Monday, March 5, 2012

ரயில் சித்திரவதை


பதிவு செய்யப்பட்ட
புகையிரத இருக்கையைவிட
வேறு எதுவுமே
எனக்காய்
காத்திருப்பதில்லை.

மெல்ல நகரும்
ரயிலும் - நான்
மென்றே உமிழும்
எச்சிலும்,
இம்முறை
கொஞ்சம்
உஷ்ணமாய்..

என்
ரத்தத்தின் ஓட்டமோ
இந்த
ரயிலின் வேகத்தை
மிஞ்சும்..

யன்னல் தாழ்பாள்
களற்றப்பட்டும்
வேர்த்துக்கொட்டுவது
இங்கே
எனக்கு மட்டும்தான்.

பையில் இருந்த
ரயில் டிக்கெட்டை மறந்து,
டிக்கெட் பரிசோதகரிடம்
இருமுறை
தோற்றதும் நான்தான்..

கையில் இருந்த
புத்தகம்
புரியாமலும்,
காதில் மாட்டிய
இசை
இரைச்சலாயும்
இறுதிவரை இருந்தது,
எனக்கு மட்டும்தான்.

கடந்துவரும்
தண்டவாள ஒலியும்,
யன்னல் கடத்தும்
மஞ்சள் மாலை ஒளியும்
இன்று - என்னுள்
எதுவும் செய்வதாயில்லை.

தொலைபேசி சினுங்கியும்
எடுத்து பேச மனமில்லை.
பிடிமானம் இருந்தும்
எழுந்து நிற்க துணிவில்லை.

வடைக்காரன் கூட
என்
பசியை அறிகிறான்.
வயிறோ
சத்தியாக்கிரகம் செய்கிறது.

எதற்காய்
இன்று
இத்தனை
சித்திரவதை
இந்த ரயிலில்..

என்
முன்னைய இருக்கையில்
ஒருத்தி
அவளைப்போலவே இருக்கிறாள்.

11 comments:

அம்பலத்தார் said...

//என்
முன்னைய இருக்கையில்
ஒருத்தி
அவளைப்போலவே இருக்கிறாள்.//
உங்களை இப்படி பித்துப்பிடிச்சவன்போல அலையவிட்ட அவ எவ? எவளைப்போல இவள்? அதை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா அமல்?

அம்பலத்தார் said...

அருமையான வரிகள்.

பி.அமல்ராஜ் said...

அம்பலத்தார் said...
//என்
முன்னைய இருக்கையில்
ஒருத்தி
அவளைப்போலவே இருக்கிறாள்.//
உங்களை இப்படி பித்துப்பிடிச்சவன்போல அலையவிட்ட அவ எவ? எவளைப்போல இவள்? அதை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா அமல்?
///


என்ன அம்பலத்தார் ஐயா, பொசுக்கெண்டு இப்புடி கேட்டுப்புட்டிய... சரி சரி... ஏன் இது ஒரு கற்பனையா இருக்க கூடாது.. அவ்வ்வ்வ்...

பி.அமல்ராஜ் said...

அம்பலத்தார் said...
அருமையான வரிகள்.
//

நன்றி அங்கிள்

sinnathambi raveendran said...

புதியவடிவங்கள் பிறக்கின்றன.பாராட்டுகள்.ஆனாலும் தங்களுக்கு இப்போ
காதல் ரசனையும் கூடிவிட்டது(joke). வாழ்த்துகள்.

காட்டான் said...

வணக்கம் அமல்!
கவிதை நன்றாக இருக்கிறது. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்று நம்புகிறேன்.. ;-))

பாலா said...

ஹா ஹா என்னோமோ சொல்லப் போறீங்கன்னு பாத்தா, கடைசியில் எல்லோருக்கும் ஏற்பட்ட அதே அனுபவம்தான். எதார்த்தமான கவிதை.

மனசாட்சி said...

யதார்த்தம்...

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அமல்!
கவிதை நன்றாக இருக்கிறது. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்று நம்புகிறேன்.. ;-))
//

அதானே மாமா, திரும்பவும் நாடிடுமா என்ன..

பி.அமல்ராஜ் said...

பாலா said...
ஹா ஹா என்னோமோ சொல்லப் போறீங்கன்னு பாத்தா, கடைசியில் எல்லோருக்கும் ஏற்பட்ட அதே அனுபவம்தான். எதார்த்தமான கவிதை.
//

ஓ... அப்ப பல்ப் வாங்கிட்டீங்களோ பாலா அண்ணா?? ஹி ஹி ஹி நன்றி அண்ணா..

பி.அமல்ராஜ் said...

மனசாட்சி said...
யதார்த்தம்...
//

ம்ம்ம்ம்

Popular Posts