Tuesday, April 10, 2012

கேள்விக்குறி பார்வை?


அவர்கள்
கேள்விக் குறிகளுக்குள்ளேயே
தூக்குமாட்டிக்கிடக்கிறது
நம்
தோழமை..

நீ
புன்னகைப்பதும்,
நான்
முகம் மலர்வதும்
அவர்களுக்கு
இன்னும்
காதல் என்றேதான்
மொழி பெயர்க்கப்படுகிறது.

அவர்களுக்கு
ஒன்று
புரியவில்லை..

உனக்கும்
எனக்கும்
உறவில் தூரமில்லை.
உரிமையில் தூரம் இருக்கிறது.

என்னையும்
உன்னையும்
சேர்த்துப் பார்ப்பவர்கள்
ஒன்றை மறந்துவிடுகிறார்கள்
வானும் மண்ணும்
தூரத்தில் முட்டியிருக்கிறது
ஆனால் என்றும்
ஒட்டியதில்லை..

அவர்கள்
ஒப்பனைக் கண்களில்
நாம் என்றும்
தவறானவர்கள்தான்.
தாம்பத்தியத்தை விட
இந்த
தன்னலமற்ற நட்பு
மகத்தானது
நமக்கு.

தோழி,
அவர்கள்
உன்னை
மணமகளாக்கட்டும்
என்னை
மணவாளனாக்கட்டும்
கவலை வேண்டாம்..
காரணம்,
நம்மை
பிரித்துப்பார்ப்பதை விட
எப்படியேனும்
சேர்த்தே பார்த்துக்கொள்ளட்டும்.

4 comments:

மகேந்திரன் said...

ஆண் பெண் நட்பை
மிக அழகாக சொல்லி இருக்கீங்க
சகோதரரே...

சசிகலா said...

அவர்கள்
ஒப்பனைக் கண்களில்
நாம் என்றும்
தவறானவர்கள்தான்.
தாம்பத்தியத்தை விட
இந்த
தன்னலமற்ற நட்பு
மகத்தானது
நமக்கு.
நட்பின் வரிகள் மிகவும் அருமை .

சசிகலா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

சிட்டுக்குருவி said...

கவிதை சூப்பர் நண்பா...

Popular Posts