பருந்துகளும்
நரிகளும்
கூக்குரலிடும்
தினம்.
வண்ணாத்துப் பூச்சியும்
கிலுகிலுப்பை கூட்டமும்
அம்மணமான
தினம்.
வடக்கிலும்
கிழக்கிலும்
சுதந்திரம் இருக்கிறதாம்
காலிமுகத்திடலில்
பறக்கும்
தேசியக்கொடி தான்
சொல்கிறது.
உணவு தருவோம்
என
வயிற்ரை களவாடியது
இந்த சுதந்திரம்.
தாகம் தீர்ப்போம்
என
தொண்டையை
துளைத்தது
இந்த சுதந்திரம்.
உலகம் சிரிக்க
எங்கள்
சுதந்திரக் கனவு
பாதியில் மரித்தது.
அங்கு
கொடுக்காத சுதந்திரத்திற்காய்
கொண்டாட்டம்.
இங்கு
கிடைக்காத சுதந்திரத்திற்காய்
திண்டாட்டம்.
எங்கள்
வீடுகளின் கூரைகளில்
தாராளமாய் சுதந்திரம்.
தாராளமாய் சுதந்திரம்.
வானம் தெரிகிறது.
எங்கள்
வளம் ஜொலிக்கும் நிலங்களில் அளவு கடந்த சுதந்திரம்.
யார் யாரோ விலை பேசுகிறார்கள்.
எங்கள்
உயிர்போன்ற உணர்வுகளுக்கு
சம சுதந்திரம்.
ஊருக்குள் பதினைந்து புத்தர்கள்.
பிள்ளையாரும்
இஜேசுவும்
களவாடப்படுகிறார்கள்.
புத்தர் மட்டும்
புதிதாய் பிறக்கிறார்
ஆங்காங்கே.
இது
மத சுதந்திரமாம்.
ஆலமரங்கள்
போதிமரங்களாவது
யார் சுதந்திரம்?
சங்கிலியன்
துட்டகைமுனுவாவது
எப்படி சுதந்திரம்?
கொழும்பிலோ
இது
சுதந்திரம்.
வடக்கில்
இது
அடக்குமுறை.
கிளிநொச்சிக் காற்றை
கொழும்பிலோ
இது
சுதந்திரம்.
வடக்கில்
இது
அடக்குமுறை.
கிளிநொச்சிக் காற்றை
சிங்களம் பேசவைப்பதும்,
தமிழ் கழுத்தில்
சிங்கள தாலி ஏற்றுவதும்,
கந்தையாவின் நிலத்தில்
கொப்பேக்கடுவவை குடியமர்த்துவதும்,
உங்களுக்கு
வேண்டுமானால் சுதந்திரம்.
எங்களுக்கு?
முதலில்,
எங்கள்
மூச்சையேனும்
எங்கள்
இஷ்டப்படி இழுக்க
விடுங்கள்.
பின்னர்
சுதந்திரம் பற்றி
சுதந்திரமாய்
பேசலாம்.
கடுப்பாக பேசியிருந்தாலும் இன்றையநாள் சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்.
(யோவ்வ்.. நீ மட்டும் என்ன அமெரிக்கனா??? நீங்க கேக்கிறது புரியுது.. விடுங்க சார்.. ப்ளீஸ்...)
10 comments:
Freedom? samy
வணக்கம் அமல்ராஜ் அண்ணா..
ஒரு கவிதையிலேயே ஒட்டுமொத்த அடக்குமுறைகளையும் அடக்கிவிட்டீர்களே!
அதிலும் //எங்கள்
வீடுகளின் கூரைகளில்
தாராளமாய் சுதந்திரம்.
வானம் தெரிகிறது.// என்ற வரிகளில் எம்மவர்களின் இயலாமையையும் அழகாக வடித்துள்ளீர்கள்
வணக்கம் அண்ணா,
சுதந்திர தினத்தின் பின்னே சுதந்திரமற்று இருக்கும் மக்க்ளின் யதார்த்த வாழ்வினை கவிதை சுடும் சொற்களால் சொல்லி நிற்கிறது.
சொற்களால் சுடும் கவிதை
சுதந்திரம் என்ற போர்வையில் எல்லை மீறப்பட்ட சுதந்திரங்களை கவிதைக்கனைகளாக சொல்லியிருக்கும் கவிதை அழகு.
Samy said...
Freedom? samy
//
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
மதுரன் said...
வணக்கம் அமல்ராஜ் அண்ணா..
ஒரு கவிதையிலேயே ஒட்டுமொத்த அடக்குமுறைகளையும் அடக்கிவிட்டீர்களே!
அதிலும் //எங்கள்
வீடுகளின் கூரைகளில்
தாராளமாய் சுதந்திரம்.
வானம் தெரிகிறது.// என்ற வரிகளில் எம்மவர்களின் இயலாமையையும் அழகாக வடித்துள்ளீர்கள்
//
மிக்க நன்றி மது.
ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் said...
வணக்கம் அண்ணா,
சுதந்திர தினத்தின் பின்னே சுதந்திரமற்று இருக்கும் மக்க்ளின் யதார்த்த வாழ்வினை கவிதை சுடும் சொற்களால் சொல்லி நிற்கிறது.
///
வணக்கம் அல்லக்கையாரே, கருத்திற்கு நன்றி
dhanasekaran .S said...
சொற்களால் சுடும் கவிதை
///
மிக்க நன்றி தனசேகரன்.
தனிமரம் said...
சுதந்திரம் என்ற போர்வையில் எல்லை மீறப்பட்ட சுதந்திரங்களை கவிதைக்கனைகளாக சொல்லியிருக்கும் கவிதை அழகு.
///
நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு
Post a Comment