Wednesday, March 7, 2012

மகளிர்தினம் - பெண்களுக்கு ஒரு மடல்.


அன்பின்
பெண்ணே,

அன்பனின்
அன்புக்கடிதம்.

எனது பேனா,
சிலவேளை
உன்னை
சிரிக்கவைக்கலாம்.
சிலவேளை
கொதிக்கவைக்கலாம்..
கொதித்தாலும் பரவாயில்லை..
தண்ணீர்
கொதிக்கும்வரை - அது
தேநீராவதில்லை..

பெண்ணே,
எனக்கு - நீ
பெண்ணாய் தெரிந்தபோதேல்லாம்
என்
தெய்வமாகவே தெரிகிறாய்.

சிலவேளைகளில்
தெய்வமாயும்
சிலவேளைகளில்
பொய்மையாயும்.

புதுமைப்பெண் - உன்னை
கையெடுத்து கும்பிடுகிறேன்
புதுமையை
உனது
புத்தியில் வை.
கத்தியில் வேண்டாம்.

உன்னை
பலர்
விரும்புகிறார்கள்.
அவர்கள்தான் - உன்னை
பெண்ணாய் பார்ப்பவர்கள்.
சிலர்
வெறுக்கிறார்கள்.
அவர்கள் - இன்னும்
பேயாய்த்தான்  பார்க்கிறார்கள்.
இந்த
பேயாய்ப் பார்ப்பவர்களுக்காய்
பெண்ணாய்ப் பார்ப்பவர்களை
தண்டிக்காதீர்கள்.

உங்கள்
உதடுகளை
சாயமிடுகிறீர்கள்
அழகுதான்,
அவற்றோடு - உங்கள்
வார்த்தைகளுக்கும்
கொஞ்சம் - நாகரீக
சாயம் கொடுங்களேன்..

பத்துமாதம் பொறுப்பது
உங்கள் குலம்.
தலைவணங்குகிறேன்.
அதற்காய்
பத்தே நிமிடத்தில்
எவரையும்
தூக்கி எறியாதீர்கள்
உங்கள் - சுடும்
வார்த்தைகளால்..

உங்களில்
ஒன்றுமட்டும்
எனக்கு
இன்றுவரை
புரிந்ததேயில்லை.
உங்கள்
மனதிற்கும்
உதட்டிற்கும்
ஏன்
இவ்வளவு இடைவெளி..??

உங்களுக்கு
வரம்
கண்ணீர்.
எதிரி
பிடிவாதம்.

 உங்களுக்கு
இரண்டு
குறை
ஒன்று கோவம்
இன்னொன்று பாவம்.

ஊரையே
எரித்தவர்கள் நீங்கள்.
ஏன்
ஊர்வாய்க்குள்
முடிந்துபோகிறீர்கள்?

பெண்ணே,
உங்கள் புன்னகை
சூரியன்..
நாங்களோ
தாமரை..

தாமரைகள்
மலர்வதை
என்றுமே
சூரியன்
வெறுப்பதில்லை.

எப்பொழுதும்
புன்னகையுங்கள்.

உங்களுக்கு
அதிகம் தெரிந்தவை,
ஒன்று
வீட்டு வட்டம்.
இன்னொன்று
பாச விட்டம்.

இவை
இரண்டுமே
உங்களுக்கு
வியாதிகள்தான்..
வலி மட்டுமே கொடுப்பவை.

வீட்டு விட்டத்தை
தாண்டுபவள்
உலகை படிக்கிறாள்.
பாச விட்டத்தை
தாண்டுபவள்
வாழ்க்கையைப் படிக்கிறாள்..

நீங்கள்
உலகையும்
வாழ்வையும்
படித்தாலே போதும்..
பாரதியின் கனவை
பத்திரமாய்
காப்பாற்றி விடுவீர்கள்.

உங்களை
உலகம் சுமக்கவில்லை.
நீங்கள்தான்
உலகை
சுமக்கிறீர்கள்.
தளர்ந்து போகாதீர்கள்,
உலகம்
ஆட்டம் கண்டுவிடலாம்.

இறுதியாய்,
பெண் - எமக்கு  
தாயுமானவள்,
தாரமுமாகுபவள்,
ஆக, - பெண்
எமக்கு  
இரட்டைக் கடவுள்கள்.

இதை
நான்
வாழ்ந்திருக்கிறேன்.
வாழுவேன்.

பெண்களாய் வாழ
பெண்களுக்கு
வாழ்த்துக்கள்.

அன்பன்,
அமல்ராஜ்.


13 comments:

மகேந்திரன் said...

பிறப்பை மெய்ப்பித்திடும்
பொன்னான பிறப்பாம்
பெண் பிறப்பின்
சூட்சுமம் அறிவித்திடும்
அழகிய கவி.......
பகுத்தறிவோடு பெண்ணியம் பேசி
பண்பாடு போற்றி வரும்
பல பெண்களுக்கு வந்தனங்களும்.....
அதையே வெட்டியாய் பேசி
பொழுதை மட்டும் கழிக்கும்
சில பெண்களுக்கு
கண்டிப்புகளும் அருமை.......

மும்தாஜ் said...

உங்கள் கவிதை வரிகளுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

Unknown said...

கவிதை மொத்தமும் அழகு...

இவ்விடம் இரண்டு முறை படிக்க வைத்தது...

இறுதியாய்,
பெண் - எமக்கு
தாயுமானவள்,
தாரமுமாகுபவள்,
ஆக, - பெண்
எமக்கு
இரட்டைக் கடவுள்கள்


கடவுளாய் அல்லாது, சக உயிராய் இருந்திடவே ஆசை கொண்டோம்...

மிக்க நன்றி சகோ பெண்கள் பற்றிய புரிந்துணர்வு கவிதைக்கு....

ஊரையே
எரித்தவர்கள் நீங்கள்.
ஏன்
ஊர்வாய்க்குள்
முடிந்துபோகிறீர்கள்

nice lines sako :)

ஆமினா said...

அருமை சகோ

பி.அமல்ராஜ் said...

மகேந்திரன் said...
பிறப்பை மெய்ப்பித்திடும்
பொன்னான பிறப்பாம்
பெண் பிறப்பின்
சூட்சுமம் அறிவித்திடும்
அழகிய கவி.......
பகுத்தறிவோடு பெண்ணியம் பேசி
பண்பாடு போற்றி வரும்
பல பெண்களுக்கு வந்தனங்களும்.....
அதையே வெட்டியாய் பேசி
பொழுதை மட்டும் கழிக்கும்
சில பெண்களுக்கு
கண்டிப்புகளும் அருமை.......
//

மிக்க நன்றி மகேந்திரன் அண்ணா

பி.அமல்ராஜ் said...

mum said...
உங்கள் கவிதை வரிகளுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

பி.அமல்ராஜ் said...

ரேவா said...
கவிதை மொத்தமும் அழகு...

இவ்விடம் இரண்டு முறை படிக்க வைத்தது...

இறுதியாய்,
பெண் - எமக்கு
தாயுமானவள்,
தாரமுமாகுபவள்,
ஆக, - பெண்
எமக்கு
இரட்டைக் கடவுள்கள்


கடவுளாய் அல்லாது, சக உயிராய் இருந்திடவே ஆசை கொண்டோம்...

மிக்க நன்றி சகோ பெண்கள் பற்றிய புரிந்துணர்வு கவிதைக்கு....

ஊரையே
எரித்தவர்கள் நீங்கள்.
ஏன்
ஊர்வாய்க்குள்
முடிந்துபோகிறீர்கள்

nice lines sako :)
//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

பி.அமல்ராஜ் said...

ஆமினா said...
அருமை சகோ
//

மிக்க நன்றி ஆமினா அக்கா.

K R Rajeevan said...

அமல் கவிதை அருமை என்று பெண்களே சொல்லிவிட்டார்கள்! இனியென்ன? வாழ்த்துக்கள் உங்களுக்கும் பெண்களுக்கும்!!

எஸ்.மதி said...

அமல் அண்ணா கவிதை அருமை,, மிகவும் ரசித்தேன்..

K.s.s.Rajh said...

உங்கள் கவிதைகள் எப்போதும் அழகுதான் பாஸ்

அதே போல தான் இதுவும் மகளீர் தினத்தில் நல்ல ஒரு கவிதை அருமை

Unknown said...

அருமை கவிதை வாழ்த்துகள்.மகளிர்தின நல்வாழ்த்துகள்

Unknown said...

அருமையான கவிதை அமல்.. அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

Popular Posts