
வேகமாய் போகிறது..
எனது கால்களுக்கோ
சக்கரம் கேட்கிறது..
இருட்டிலும்
ஒளியைத்தேடும்
நம்பிக்கை அவனுடையது..
ஒளியிலும்
இருளில் கிடக்கும்
வாழ்க்கை என்னுடையது.பேருந்துப்படிகளிலும்
வெள்ளைப்பிரம்பு
நம்பிக்கையாய் ஏறுகிறது..
எனது கால்களோ
பிடிமானம் இருந்தும்
பிடிவாதமாய் இருக்கிறது
உயிர் பயத்தில்..
அவன் வாழ்க்கை..
பௌர்ணமி வெளிச்சம்
அவன் நம்பிக்கை..
அவன்
கையில் புத்தகம்,
ஆடையில் சுத்தம்,
பையில் பேனா
கையில் பிரம்பு..
அவனோ நிற்சயமாக
ஏதோ
படிப்பதற்காய்
போய்க்கொண்டிருக்கவேண்டும்..
எனக்கோ,
பையில் கனம்
எல்லாம் பணம்,
கண்ணில் கண்ணாடி - அது
வெயிலுக்கு இதமூட்டி..
வேகமாய் - நான்
போய்க்கொண்டிருப்பதோ
பின்னேர சினிமா..
இந்த
வெள்ளைப்பிரம்பு
வேகமாய் முன்னேறுகிறது
என்னை விட..
பயணத்திலும் சரி
இலட்சியத்திலும் சரி..
பி.அமல்ராஜ்
4 comments:
நல்ல கற்பனை...அருமையாக இருக்கிறது தோழா...
மிக்க நன்றி தோழா..
வணக்கம் அமல் அண்ணா!
நீண்ட நாட்களின் பின் நிறைவான் கவிதையோடு வந்திருக்கின்றீங்க வாழ்த்துக்கள் .
வெள்ளைப்பிரம்பின் நம்பிக்கை சில நேரங்களில் நமக்கும் தேவைதான் உட்சாகம் ஊட்டச்சத்து இந்த மனிதர்கள் தரும் வெளிச்சம் ஜோசிக்க வைக்கும் பலரை!
அருமையா இருக்கு கவிதை.நிறைவாகவும் இருக்கு அமல் !
Post a Comment