Thursday, February 9, 2012

என்னை ஏதோ செய்த ஆட்டக்காரி.ஆடிப்பறித்தவள்
நீ - என்
இதயத்தை..

மிடுக்காய்
ஒழியும் - உன்
சிரிப்பில்
சிதைந்தவன்
இவன்.

விலகும்
சேலைக்குள்
விரல் பதித்து
உயிர் தொலைத்தவன்
இவன்.

அசையும்
இடுப்பில்
என்
இதயத்தை மாட்டி
காமத்தை பறித்தவள்
நீ.

நீ
சிணுங்குவாய்.
என்னுள்
சீறுவானம் வெடிக்கும்.
நீ
ஓரமாய் நெளிவாய்
என்
நெஞ்சம் பத்திக்கும்.

உன்
தகதிமிதாவில்
நர்த்தனம் ஆடின
என்
மோகக் கனவுகள்.

நீ
கூந்தல் விலக்க
என்
ஏந்தல் தொடங்கும்
ஓர்
காதோர
முத்தத்திற்காய்.

நடன களைப்பில்
நளினமாய் குனிவாய்,
கண்கள் மட்டும்
என்னை விட்டு
அங்கேயே சுற்றும்.

நீ
சேலையைச் சொருக,
என்
விழிகள் விலகும்.
காற்றே போகா
உன்
தாவணிக்குள் கூட
என்
தாகம் மேயும்.

பளிங்கு இடையில்
நெளியும் வியர்வை
ஓரமாய் ஒதுங்கும்.
என்
வேகம் கூடும்.
விவேகம் குறையும்.
வேடுவ வீரம்
வீராப்பாய் தோளேறும்.

ஆடி அமர்ந்த
ஆறடி நடனம்
அருகே அமர
ஆங்கே
தொடுகிறேன்.
என்
விரல்களுக்குள் சிக்கியவை
கைகளிலிருக்கும்
உன்
புகைப்படம் மட்டுமே.

12 comments:

தனிமரம் said...

நர்த்தகியின் நடத்திற்கு ஈடாக நடணம் புரிகின்ற உங்கள் காதல் . விரகதாபம் கவிதை சிறப்பு அமல் அண்ணா!

தனிமரம் said...

சேலையைச் சொருக,
என்
விழிகள் விலகும்.
காற்றே போகா
உன்
தாவணிக்குள் கூட
என்
தாகம் மேயும்.
// நர்த்தகி கலையில் இருக்கும் போது காமம் கொண்டவனின் காந்தல் வரிகள் சிலிக்கின்றது .

தனிமரம் said...

பரதக்கலையே அழிந்து போய்க்கொண்டிருக்கும் இந்த தருனத்தில் கலையை வைத்து அருமையான கவிதை தந்ததற்கு ஒரு பூச்செண்டு கொடுக்கனும் அமலுக்கு!

பி.அமல்ராஜ் said...

தனிமரம் said...
பரதக்கலையே அழிந்து போய்க்கொண்டிருக்கும் இந்த தருனத்தில் கலையை வைத்து அருமையான கவிதை தந்ததற்கு ஒரு பூச்செண்டு கொடுக்கனும் அமலுக்கு!//

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நேசன் அண்ணா.

நிரூபன் said...

வணக்கம் அண்ணர்,
ஆட்டக்காரியின் அங்க அசைவில் மனதைத் தொலைத்த கவிஞனின் உணர்வுகளை கவிதை பேசி நிற்கிறது.

வர்ணனைகள் மூலமாகவே கொன்னுட்டீங்களே!

பி.அமல்ராஜ் said...

ஹி ஹி ஹி... நன்றி நிரூ.
றி-ரி யை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

Marc said...

தட தட வென ஓடும் ஓர் தடாக குதிரையாய் கவிதை மிக மிக அருமை

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

@ K.s.s.Rajh said...
K.s.s.Rajh said...
அண்ணே யாரையோ எங்கோ செமையாக ஜொள்ளீருக்கீங்க போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கவிதை அருமையிலும் அருமை

காட்டான் said...

கலக்கல் கவிதை..!!

அம்பலத்தார் said...

அமல் இவ்வளவு விரகதாபத்துடன் அருமையான கவி எழுதவைத்த உங்க மனம் கவர்ந்த அந்தப்பரதக்கலைஞர் யாரோ? இங்கு ஐரோப்பாவில் பெரும்பாலும் பெற்றோரின் விருப்பத்திற்கு மறுப்புக்கூற முடியாமல் பரதம் கற்கும் பிள்ளைகளின் பரதக்கொலையைத்தான் மேடைகளில் பார்க்கமுடியும்.

Popular Posts