சப்பா... என்னா வேலை.. முடியல.. அட வணக்கம் நண்பர்களே.. நீண்ட நாட்கள் நம்ம வலைப்பூவிற்கு ஒரு நீண்ட விடுமுறை கொடுத்து மீண்டு வந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடாமல் இருப்பது எப்பொழுதுமே மனதிற்கு ஒரு பாரமாகவே இருக்கும். (இப்ப யாரு அழுதா நீ பதிவு எழுதலையே எண்ணு.. மூடிக்கிட்டு சொல்ல வந்தத சொல்லித்தொலையும்..)
இது நான் எழுதின ஒரு கவிதை பற்றிய கதை.. (கதையாயாயா.. ஓடுங்கடா ஒடுங்க..) கவிதை எழுதும் பொழுது நம்மில் இருந்து நாம் மாறி இன்னொருவராக அல்லது இன்னொரு பொருளாக இருந்து அதன் உணர்வுகளை கவிதையாக எழுதும் அனுபவம் எப்பொழுதுமே அழகானது. நான் அதை அதிகம் ரசிப்பவன். அதிலும் நான் பெண்ணாக மாறி, ஒரு பெண்ணின் உணர்வுகளை எடுத்தியம்பும் எனது கவிதைகளை நான் அதிகம் ரசிப்பவன்..
அவ்வாறு நான் பெண்ணாக மாறி (யோவ்வ்... கற்பனையில்... வாயை மூடும்..) எழுதும் கவிதைகள் அதிகமான விமர்சனங்களுக்கும், கும்மாங்குத்துக்களுக்கும் இலக்காகிய சம்பவங்களும் நிறையவே நடந்திருக்கிறது. அப்படி, இறுதியாக நான் எழுதிய ஒரு கவிதை அநேகரை ரசிக்க வைத்தாலும் சிலர் கும்மாங்குத்து குத்த கிளம்பி வந்திருக்கின்றனர்.
முதலில் அந்த கவிதையை இங்கே பாருங்கள்..
அவர்கள்
என்னைத்தான்
பார்க்கிறார்கள்.
இந்தப் பொழுதுகளில்தான்
நான்
பெண்ணாயிருந்தும்
இந்த
பெண் பிறவியில்
எனக்கு
பரிதாபம்
வந்துவிடுகிறது..
நழுவிய
தாவணியை - குனிந்து
எடுக்க நினைக்கையில்,
அம்மா சொன்ன
அறிவுரை
ஞாபகம் வருகிறது..
ஆடவர் முன்
குனியாதே - அவர்கள்
எப்பொழுதுமே
நம்மில்
அந்தரங்கங்களையே
தேடுகிறார்கள்..
அவசரத்தில் கூட..
இதில் அப்படி என்னதான் இருக்கிறது.. உண்மையைச்சொன்னால் என்னமா விமர்சிக்கிறாங்க.. எப்பொழுதுமே கவிதைகளில் இருக்கும் சில உண்மைத்தன்மைகளை யாருமே கண்டுகொள்வதில்லை. கவிதை என்றாலே வெறும் கற்பனைதான் என்று தங்களுக்குள்ளாகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொள்கிறார்கள் சிலர்.
ஆபாசமாய் கவிதை எழுதுகிறேன் என விமர்சித்த பெண்கள், ஆண்களை வீணாக மிகைப்படுத்திக் தப்பாகக் கூறியிருக்கிறேன் (அவர்கள் பழக்கவழக்கத்தை) என்று ஆதங்கப்பட்டு எனக்கு தகவல் அனுப்பிய ஆண்கள் உங்கள் அனைவரிற்காகவும் நான் கடவுளை மன்றாடுகிறேன்.
நன்றி வணக்கம்.
அப்பாடா... இப்பதான் மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்... ஹி ஹி ஹி..