உனக்காக
உறங்க மறுக்கும்
என்
ஒவ்வொரு கணங்களும்
இறுதியில்
யாருமற்ற - ஒரு
கறுப்பு வெள்ளை கனவிலேயே
முற்றுப்பெறுகிறது..
நீ -
கூட இருந்த போது
காண மறுத்த
கனவுகள்,
இப்பொழுதெல்லாம்
இரவுகளில்
தூண்டிலிடுகின்றன - என்
தீர்ந்துபோன
தூக்கங்களை.
இரவின் நீளம்
எனக்கு தெரியும்
நீ
பிரிந்த பின்னர்.
இரவு கூட
கறுத்ததில்லை
நீ
பிரியும் முன்னர்.
உன்னை
தேடிப்பயணிக்கும்
என்
ஒவ்வொரு ராத்திரியும்
எங்கோ - ஒரு
சுடுகாட்டு கனவிலேயே
முற்றுப்பெறுகிறது..
இருந்தபோது
தள்ளி நின்றதும்,
பிரிந்த போது
ஒட்டிவந்ததும்
என்
சூனிய வாழ்க்கையின்
சூத்திர விஞ்ஞாபனங்கள்.
ஒன்று செய்வேன்.
நீ - என்னை
மறந்த கதையை
என்
இரவிடம்
கொடுத்துவிடுகிறேன்.
என்
பகல்களையாவது - அது
தொந்தரவு செய்யாமல் இருக்கட்டும்.
4 comments:
////இறுதியில்
யாருமற்ற - ஒரு
கறுப்பு வெள்ளை கனவிலேயே
முற்றுப்பெறுகிறது..
////
அட அட அழகு
பிரிதலின் நிமித்தம் பிறந்து வந்த
பூங்கவிதை மிக அழகு சகோதரரே...
என்
பகல்களையாவது - அது
தொந்தரவு செய்யாமல் இருக்கட்டும்.
உறக்கம் கலைக்கும் வரிசையில்....
கனவுகளும் காதலைப்போல கறுப்பு வெள்ளையோ !
Post a Comment