Tuesday, July 10, 2012

என்னை கிளறிப்போன உனது தொடுகை..


முதல் தொடுகை..

அவள் தொட்டபோது
மெய் சிலிர்த்தது,
வாய் திறந்தது,
உடலினுள்ளே
ஓராயிரம்
ஒர்கிட்கள் மலர்ந்தது.
இதயம் பீச்சிய
சென்னிறக்குருதியில்
குருதிக்கலங்கள் நாட்டியம் போட்டது.
நாளம் பருத்தது,
நாடி விரிந்தது,
இரத்த அழுத்தம் கூடியதில்
சோணை அறைகள்
வாய் பிளந்தன..
உரோமம் நிமிர்ந்தன,
உணர்வுகள் குவிந்தன,
ஒரே புள்ளியில்.
காம நாடிகள்
நேரம் மறந்து
கட்டியம் கூறின.
ஒரே தொடுகை - இதனால்
ஒவ்வொருநாளும்
தீயிலே படுக்கை.
தொடுகை மறைந்தும்
தொற்றிக்கொண்ட பிரமை
தூக்கம் கெடுத்தன.
தேகத்தின் தட்பம்
தேமா மீட்டரை உடைத்தது.
பற்றிக்கொண்ட காமம்
ஆறாம் அறிவை மறைத்தது.
அவள் தொடுகை - என்
வாழ்க்கை நயாக்கராவை
கண்டபடி குடித்து முடித்தது.
நானோ பரிதவிக்கிறேன்..
அவளோ உயிர்குடிக்கிறாள் ..
தொட்டுப்போன இதழ்கள் எல்லாம்
பனிமூடியும் எரியக்கண்டேன்..
தொடுகைக்கு துணைபோன நெருக்கமெல்லாம்
தூண்டில் மாட்டி சாகக்கண்டேன்..
என்ன தொடுகை அது..
தணல் கொண்ட கட்டை என்னை
கனல் கொண்டு மூட்டிப்போனாள்..
இதன் பின்னும்
எரியாமல் விடுவேனா??
இது காதல்கட்டை
சீக்கிரம் முடிவேனா??
எரிகிறேன்
சுவாலை அணைந்தும்
அனல் தீயில்
அக்கிரமமாய் கருகுகிறேன்.
என்
உயிர் பிழிந்த - அந்த
மூன்று வினாடி
என்
உயிர் போகையிலும்
மறக்காது பெண்ணே..



2 comments:

♔ம.தி.சுதா♔ said...

////தேகத்தின் தட்பம்
தேமா மீட்டரை உடைத்தது////

இரு சொற்களுக்கு மேல் கடக்காமல் கோர்க்கப்பட்ட வரிக் கோர்ப்பில் இந்த இடம் கடக்கையில் கொஞ்சம் ஸ்தம்பிதம் ஆனேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

Anonymous said...

இவ்வளவு சூடு ஆகாது அண்ணே !!! அப்புறம் குளிர் ஜூரம் வந்துடும் !!!

Popular Posts