Saturday, February 4, 2012

பெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.


என்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம்  இந்த  பெண்கள்தான். என்னம்மாப்  படைத்திருக்கிறான்  இந்த கடவுள்.  அழகாய்  பெண்களையும்  அவர்களுக்காய்  அலையும் ஆண்களையும். ஒரு விதத்தில் கடவுள் பெண்களை இவ்வளவு அழகாயும், ஆண்களை  கவர்ந்திழுக்கும்  வண்ணமும்  படைத்ததற்கு  காரணம் இருக்கிறது.

எப்பொழுதுமே ஆண்கள் பெண்களைப் பார்க்கும் போது ஒரு ஜில் ஜில் உணர்வை கடவுள் பெண்களுக்குள் வைத்துத்தான் இருக்கிறான். பெண்களைப்  பார்த்ததும்  ஒரு  உணர்வு  பத்திக்கணும்.  காமம்  ஒட்டிக்கணும். ஆசை  புட்டுக்கணும். ஆமாங்க அதுதான் கடவுள் பெண்களைப் படைக்கும் பொழுது மனதில் வைத்திருந்த குறிக்கோள்கள்.

காரணம், அப்பொழுதுதான் இனப்பெருக்கத்தில் ஆண்கள் நாட்டம் செலுத்துவார்கள். இனம் பெருக முடியும். அவ்வாறான  ஒரு  ஈர்ப்பும், 'அது'வும் இல்லையென்றால் இந்த வேகமான  உலகில்  எவன்  தான்  இனப்பெருக்கத்திற்காய் உலகத்தை நினைத்து, சந்ததியை நினைத்து பத்து, பதினைந்து நிமிடங்கள் செலவு செய்யப்போகிறான்? இதுதான்  எல்லா  விலங்குகளிலும்  ஆண்களை பெண்கள் ஈர்க்கும் படியாக ஒரு உடல் இச்சை தாகத்தோடு படைத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் சிம்பிள் லாஜிக்.


ஆக, இந்தக்  காரணத்தினாலோ என்னவோ  அவன் (கடவுள்)  பெண்களை ஆண்களுக்கு உசுப்பேத்தும் ஒரு பொருளாகவே படைத்துவிட்டான். இங்கு நம்ம ஆக்கள் பெண்கள் என்றாலே குளு குளு கிளு கிளு என்று திரிகிறார்கள். என்னதான்  சொன்னாலும்  ஆண்களுக்கு  எப்பொழுதும் சந்தோசம் அல்லது ஒரு இன்பத்தைக் கொடுக்கும் ஒரு விடயம் என்றால் அது  பெண்கள்  தான். இதை  ஆண்கள்  அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

பெண்களை இவ்வளவு அழகாய், கவர்ச்சியாய் படைத்துவிட்டால் ஆண்கள் அவர்களை மொய்க்கத்தானே செய்வார்கள். அவர்களை  அடையத்தான் முயற்சிப்பார்கள். இதில் யதார்த்தவியல் முரண்பாடுகள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. அதில் பிழையும் இல்லை. ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்களை ஆண்கள் எப்படி, எங்கு, எதற்காய் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் சரி பிழை இருக்கிறது.

ஒரு பையன் ஒரு பொண்ணைப் பார்த்துவிட்டால் பொண்ணின் தந்தை காய் கூய் என்று வந்துவிடுவார். பொட்டைப் பிள்ளையை பெற்றால் அதை ஆண்பிள்ளை பார்க்காமல் இன்னுமொரு பெண்பிள்ளையா பார்க்கும், ரசிக்கும், ஆசைப்படும்? பெண்களை ஆண்கள் பார்க்கும் பொழுதுதான் பெண்கள் தங்களுள் இருக்கும் பலவகையான உணர்வுகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்கிறது விஞ்ஞான உளவியல்.


பெண்களை பார்த்தாலே, ரூட்டு விட்டாலே பொறுக்கி என்கிறது இந்த சமூகம். எங்களைச் சுற்றி, நம்மை அதிகம் கவரும், நமக்குள் கிளு கிளுப்பை ஏற்படுத்தும் ஒரேயொரு விடயம் இந்த பெண்களாகவே இருக்கும் பொழுது நாம் அதை எப்படி கண்டுக்காமல் இருந்திட முடியும். அப்படி அவர்களை பார்த்தால், சைட் அடித்தால் அந்த பசங்கள் பொறுக்கியா? பெண்கள் எப்பொழுதெல்லாம் சைட் அடிக்கப் படுகிறார்களோ அப்பொழுதுதான் அவர்கள் அழகு, வதனம், அமைப்பு என சகலதும் அம்சம் என உறுதிப்படுத்தப் படுகிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. (ஆய்வு , கீய்வு என்றால் தானே உலகம் நம்ம கருத்தை நம்பும்.. உஷ்... இது நம்ம கருத்து..)

ஆகவே, பசங்க தாராளமாய் பொண்ணுங்கள  ரசிக்கலாம். உங்கள் ரசனை அந்த பெண்களை குஷிப்படுத்துவதாய் இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. மாறாக, எப்பொழுது உங்கள் பார்வை, ரசிப்பு அவர்களை சங்கடப்  படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் பொறுக்கி. அதுவரைக்கும் நீங்கள் நல்லதொரு ரசிகன். அவ்வளவுதான்.


8 comments:

கோவை நேரம் said...

நல்ல விளக்கம்...இனி ஆரம்பிக்கிறேன் ரசிக்க

அம்பலத்தார் said...

என்னமா யோசிக்கிறிங்க! இப்படி ஒரு கிக்கான விஞ்ஞான விளக்கம் எழுதின முத ஆளு. நீங்களாகத்தான் இருப்பிங்க அமல்.

ஹாலிவுட்ரசிகன் said...

இனி எங்க அப்பா திட்டினா இந்தப் பதிவைக் காட்டலாம். ஹி ஹி .. இப்பவே போறேன்.

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணா,

உங்களுக்கும் கலியாண ஆசை வந்திட்டுப் போல
அவ்வ்வ்வ்வ்வ்வ்

கொஞ்சம் உளவியல் கலந்து, பெண்கள் இல்லையேல் ஆண்களின் உலகம் இல்லை என்பதனை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.

K said...

அமல், இந்தப் பதிவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்! இதே சப்ஜெக்டில் நானும் எழுத நினைத்திருந்தேன்! அருமையான விஷயம்!

பெண்களை கடவுள் படைச்சதே ஆண்களுக்காகத்தான்! ஆனால் எமக்குள்தான் ஆயிரம் கட்டுப்பாடுகள்... அர்த்தமில்லாமல்!

KANA VARO said...

நாங்க மனசில நினைக்கிறதை நீங்க எழுத்தாக்கியிருக்கீங்க. சூப்பர்

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!அருமையான பகிர்வு.கடவுளின் ரசனையில் தான் எத்துணை வகை?பல்வேறு மிருகங்கள்,பறவைகள் என்று?கூடவே பெண்களும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

யோவ் வெண்ண பெண்களை நீங்க பாக்கறதுக்கு தான் படைச்சிருக்காங்களா? அப்படிப் பார்க்காம போயிட்டா அவங்களுக்கு வாழ்க்கையே வீணா? ஏன் இனப் பெருக்கம் நல்லா நடக்கட்டும்னு ஆண்களையும் அழகாப் படைச்சிருந்தா பெண்கள் தானாவே வந்து பெத்துக்கொடுத்துட்டுப் போவாங்க இல்ல? அதெப்படி நீ பார்த்துகிட்டு நிற்ப, ஆனா அவ அப்பன் அதையக் கண்டுக்கிடாம போயிடனுமா? வேலையைப் பாத்துட்டு போவியா சும்மா எதுனா கருத்து சொல்லுறேனு உளறிக் கொட்டிக்கிட்டு இருக்கற?

Popular Posts