Saturday, September 1, 2012

இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01

வணக்கம் நண்பர்களே. இன்று இரசிக்கத் தெரிந்தவர்களுக்காக ஒரு அழகான விடயத்தை கொண்டு வருகிறேன். திரும்பவும் இரசிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம். மற்றவர்கள் திரும்பிப் போகலாம்.. ஹி ஹி ஹி...

இரசனை என்பது எல்லை கடந்தது. விசாலமானது. முடிவற்றது. எப்பொழுதும் ஒரு இன்ப உணர்வை உயிர் வழியே ஊற்றுவது. இரசனையை அதிகம் நேசிப்பவர்களுக்கு இது அருமையாய் புரியும். அதேவேளை, ஆளுக்கு ஆள் இந்த இரசனை வேறு படலாம். தப்பில்லை. அது அவரவர் விருப்புக்களைப் (interests) பொறுத்தது. மனிதனிற்கும்  விலங்குகளிற்கும் உள்ள வித்தியாசம் எனப் பேசப்படும் விடயங்களில் இது முதன்மையானது. விலங்குகளும் இரசிக்கின்றன ஆனாலும் மனிதன் அளவு இல்லை.

ஒவ்வொரு விடயங்களிலும் இந்த இரசனை எம்மை கட்டிப்போடும். சாதாரணமாக வீதியிலே நாம் நடந்து செல்லும் பொழுது எத்தனையோ விடயங்களை நாம் இரசிக்க நேர்கிறது. காலநிலை, வாகனங்கள், மனிதர்கள் (மிகவும் முக்கியமாக பிகருகள்...), கடைகள், விலங்குகள், விளம்பரங்கள் என பல.. இரசனை ஒருத்தனிற்கு  இல்லையென்றால் அவன் நடை பிணம் எனலாம். அதிலும் சாதாரணமான மனிதர்களை விட அதிகம் இரசனை கொண்டவர்களும் நம்மத்தியில் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு சின்ன விடயங்களையும் இரசிப்பவர்கள் வாழ்கையில் குடுத்து வைத்தவர்கள். காரணம் அவர்களே வாழ்கையை முழுமையாக வாழ்பவர்கள்.. (ஓவரா பேசுறேனோ..) சரி இன்றைய விடயத்திற்கு வருவோம்..

நான் அதிகம் இரசிக்கும் பல விடயங்களில் இசை, பாடல்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன (பிகர்களுக்கு அடுத்த படியாக..அவ்வ்வ்வவ்). அதிலே தமிழ் சினிமா இசையைத் தாண்டி எனது இரசனை பரந்தது. இசை தேசம், மொழி என பல வரையறைகளைத் தாண்டியது. அந்தவகையில் சினிமாப் பாடல்களை தவிர்த்து (அதோடு சேர்த்து) உள்நாட்டுப் பாடல்கள், நம்மவர் இசை, பிற மொழிப் பாடல்கள், போப் பாடல்கள் என பரந்தது எனது இசை இரசனை. அதன் வழியில் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நான் அதிகம் இரசித்த மூன்று அழகான மலையாளப் பாடல்களை இன்று உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. எனது இரசனை ஓரளவிற்கு உங்களுடைய இரசனையோடு ஒத்துப்போகும் என்பது எனது நம்பிக்கை. சரி இனி அந்த மூன்று பாடல்களும்.

1. நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்....

முதலாவதாக நான் இரசிக்கும் விடயம் இந்த பாடலில் வரும் பொண்ணு.  அவள் சோம்பல் முறிப்பு தொடங்கி யாரோ வருவதை உணர்ந்து பயம் கொள்தல் வரைக்கும் அவள் அத்தனை அசைவுகளும் அழகோ அழகு. அவள் உதடு, கண் இமை, விழிகள், முடி இந்த நான்கும் அவளை அழகு ராணியாக்கும் அம்சங்கள். 3:59 மணி இடத்தில் நாக்கை கொஞ்சமாய் வெளியே நீட்டி நக்கல் செய்வது அழகின் உச்சக்கட்டம்.. சரி அதைத்தாண்டி இந்தப்பாடலின் இசை மற்றும் அதைப்பாடும் நம்ம அலாப் ராஜுவின் குரல் இன்னும் இன்னும் இந்தப் பொண்ணை சாரி பாடலை இரசிக்க வைக்கிறது. பாடல் முழுவதும் ஒரு காதல் அழகு கொட்டிக்கிடக்கிறது.. காதல் மேல் புது ஆசை வருகிறது.. சரி சரி.. பாட்டைப் பாருங்கள்...2. பறயு என் விரகமே...

இந்தப் பாடலில் வரும் பொண்ணைக் காட்டிலும் பையனையே அதிகம் இரசிக்க முடிகிறது. அழகான பையன்... உண்மையாகவே.. எத்தனை பொண்ணுங்க செத்திருப்பாங்க... ஸ்பானிஷில் கோரஸ் பாடும் மச்சான்களின் குரல் சூப்பர். இந்தப் பாடலில் வரும் அக்கா இலங்கையில் இருக்கும் ஒரு சகோதர மொழி நடிகையை ஞாபகப் படுத்துகிறார். வித்தியாசமான அழகு. அழகிய நீண்ட முகம் என்பது இதைத்தானோ?? ஒரு இடத்தில் தனியாக நடனமாடும் விதம் கொள்ளை அழகு. நான் அந்த நடனத்தை மட்டும் மீண்டும் மீண்டும் இரசித்திருக்கிறேன் பல தடவைகள். இதைப் பார்க்க பார்க்க ரொமாண்டிக் மூட் தானாகவே ஒட்டிக்கொள்கிறது... சரி இனி பாடல்.


3. என் ப்ரியனே...

இந்தப்பாடலின் முக்கியமான அழகான விடயங்கள் என்றால் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதம், காட்சியமைப்பு, நடிகர்களின் உடையலங்காரம், அடிக்கடி புருவத்தை உயர்த்த வைக்கும் கிடார் இசை (ஆமா அது கிட்டாரா வீணையா???), மற்றும் பாடல் டியுன்... பாடலில் வரும் காட்சிகளும் அந்த குதிரையும் அழகோ அழகு. காதலின் தேடலை மிக தத்துருவமாக காட்டியிருப்பது இரசனையின் உச்சத்திற்க்கான இன்னுமொரு காரணம். புராதன காலத்து உடையலங்காரம் ஒரு தனி அழகுதான்.. பின்புலக் காட்சிகளை இவ்வளவு அழகாக பாடல்களில் கொண்டுவரலாம் என்பதற்கும், காட்சி பாடலின் உயிரோட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதற்கும் இந்தப் பாடல் நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன்.சரி, அம்புட்டுத்தான்.. இன்று இறைத்தது போதும்.. மீண்டும் இன்னும் சில எனது இரசனைகளோடு உங்களைச் சந்திக்க வருகிறேன். நன்றி வணக்கம்.

6 comments:

Shaifa Begum said...

அட அமலு .. நல்ல ரசனைபா உங்களுக்கு.... ஆழமாக போய் ரசிச்சு இருக்கீங்க..... உங்கள் ரசனை உச்சத்ததுல இருக்கிறதால நாங்களும் உங்க புலோக் போய் ரசிக்கிற பாக்கியம் கிடைச்சது.. நல்ல அருமையான பாடல்கள்.. ரசனைக் குறிப்பும் நீங்கள் எழுதினால் சொல்லவா வேண்டும்....?எல்லாம் நல்லா இருக்கு ..இன்னும் பாடல்களை ஏற்றுங்கள்.. கேட்கிறதுக்கு நாங்க இருக்கோம்....

எஸ்.மதி said...

இதை பத்தி சொல்ல வார்த்தை இல்லை ..காதல் கொட்டி கிடக்குஅண்ணா

பி.அமல்ராஜ் said...

Shaifa Begum(sbegum) said...
அட அமலு .. நல்ல ரசனைபா உங்களுக்கு.... ஆழமாக போய் ரசிச்சு இருக்கீங்க..... உங்கள் ரசனை உச்சத்ததுல இருக்கிறதால நாங்களும் உங்க புலோக் போய் ரசிக்கிற பாக்கியம் கிடைச்சது.. நல்ல அருமையான பாடல்கள்.. ரசனைக் குறிப்பும் நீங்கள் எழுதினால் சொல்லவா வேண்டும்....?எல்லாம் நல்லா இருக்கு ..இன்னும் பாடல்களை ஏற்றுங்கள்.. கேட்கிறதுக்கு நாங்க இருக்கோம்....
///

நன்றி நன்றி.. எதோ நம்மளால முடிஞ்ச அளவு..... நிச்சயமாக நான் ரசிப்பவற்றை தொடர்ந்து எழுதுவேன்... நீங்க மறக்காம இந்தப்பக்கம் வந்து போனால் சரி...

பி.அமல்ராஜ் said...

Mathi said...
இதை பத்தி சொல்ல வார்த்தை இல்லை ..காதல் கொட்டி கிடக்குஅண்ணா
//

எலே, அதுவும் உனக்கு இந்தப்பாடல்கள் ரொம்பவே புடிக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்லே.. பிகாஸ் நீதான் லவ்வுறியே... ஹி ஹி ஹி

Unknown said...

I Like it

priyamudanprabu said...

I know that first song very long before ago.. But the next 2 is new to me.. Good .thanks to share

Popular Posts