அவர்கள்
காதலர் தினத்தை
கொண்டாடுகிறார்கள்.
நானோ,
செத்துப்போன
எனது
காதலுக்காய்
இரங்கல் கூட்டம்
நடத்துகிறேன்.
உன்னை பிடித்திருக்கிறது
என
பூரித்து
பூச்சொரிகிறது
பல
பூமரங்கள் இன்று.
நானோ,
உதிர்ந்த பூவிற்காய்
ஊர்வலம் நடத்துகிறேன்.
காதலை
பூசிக்கிறார்கள்
பலர் இன்று.
நானோ - நீ
வீசி எறிந்த
என்
இதயத்தை எடுத்து
முதலுதவி செய்கிறேன்....
பிழைக்குமா என்ற
இறுதிநேர
பிரார்த்தனையோடு.
அன்பே,
காலங்கள் கொண்டாடிய
நம் காதல்,
இன்று
மலர்வளையங்களினால்
மந்திரிக்கப்பட்டிருக்கிறது.
காதலர் தினத்தில்
கண்ணீர் அஞ்சலி செய்த
முதல் காதலர்கள்
நாம் தான்.
உனக்கு
என் காதல்
பெரிதல்ல.
எனக்கோ
உன்காதல்
விதியல்லவா..
உன்
கண்ணைப்பார்த்தே
கவிதை சொன்னவன்
நான்.
இன்று,
உன்
கனவிற்காய்
கண்களையல்லவா
எரித்துக்கொண்டிருக்கிறேன்.
அன்பே,
காதலர்கள்
பூச்செண்டு
கொடுக்கிறார்கள்
இன்று.
நீ - ஒரு
மலர் வளையமாவது
வைத்துவிட்டு போ
எனக்கு.
காதலர் தினத்தில்
காதல் சொன்ன
பலரை விட
காதலிற்கு
கல்லறை கட்டிய நாம்
வரலாற்றில்
வல்லவர்கள்.
காதலர் தினத்தில்
கவிழ்கப்பட்ட காதல்
நமதாக மட்டும்
இருக்கட்டும்.
கண்ணீர் கூட
கண்ணீர் வடிக்கும்
கேவலம் கேட்ட
காதல்
நம்மோடு முடிந்திடட்டும்.
காதலர் தினத்தை
கொண்டாடுகிறார்கள்.
நானோ,
செத்துப்போன
எனது
காதலுக்காய்
இரங்கல் கூட்டம்
நடத்துகிறேன்.
உன்னை பிடித்திருக்கிறது
என
பூரித்து
பூச்சொரிகிறது
பல
பூமரங்கள் இன்று.
நானோ,
உதிர்ந்த பூவிற்காய்
ஊர்வலம் நடத்துகிறேன்.
காதலை
பூசிக்கிறார்கள்
பலர் இன்று.
நானோ - நீ
வீசி எறிந்த
என்
இதயத்தை எடுத்து
முதலுதவி செய்கிறேன்....
பிழைக்குமா என்ற
இறுதிநேர
பிரார்த்தனையோடு.
அன்பே,
காலங்கள் கொண்டாடிய
நம் காதல்,
இன்று
மலர்வளையங்களினால்
மந்திரிக்கப்பட்டிருக்கிறது.
காதலர் தினத்தில்
கண்ணீர் அஞ்சலி செய்த
முதல் காதலர்கள்
நாம் தான்.
உனக்கு
என் காதல்
பெரிதல்ல.
எனக்கோ
உன்காதல்
விதியல்லவா..
உன்
கண்ணைப்பார்த்தே
கவிதை சொன்னவன்
நான்.
இன்று,
உன்
கனவிற்காய்
கண்களையல்லவா
எரித்துக்கொண்டிருக்கிறேன்.
அன்பே,
காதலர்கள்
பூச்செண்டு
கொடுக்கிறார்கள்
இன்று.
நீ - ஒரு
மலர் வளையமாவது
வைத்துவிட்டு போ
எனக்கு.
காதலர் தினத்தில்
காதல் சொன்ன
பலரை விட
காதலிற்கு
கல்லறை கட்டிய நாம்
வரலாற்றில்
வல்லவர்கள்.
காதலர் தினத்தில்
கவிழ்கப்பட்ட காதல்
நமதாக மட்டும்
இருக்கட்டும்.
கண்ணீர் கூட
கண்ணீர் வடிக்கும்
கேவலம் கேட்ட
காதல்
நம்மோடு முடிந்திடட்டும்.
8 comments:
அமல் விடுங்க பாஸ். இந்த பஸ் போனால் அடுத்த பஸ் வராமலா போகும்.
என்ன அமல் ரெம்ப நொந்து போனீங்களோ? நல்ல நாளும் அதுவுமா அபச குணமாய்.. ஹி ஹி
Blogger அம்பலத்தார் said...
அமல் விடுங்க பாஸ். இந்த பஸ் போனால் அடுத்த பஸ் வராமலா போகும்.//
ஆமா ஆமா.. அனுபஸ்தர் சொல்கிறார் கேட்டுக்கோங்க அமல். ;-))
காதலர் தினத்தில் படிக்கும் முதலாவது வலி நிறைந்த கவிதை இது தான்.
காலங் கை கூடும் என்று சொல்லுவதை தவிர வேறேதும் தெரியவில்லை.
காதலுக்குப் பூத்தூவும் வலைகளில் இன்று ஒரு தூற்றல்ப்பா படிக்கின்றேன். வலிகள் வரைந்த கவிதை அழகான வார்த்தைகள்.
/
@அம்பலத்தார் சொல்லியாச்சு அடுத்த பஸ்சைப்பாருங்க அமல் அண்ணா!
காதல் ஜெயிச்சா நல்லது, தோத்தா ரொம்ப நல்லது. விட்டுத்தள்ளுங்க....
வலிகள் வரைந்த கவிதை அழகான வார்த்தைகள்.
சோகமான அருமை கவிதை வாழ்த்துகள்.
Post a Comment