வணக்கமுங்கோ. இந்த விடயத்தை பற்றி நீண்டநாள் எழுதியாற வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று கை கூடுகிறது.
நாம் எல்லோரும் அடிக்கடி பேசும் பல சரியான புரிதல் இல்லாத வார்த்தைகளில் இந்த நட்பு என்பதும் ஒன்று. நட்பு என்னும் பெயரில் நடைபெறும் அழகிய, ஆத்மார்ந்த விடயங்களும், சில நாடகங்களும், சில ஏமாற்று வித்தைகளும் ஆங்காங்கே நாம் கடந்தே வரவேண்டியிருக்கிறது. அதிலும் இந்த நட்பை தேடி அலையும் இளைஞர் பட்டாளத்திற்கு இன்று அதை இலகுவில் கண்டுகொள்ள போதியளவு சந்தர்ப்பங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சரி, முதலில் இந்த நட்பு என்பது என்ன? பிடித்துப்போகும் இரு மனங்களில் உணர்வு ரீதியாக உருவகிக்கப்படும் மற்றவர் சார்ந்த இயைபாக்கம் நட்பு எனலாம். ஆக, இங்கே இரண்டு விடயங்கள் இருக்கவேண்டும் அடிப்படையில். ஒன்று நட்பு கொள்பவரை நமக்கே பிடித்திருக்க வேண்டும். இரண்டாவது எமது சில உணர்வுகள் அந்த குறித்த நபர் 'சார்பான இயைபாக்கம்' கொண்டவையாக இருக்கும்.
பிடிக்காதவர்களுடன் நட்பு ஏற்படாது. அதேபோல, நட்பானவர்களுக்காய் நமது சில விருப்பு வெறுப்புக்கள் சார்புத்தன்மையைக் கொண்டதாக இருக்கும். இது பொதுவான விடயம். இந்த நட்பை ஆத்மார்ந்தமான ஒன்றாக நினைப்பவர்கள் இதன் தாற்பரியத்தை புரிந்துகொள்கிறார்கள். மற்றவர்கள் வெறும் ஒரு சாதாரண சமூக விலங்குக் கோட்பாட்டுடன் (மற்றவருடன் சார்ந்திருத்தல்) முடித்துக்கொள்கிறார்கள்.
இந்த நட்பை வைத்து பூச்சாண்டி காட்டும் சிலரைப் பற்றியதானதே இந்த பதிவு. சிலர், அதிலும் பல பெண்கள் வெளிப்படையாகச் சொல்வார்கள் ஆண்களிடம். 'எனக்கு எல்லா ஆண்களும் ஒரேமாதிரித்தான்..' 'நான் எல்லோருடனும் ஒரே மாதிரியாய்த்தான் பழகுகிறேன்' என்று. இதை அநேக ஆண்கள் கேட்டிருப்பார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ என்னவோ தெரியவில்லை நான் இவர்களை வெறும் முட்டாள்களாகவே பார்க்கிறேன். காரணம் நட்பு பற்றி எதுவுமே தெரியாதவர்களால்தான் இப்படி வசனம் பேச முடியும்.
எமது மனம் (மனித மனம்) எல்லோரையும் ஒரே விதமாய் தன்னகத்தே ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொருத்தரிற்கும் ஒவ்வொரு இடம் கொடுத்தே தன்னில் ஏற்றுக்கொள்கிறது. சிலரிற்கு கொஞ்சம் பெரிய இடம், சிலரிற்கு கொஞ்சம் சிறிய இடம், ஆகவும் கீழான இடம் கொடுப்பவர்கள் மனதினுள் வர முடியாமல் போகிறார்கள். ஆக, எல்லோரையும் ஒரேமாதிரியாய் ஏற்றுக்கொள்வதில்லை நமது மனம். அப்படியிருக்க நட்பு மட்டும் எப்படி எல்லோரிடமும் ஒரேமாதிரியாய் வரும்?
தங்களை குறித்த நபரிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளவே இவ்வாறான வசனங்கள் பேசப்படுகின்றனவே தவிர இதில் எந்த விதமான அடிப்படை உண்மைகளும் இல்லை. எல்லோருடனும் சமனாக அல்லது ஒரே மாதிரியாய் பழகத் தெரிந்தவர்கள் மனதளவில் நலிவுற்றவர்களே. காரணம், இவர்கள் மனம் அனைவரையும் ஒரே மாதிரியாய் ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம். ஆகவே, இவர்களிடத்தில் ஏதோ ஒரு உளவியல் நலிவுத்தன்மை இருக்கும்.அல்லது, இன்னொருவருடனான உறவு தொடர்பாக பாரிய மனமுடைவை சந்தித்தவர்களாகவோ அல்லது ஏதோ ஒரு உறவு முறிவில் பாதிக்கப் பட்டவர்களாகவோ இருப்பர்.


அத்தோடு, அனைவருடனும் ஒரே மாதிரியாய் பழகும் இவர்களால் எப்படி நல்ல நட்பு, உண்மை நட்பு, வெள்ளை நட்பு, கறுப்பு நட்பு, நெருங்கிய நட்பு, உயர்ந்த நட்பு என்றெல்லாம் வகைப்படுத்திப் பார்க்க முடியும். ஆக, இவர்களால் இந்த வகை வகையான எந்த நட்பையும் அனுபவித்துப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது சாகும்வரை.
நட்பை அளக்க முடியும் (measurable). அடிப்படையில் ஒப்பீட்டு முறையில் இலகுவாக இந்த நட்பை அளந்து பார்க்க முடியும். காதலும், கணவன்-மனைவி உறவும் ஒரு நட்புத்தான். நட்பு என்பது ஒரு உறவை ஏற்படுத்தும் ஒரு ஊடகமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
எனவே, இந்த நட்பை ஒருமைப்படுத்துபவர்கள் அல்லது அனைவரிடத்திலும் ஒரேமாதிரியாய் பார்க்கும் சிலர் கொஞ்சம் உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். இந்த போக்கு நீங்கள் போலியானவர்கள் என்பதையே மற்றவர்களுக்கு வெளிப்படுத்துமே ஒழிய நீங்கள் புத்திசாலிகள் என்பதை ஒருபோதுமே வெளிப்படுத்தாது. நல்ல நட்பை அனுபவிப்பவர்கள் எல்லோருடனும் ஒரேமாதிரி நட்பை வைத்திருப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள். நீங்கள் அனைவருடனும் ஒரேமாதிரியாய் பழகும் பக்குவத்தை மாற்றும் வரை நீங்கள் உண்மையான நட்பையோ அல்லது நட்பின் உண்மையான பக்கத்தையோ என்றுமே அனுபவிக்கப் போவதில்லை.
இன்று அறுத்தது போதும்.. ஹி ஹி ஹி ஹி.. வரட்டா..
10 comments:
நீங்க சொல்லுறதும் சரிபோலத்தான் படுகுது.
//இன்று அறுத்தது போதும்.. ஹி ஹி ஹி ஹி.. வரட்டா..//
அட! சைட்ல இந்த பிஸ்னஸ் வேறயா?
நல்ல நட்பு, உண்மை நட்பு, வெள்ளை நட்பு, கறுப்பு நட்பு, நெருங்கிய நட்பு, உயர்ந்த நட்பு
அட நட்புல இவ்வள்வு வெரைட்டியா...அவ்வ்வ்
நட்பைப்பற்றி இந்த்தனை பார்வைகளா,ம்ம் இப்படியும் இருக்கின்றது நட்புப்பாலம் என்பதைச் சொல்லியிருக்கிறீங்க அமல்.
இதில் வலையுலக நட்பைப்பற்றி சொல்லவே இல்ல ஹீ ஹீ(கோர்த்துவிடுவம் இல்ல...)
உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்.எல்லோரிடத்தும் ஒரே மாதிரி இருத்தால் அது நட்பு அல்ல.
அருமை எண்ணங்கள் வாழ்த்துகள்
நிதர்சனமான கருத்துக்கள் அறுவை எல்லாம் இல்லை நண்பரே
நட்பின் பரிமாணங்களை நன்கு அலசி இருக்கிறீர்கள்
சகோதரரே...
நன்று..
உண்மையைத்தானே சொல்லியிருக்கிறிங்க.
!!இன்று அறுத்தது போதும்.. ஹி ஹி ஹி ஹி.//
ஹீ ஹீ அப்படின்னா அடிக்கடி அறுக்கப்போறிங்களா பாஸ்
நல்ல நட்பை அனுபவிப்பவர்கள் எல்லோருடனும் ஒரேமாதிரி நட்பை வைத்திருப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.
நட்பின் முகவரி????
Post a Comment