வணக்கம் நண்பர்ஸ். நலமா? இன்று ஒரு வாழ்வியல் பதிவு இடலாம் என்று ஒரு குறிக்கோளோடு வந்திருக்கிறேன். யோவ்வ்.. வாழ்வியல் பதிவு எண்டதும் யாரையா ஓட்டம் எடுக்கிறது...???
இன்று நான் பேசப்போகும் ஒரு விடயம், சிலவேளைகளில் நாம் அனைவரும் அன்றாட வாழ்கையில் செய்துகொண்டு அல்லது செய்ய முயற்சித்துக்கொண்டு இருக்கும் ஒன்றுதான். அதாவது, மனிதர்களில் அநேகர் தங்கள் வாழ்கையில் அதிகமான காலங்களை பிரமையிலே கழித்து விடுகிறார்கள். பாவம் இவர்கள். கனவுகாண மறந்து தாங்கள் காணும் பிரமையில் தங்கள் வாழ்கையை கடத்திப்போகிறார்கள். கனவிற்கும் பிரமைக்கும் வித்தியாசம் இருக்கிறது மக்கள்ஸ்.
அது என்ன அந்த பிரமை. அதாவது தாங்கள் நல்லவர்கள். தாங்கள் சிந்திப்பது சரி. தாங்கள் பேசுவது சரி. தங்களை விட வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை.. இவைதான் நான் கூறவரும் அந்த பிரமை. இந்த குறுகிய பிரமை வட்டம் எப்பொழுது வெளியே தென்படும் என்றால் எப்பொழுது அவர்கள் தங்கள் வாய்களை திறக்கிறார்களோ அப்பொழுதுதான்.
இதில் நான் பேச வருவது ஒரு குறித்த விடயம். நாங்கள் எங்களை மட்டுமே தீர்பிடுவதற்கு எமக்கு அதிகாரம் உண்டு. மற்றவர்களை தீர்பிடுவது எமது வேலை அல்ல. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அது கடவுளின் வேலை என்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அது அநாகரீகமான செயல் என்கிறார்கள். அதாவது மற்றவர்களை எப்பொழுதுமே நாம் கூடாத விடயங்களை வைத்தே தீர்பிடுகிறோம்.
சிலர் சிலரை பார்த்து கேலியாய் அல்லது நக்கலாய் சிரிப்பதையும் கைதட்டி நகைப்பதையும் பார்த்து கோவப்படுவதோடு 'கடவுளே இவர்களை மன்னியும்' என்று கூறிவிட்டு செல்லவேண்டி இருக்கிறது. எங்கள் நிலைமைகளையும், எங்களையும் பலர் கேலிசெய்து சிரிக்கிறார்கள் என்பதையும் அறியாது மற்றவர்களை தீர்ப்பிடுவதில் சிலர் மும்முரமாய் இருக்கிறார்கள்.
எமக்கு பிடிக்காதவர்களை எப்பொழுதுமே நாம் அனைத்திலும் எமக்கு கீழேயே வைத்திருக்கிறோம். எமக்கு பிடிக்காதவர்களை நாம் என்றுமே புத்திசாலிகள் என்றோ, நல்லவர்கள் என்றோ எண்ணியதே இல்லை. இதற்கு காரணம் இந்த வன்மையே. வேறு எதுவும் அல்ல. இந்த வன்மைப் போக்கு நம்மை இலகுவாக அவர்களை கேலி செய்து சிரிக்கவும், மட்டம்தட்டி தீர்ப்பிடவும் மிகவும் உதவிபுரிகிறது.
இன்னுமொன்றை பார்த்தீர்களா. நம்மை எத்தனை பேர் கேலியாய் பார்க்கிறார்கள் என்பதை மறந்து நாம் இன்னுமொருவரை கேலியாய், தரம் குறைவாய் பார்க்கிறோம். நாங்கள் இன்னொருவரிற்கு எதிராக ஒரு கல்லை தூக்குகிற பொழுது நமக்கு பின்னே நான்குபேர் நமக்கு எதிராய் கல்லை எடுக்கிறார்கள் என்பதை ஏன் நாம் மறந்து போகிறோம். உங்கள் எதிரியைக்கூட தீர்ப்பிடும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? உங்கள் எதிரியை பாராட்ட வேண்டுமானால் உங்களுக்கு தகுதி இருக்கிறது, ஆனால் அவர்களை தீர்ப்பிட உங்களுக்கு தகுதி இல்லை.
எதிரிகளும், எமக்கு பிடிக்காதவர்களும் எப்பொழுதுமே கெட்டவர்கள், மடையர்கள், எதுவுமே தெரியாதவர்கள் என்று எண்ணுகிற பொழுதே நாம் அடி முட்டாள்கள் ஆகிவிடுகிறோம். புத்திசாலிகள் எப்பொழுதுமே முட்டாள்களை தீர்ப்பிடுவதில்லை. காரணம் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நன்றாகவே புரியும். ஆனால், முட்டாள்களே புத்திசாலிகளை அதிகம் தீர்ப்பிடுகிறார்கள். காரணம், புத்திசாலியின் வலிமையை என்றுமே முட்டாள்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
ஆக, மற்றவர்களை பாராட்டாவிடிலும் நீங்கள் நல்லவர்கள். தயவுசெய்து மட்டமாய் தீர்ப்பிடாதீர்கள். மனிதர்கள் எப்பொழுதுமே ஒரேமாதிரியாய் இருப்பதில்லை. நிலவு என்றும் தேய்ந்துகொண்டே செல்வதில்லை. அதற்கு ஒரு நாள் வளர்பிறையும் வரும். ஒருமுறை தோற்றவர்கள் இனிமேல் தோற்காமலே இருந்துவிடலாம். இருமுறை வென்ற நீங்கள் இனி எப்பொழுதுமே வெல்லாமல் கூட போய்விடலாம். பூக்கள் உதிர்வது அதன் இயலாமை மட்டுமல்ல, காய்களை உருவாக்க வேண்டும் என்கின்ற ஆவேசமுமாய் கூட இருக்கலாம். மனிதர்களை மனிதர்களாய் பாப்போம். மற்றவனை எமக்கு சமனாய் பார்ப்பதில் எமது பக்கம் என்றுமே குறைந்துபோகப் போவதில்லை. மற்றவரை அசிங்கமாய், மட்டம்தட்டி பேசும்பொழுது நம்மையும் இதேபோல எங்கோ ஒருத்தன் கேவலப்படுத்துகிறான் என்பதை மறக்கவேண்டாம்..
சப்பா... இன்னைக்கு கொஞ்சம் சீரியசா போய்ட்டோ நம்ம பதிவு..
15 comments:
// மனிதர்கள் எப்பொழுதுமே ஒரேமாதிரியாய் இருப்பதில்லை.//
simply good.. vaalththukal
கனவிற்கும் பிரமைக்கும் வித்தியாசம் இருக்கிறது மக்கள்ஸ்.//
உண்மை உண்மை நானும் நிறையவே பிரமையில கோட்டை விட்டிருக்கன்.
எங்களையும் பலர் கேலிசெய்து சிரிக்கிறார்கள் என்பதையும் அறியாது மற்றவர்களை தீர்ப்பிடுவதில் சிலர் மும்முரமாய் இருக்கிறார்கள்.//
ஹா ஹா நிரம்ப அனுபவம் போல! கலக்குங்க..
"மற்றவரை அசிங்கமாய், மட்டம்தட்டி பேசும்பொழுது நம்மையும் இதேபோல எங்கோ ஒருத்தன் கேவலப்படுத்துகிறான் என்பதை மறக்கவேண்டாம்.." உண்மை..
இன்று புலம்பல் ஜாஸ்தியாக தான் இருக்கு இதுவும் ஒரு மனநிலையின் வெளிப்பாடுதான்.பிரமை தினரவைக்குது.
அனைவருக்குமான இன்றைய நாளில் அவசியமான
அருமையான கருத்துரை
பகிர்வுக்கு நன்றி
தம்மை வதைத்து மற்றவரை ரசிக்க வைப்பவரும் உள்ளார்கள் ஆனால் பிறரை வதை்த்து தாம் ரசிப்பதில் தான் பலர் இருக்கிறார்கள்...
ஆழமாகச் சொன்னீர்கள் நன்றி சகோ...
மதுரை சரவணன் said...
// மனிதர்கள் எப்பொழுதுமே ஒரேமாதிரியாய் இருப்பதில்லை.//
simply good.. vaalththukal
//
மிக்க நன்றி சகோ.
KANA VARO said...
எங்களையும் பலர் கேலிசெய்து சிரிக்கிறார்கள் என்பதையும் அறியாது மற்றவர்களை தீர்ப்பிடுவதில் சிலர் மும்முரமாய் இருக்கிறார்கள்.//
ஹா ஹா நிரம்ப அனுபவம் போல! கலக்குங்க..
//
ஹி ஹி ஹி... அதுக்காக இப்பிடியெல்லாம் பப்ளிக்ல பேசப்படாது அண்ணே..
Shaifa Begum(sbegum) said...
"மற்றவரை அசிங்கமாய், மட்டம்தட்டி பேசும்பொழுது நம்மையும் இதேபோல எங்கோ ஒருத்தன் கேவலப்படுத்துகிறான் என்பதை மறக்கவேண்டாம்.." உண்மை..
//
வருகைக்கு மிக்க நன்றி பெரியம்மா..
♔ம.தி.சுதா♔ said...
தம்மை வதைத்து மற்றவரை ரசிக்க வைப்பவரும் உள்ளார்கள் ஆனால் பிறரை வதை்த்து தாம் ரசிப்பதில் தான் பலர் இருக்கிறார்கள்...
ஆழமாகச் சொன்னீர்கள் நன்றி சகோ...
//
மிக்க நன்றி சுதா..
தனிமரம் said...
இன்று புலம்பல் ஜாஸ்தியாக தான் இருக்கு இதுவும் ஒரு மனநிலையின் வெளிப்பாடுதான்.பிரமை தினரவைக்குது.
//
வணக்கம் நேசன் அண்ணா, அப்பிடியெல்லாம் ஒன்றும் இல்லை. அவ்வ்வ்வ்..
Ramani said...
அனைவருக்குமான இன்றைய நாளில் அவசியமான
அருமையான கருத்துரை
பகிர்வுக்கு நன்றி
//
மிக்க நன்றி ரமணி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
எதிரிகளும், எமக்கு பிடிக்காதவர்களும் எப்பொழுதுமே கெட்டவர்கள், மடையர்கள், எதுவுமே தெரியாதவர்கள் என்று எண்ணுகிற பொழுதே நாம் அடி முட்டாள்கள் ஆகிவிடுகிறோம்//
உண்மைதாங்க என்ன செய்வது மனித சுபாவமே அதுதானே . சிந்திக்க வைத்த பதிவு .
ஒருமுறை தோற்றவர்கள் இனிமேல் தோற்காமலே இருந்துவிடலாம். இருமுறை வென்ற நீங்கள் இனி எப்பொழுதுமே வெல்லாமல் கூட போய்விடலாம். - அருமையான கூற்று
Post a Comment