கைக்குள்ளிருந்த
ஆசை ரேகை
களவு போனபோதுதான்
முதன் முதல் - நம்
தேசத்தின் மேல்
ஆத்திரம் வந்தது.
கையைக்கட்டி
கையொப்பம் இடுங்கள்
என்றபோதுதான்
முதல் முதல்
கண்ணீர் வந்தது
என்
மனித நேயத்திற்கு..
என்
சட்டையில் இருந்த
பொத்தான் கூட
சொல்லாமலே
பிய்க்கப் பட்டபோதுதான் இந்த
ஜனநாயகத்தின் மேல்
நம்பிக்கை போனது..
எங்கள்,
பக்கம் இருந்த
பிள்ளையார் கூட
புத்தர் ஆனபோதுதான்
இந்த
மத நம்பிக்கை மேல்
அவநம்பிக்கை வந்தது.
என்
வார்த்தைகளுக்கு
மற்றவர்கள்
வக்கீல் வைத்து
வாதாடியபோதுதான்
இந்த
பேச்சுரிமை
பிடிக்காமல் போனது
அவர்கள்
என்னை
பைத்தியக்காரன்
என்றபோதுதான் - என்
சுரணைகூட
தூக்கம் கலைந்தது..
என்னை
பொல்லாதவனாய்
அவர்கள்
சித்தரித்த போதுதான்
என்
வியர்வைக்குக் கூட
இறுமாப்பு வந்தது..
அவர்கள்
ஒட்டுமொத்தமாய் என்னை
வெறுத்தபோதுதான்
என்
தராதரம் கூட
சுயகெளரவம்
பார்க்கத் தொடங்கியது.
இறுதியில்,
எல்லாம் தெரிந்தது
எனக்கு.
ஒன்று மட்டும்
புரியவே இல்லை.
இந்த உலகம்
நல்லதா
கெட்டதா??
8 comments:
நாடு இருக்கிற நிலைமையை பார்த்தால் கேட்டவர்களுக்கு இந்த உலகம் நல்லது. நல்லவர்களுக்கு கெட்டது.
நல்ல உலகத்தில கெட்டதும் கலந்திருக்கு சகோ :)கவிதையை வெகுவாய் ரசித்தேன்...
அப்பறம் ஒரு சின்ன சந்தேகம்
எங்கள்,
பக்கம் இருந்த
பிள்ளையார் கூட
புத்தர் ஆனபோதுதான்
இந்த
மத நம்பிக்கை மேல்
அவநம்பிக்கை வந்தது.
அரசர்கள் காலத்தில இந்து சமயம் சைவம் வைணவம் என ரெண்டா பிரிஞ்சிருந்ததா படிச்சிருக்கேன், அதே நேரத்தில பெளத்த மதமும் வேகமா மக்கள் கிட்ட வந்தத பத்தி தான் இந்த வரிகளில் குறிப்பிட்டு இருக்கிறீர்களா? தெரிந்து கொள்ள ஆவல் சகோ, கேட்டதில் தவறு எதுவும் உள்ளதுயெனில் மன்னிக்கவும் :)
இல்லை புதிய தகவல் எதுவும் இந்த வரிகளில் பின்னால் இருந்தால் சொல்லவும் :)
சா.....மிக அருமையான கவிதை//
எங்கள்,
பக்கம் இருந்த
பிள்ளையார் கூட
புத்தர் ஆனபோதுதான்
இந்த
மத நம்பிக்கை மேல்
அவநம்பிக்கை வந்தது
இதுதான் எங்க ஊர்லயும் நடக்குது பாஸ்
அருமையான உணர்சிக் கவிதை சகோதரரே..
இங்கே ஒரு கேள்வி எழுகிறது..
ஜனநாயகம் என்பது என்ன...
நாம் பேசும் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பதுதான் ஜனநாயகம் என ஒருபுறம்
என்ன பேசினாலும் தீர தர்க்கம் செய்து தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்
அதுதான் ஜனநாயகம் என்று நினைப்பவர் ஒருபுறம்...
புரியாத புதிர்தான் இப்புவி வாழ்வு..
ஆனால் ஒன்று
நல்லவன் அடிபட்டுக்கொண்டே இருந்தாலும்
பட்டைதீட்டிய வைரமாக வெளிவருவான்...
இந்த உலகம்
நல்லதா
கெட்டதா??//
தெரியவில்லையே தெரிந்தவர்கள் கூறட்டும் கற்றுக் கொள்வோம் .
இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு அண்ணா ,,வழமை போல கலக்கிட்டிங்க
இறுதியில்,
எல்லாம் தெரிந்தது
எனக்கு.
ஒன்று மட்டும்
புரியவே இல்லை.
இந்த உலகம்
நல்லதா
கெட்டதா??//
ஆமா அமல், விடை தெரியா முடிவின்றிய தேடல்
நொந்த மனதின் வேதனையை படம்போட்டுக்காட்டுகிறது உங்கள் வரிகள்.
Post a Comment