருக்கலாமேப்பா!

Unknown said...

என்ன வாழ்க்கைடா சாமி....ஒரு காரை வித்தாலே நாம சுகம்மா இருக்கலாமேப்பா!

Popular Posts