கவிதைக்குள்ளும்
வசிக்கத் தெரிந்தவள் நீ!
என்
மூச்சுக்காற்றிற்குள்ளும்
முடிச்சிடத் தெரிந்தவள் நீ!
எனது
அழுகைக்கு
அஸ்திவாரம் இட்டவள் நீ!
புலம்பலுக்கும்
புகலிடம் கொடுத்தவள் நீ!
நான் வரைந்த
நீளப்படத்திற்கு
நிறம் கொடுத்தவளும் நீ!
தரம் கொடுத்தவளும் நீ!
கனவில் வந்துபோன
கலியாண காவியத்தின்
நாயகி நீ!
நினைவெங்கும் நீண்டுபோன
நிஜமற்ற கானலின்
நீர்த்துளி நீ!
எல்லாமாய் எழுந்துநின்ற
என்வாழ்க்கை எந்திரத்தின்
மூலம் நீ!
எதுவரை ஓடினும்
இவ்வுலக இன்பத்தின்
பாலம் நீ!
இருப்பினும்,
தேர் ஏறும் நேரமதில்,
தெய்வத்தை களவாடிப்போன
இராட்சசி எங்கே நீ?
3 comments:
''..தேர் ஏறும் நேரமதில்,
தெய்வத்தை களவாடிப்போன
இராட்சசி எங்கே நீ?..''
ரசிக்கும் வரிகள்.
இனிய நல்வாழ்த்து...அமல் ராஜ்.
வேதா. இலங்காதிலகம்.
இறுதி வரிகள் சட்டென
அதிர வைத்துப்போனது
பிரிவின் வேதனையை அழுத்தமாய்
சொல்லிப்போகும் அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
ஆரம்ப வரிகளே அசத்தல் + வித்தியாசமாய் அமைந்துள்ளது
Post a Comment