Thursday, February 2, 2012

'ஓகே, மூடிக்கிட்டு இருக்கியா, ஐ நோ'.


வணக்கம் நண்பர்களே, காலையிலேயே  கடுப்பேத்திய விடயம் ஒன்றை பதிவிடுகிறேன். (ஆகக்  குறைந்தது  என்  கடுப்பாவது  தணியட்டும் என்பதற்காக). நாம்  அனைவரும்  கொண்டாடும்  எமது  தாய்வழி விடயங்களில்  இந்த  தாய்  மொழி  மிக  முக்கியமானது. மொழி  என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு உணர்வு சம்மந்தமான விடயமும் கூட. மொழியை ஒரு சந்தோசமான உணர்வாகவே நான் பார்க்கிறேன். அதனால் தான் அந்த மொழியை எம்மால் அழகாக, உணர்ச்சி  பூர்வமாக உச்சரிக்க முடிகிறது.

அதிலும், எமது தமிழ் மொழி என்பது மிகவும் அழகானது. உண்மையில் தாயை அதிகம் நேசிப்பவர்கள் தங்கள் மொழியையும் அவ்வாறே நேசிப்பார்கள் என்று அண்ணா சொல்வது ஞாபகம் வருகிறது. (யோவ்வ்.. எங்க அண்ணா இல்லேங்க, அறிஞர் அண்ணா..அவ்வ்). உண்மையில் அது நியாயமான  வார்த்தைகள்  தான். ஏனெனில்  தாயிற்கும் மொழிக்கும் அப்படியொரு சம்மந்தம் இருக்கிறது.

இன்று காலையில் எழுந்து எனது அறையிலிருந்து வழமைபோல காலை உணவிற்காய் அந்த ஹோட்டலின் காலை உணவிற்காய் உணவருந்தும்
(restaurant) இடத்திற்கு வந்தேன். அங்கு வந்ததும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பூசணிக்காய் அளவில் இரண்டு பொண்ணுகளையும் அவங்களுக்கு முன்னாடி  'பெயார் எவர்'  விளம்பரத்திற்கு  வந்தவர்கள்  போல  இரண்டு பசங்களையும்  ஒரு  வயதான  மனிதரையும்  (இவிங்கள  பெத்தவரா  இருப்பாருன்னு  நினைக்கிறன்) பார்த்தேன். அவர்கள் ஒரு ஓரமாய் உள்ள மேசையில் உட்கார்ந்து போக் ஓடும் (அதுதானுங்க முள்ளுக்கரண்டி)  நயிப் ஓடும்  (ஐயோ  கத்தீங்க)  சண்டை போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கவேண்டியதாய்  ஆயிற்று. நிச்சயமாய்  இவர்கள்  வெளிநாட்டு கனவான்கள் தான்.

நானும், பக்கத்து மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். அவர்கள் மேசையில் இருந்து காதில் விழுவது எல்லாம் ஒன்று கரண்டி-ப்ளேட் சத்தம், இரண்டாவது  நுனி  நாக்கில்  தெறிக்கும்  இங்குலீசு. என்னமா பேசுராங்கையா இங்குலீசு. சேக்ஸ்பியர் இருந்திருந்தா இவங்கட்ட ஆங்கில இலக்கியம் படிச்சுத்தான் நாடகமும் கவிதையும் எழுதியிருப்பாரு போல. நான்  உண்மையிலேயே  நினைத்தேன்  இவர்கள்  நிச்சயமாய் தமிழர்கள் அல்லாதவராகத்தான் இருக்க வேண்டும் என்று. பின்னர், 'போடா சனியனே' என்று ஒரு பெண் குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். அது அவர்கள்  தான். சோ, நிச்சயமா  அவங்க  நம்ம  தமிழங்க  தான்  என்ற முடிவுக்கு வந்துட்டன். பார்த்தீங்களா, அவர்கள் தமிழர்கள் என்பதை மற்றவர்கள் கண்டுகொள்வதற்கு உதவியாய் இருப்பது இந்த 'சனியனே'.

அரை மணி நேரம் நான் அங்கு இருந்ததில் எனது காதில் கேட்ட தமிழ் வார்த்தைகள்  என்றால்  ஒரு  சில  மட்டுமே. அவை  அனைத்தும் சுவாரசியமாய் இருந்தது. 'லூசாடா நீ?', 'கறுமம்..கறுமம்', 'ஐ மிஸ்ட் மை நியூ டூத் பிரஷ்.. நீயாடி ஆட்டைய போட்டது?', 'ஐ வோன்ட் டு கோ தேயார்,  பட்.. அவட மூஞ்சியையே பார்க்க சகிக்கல டாடி.', 'மனுசனாடா நீ, சீ டாடி', 'அட கொக்கா மொக்கா, திஸ் இஸ் ஸ்ரீலங்கா..', 'ஓகே, மூடிக்கிட்டு இருக்கியா, ஐ நோ...', இவ்வளவுதான் தமிழ். அந்த பொண்ணு போட்டிருந்த சட்டையும் அது பேசின தமிழும் ஒரே அளவு.

இதைத்தவிர  ஒரு  தமிழ்  வார்த்தை  கூட  பேசலைங்க. (ஆமா இதுவரைக்கும் மட்டும் எங்க தமிழ் வார்த்த பேசியிருக்காங்களாம்??) ஸ்டைல்லா இங்கிலீசு பேசுறாங்க. ஆனா, வாயில வந்த அந்த ரெண்டு மூணு தமிழ் சொல்லும் மட்டமான வார்த்தைகள். அவர்களிடத்தில் ஒரு விடயத்தைப் பார்த்தேன். சில தமிழ் சொற்களை உச்சரிக்கும் போது வெளிப்படுத்தப்படும் உணர்வு ஆங்கில சொற்களில் இல்லை என்பதால் தான் இடையில் அந்த சொற்களை மட்டும் தமிழில் பேசுகிறார்கள்.


மொழி என்பதும் அவரவர் உரிமைதான். அனாலும், அழகான தாய் மொழி இருக்கும் பொழுது எதற்காக இந்த வேசங்கள்? என்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டில் தமிழை பேசினால் பலர் சிரிக்கலாம் அல்லது  உங்களின்  மரியாதை குறைந்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தாயகத்தில் நீங்கள் தமிழ் பேசினால் தான் உங்களுடன் பேசுபவர் உங்களைப் பற்றி பெருமைப் படுவார் என்பதை மறந்து போகாதீர்கள்.

நான்  உணவை  முடித்துக்கொண்டு, அந்த  ஹோட்டல்  பையனிடம் கேட்டேன். ஆக்சுவலி இவர்கள் யார்? அவன் சொன்னான், சொந்த இடம் யாழ்ப்பாணம்.  அவுஸ்த்ரேலியாவில  இருக்கினமாம். அந்த  அண்ணன், அங்கத்தைய  சிடிசன், மற்ற  எல்லாரும்  போன  வருஷம்  தான்  அங்க போனவங்களாம்.

அட பாவிகளா, வெளிநாடு போய் ஒரு வருஷத்துக்குள்ளேயே தமிழ் போட்டுக்கிச்சா? இவங்கள என்னதான் பண்ணலாம்? தமிழை பேச முடியாத அல்லது தமிழ் கடினமாக இருக்கும் வெளிநாட்டு தமிழர்களை  கொஞ்சம்  மன்னித்துவிடலாம். இவர்களை? எடுப்புக்காகவும், கௌரவத்திற்காகவும், ஸ்டைல் காகவும், சீன் போடுவதற்கும், பந்தா காட்டுவதற்கும் இங்கிலீஸ் பேசும் தமிழர்களை கண்டாலே கடுப்பாகுது சார். அழகான தமிழை வாய் நிறைய, நாவை லாவகமாய் அசைத்து, உச்சரிக்கும் அந்த தமிழ் வார்த்தைகளின் கவர்ச்சியை இவர்கள் எப்பொழுது அறிந்துகொள்ளப் போகிறார்கள்.

பி.கு. நானும்  ஒரு  எடுப்புக்காய்  ஆங்கு  ஆங்கு  தங்கிலீசு  சொற்களா பாவிச்சிருக்கன். நாங்களும் இங்குலீசு பேசுவோமில்ல. ஹி ஹி ஹி..

17 comments:

மகேந்திரன் said...

இன்றைய இளைய தலைமுறையினரின்
ஆங்கில மோகத்தை அப்பட்டமாய் பதிவாக்கியமை
பாராட்டுக்குரியது நண்பரே...
ஆங்கிலம் கலந்து பேசுவது பெருமை எனவும்
தமிழ் பேசுவதால் எந்த புண்ணியமும் இல்லை
எனவும் எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய
இளைய தமிழ்த் தலைமுறையினர் இதைப்
படித்தால் போதும்...

இன்றைய ஊடகங்களே இந்த தவறினை செய்கிறார்கள்..
மக்களை சொல்லி என்ன செய்ய...

கடந்த ஒரு வாரம் முன்பு ஒரு தொலைகாட்சி செய்தி நேரத்தில்
அரசு வேலை கேட்டு ஒரு ஆர்பாட்டம் நடந்ததை காண்பித்தார்கள்..
அங்கே ஒரு இளைய தலைமுறையோன் " வேலை கொடு " எண்டு
எழுதி வைத்திருப்பதற்கு பதிலாக " வேலைக் கொடு" என்று எழுதி
வைத்திருந்தார்...
அதையும் அப்படியே ஒளிபரப்புகிறார்கள்.. என்னத்தைச் சொல்ல...

ஆமினா said...

நானெல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு போனாலும் தமிழ்ல்லதேங்க பேசுவேன்.. இங்கிலீசு பேசுறவிங்களாம் மனுஷங்களா... அதுனால தான் ரொம்ப காலமா இங்கிலிபீசு கத்துக்காமலேயே காலத்த ஓட்டுறேனுங்க்கோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

இதுவும் ஒரு வேசம் தான் நாங்களும் மொழியைத் தெரிந்து கொண்டுவிட்டோம் என்ற எகத்தாளம் ஆனாலும் கனி இருக்க காய் நுகர்வது போல நல்ல தமிழ்வார்த்தைகள் இருக்க இப்படியான இரண்டாம் தரமான வார்த்தை உதிர்க்கும் போது எனக்கும் கடுப்பாகும் என்ன செய்வது இதுதான் சுதந்திரம் என்பவர்கள் மீது சாணியா பூசமுடியும் அண்ணா!

K.s.s.Rajh said...

//// அந்த பொண்ணு போட்டிருந்த சட்டையும் அது பேசின தமிழும் ஒரே அளவு.
////
ஹி.ஹி.ஹி.ஹி அண்ணன் என்னமா கவனிச்சி இருக்கார்

K.s.s.Rajh said...

பாஸ் இப்படி எனக்கு பல அனுபவங்கள் உண்டு பல பதிவுகளை சுட்டிக்காட்டி இருக்கேன் என்ன பன்ணுவது.அந்த பெண்ணின் சட்டையையும்.அவள் ஆங்கிலத்தையும் ரசிக்கவேண்டியதுதான் அவ்வ்வ்வ்வ்

Kanny said...

வெளி நாட்டில் நாய்க்கு கூட இங்கிலீஷ் தெரியும். இங்கிலீஷ் தெரியும் என்ற ஒரே ஒரு பெருமை மட்டும் வைத்து கொண்டு திரியும் (அனைவரும் அல்ல) பெற்றோர்கள். பிள்ளைகள் தறுதலையாக சுத்துதுகள். பெண் பிள்ளைகள் படுக்காத இடம் இல்லை...அனால் யாழ்பாணத்தை பற்றியும் அங்குள்ள பிள்ளைகளை பற்றியும் இங்கு பேசி யாழ்ப்பாணம் இப்ப கெட்டு போட்டாம்... மனைவிக்கு நக்கி கொண்டு திரியும் நாய்கள். நாட்ட பற்றி பேச ஒரு அருகதை இல்ல இந்த நாய்களுக்கு. ஸ்ரீ லங்கா வந்தால் பெரிய படம். மினரல் வாட்டர் உம்.......இன்னும் பல ....இங்க ஸ்டுடென்ட் விசா வில வந்தவன்தான் வேலைக்கு வேணும் ..அவன்தான் கஷ்டத்திலும் நிண்டு பிடிப்பான் எண்டு எங்களை பாட படுத்தி போட்டு தாற சம்பளம்...அவங்கட பிள்ளைகள் மட்டும் toys அஹ வளர்ந்ததுகளாம்...இப்ப எல்லாருக்கும் தெரிய வருது உங்கட கூத்து ...மவனுகள நீங்க சுற்றுலா என்று ஸ்ரீ லங்கா வாங்க ....செருப்பால அடிச்சு நாய் எண்டு கூட மதிக்காம அக்கோணும்...பெரிய எல்லாம் கதைபாங்க ஒரு புது சிம் வாங்கின topup பண்ண தெரியாது...பெரிய எதோ university, college எண்டு எல்லாம் சொல்லுவாங்க அனால் மகளுக்கு ஒரு course online இல apply பண்ண தெரியாது...யாரவது அங்கு வந்து எங்கட நாடு மாத்ரி வராது என்று சொன்னால் சப் என்று ஒண்டு கொடுத்துட்டு...உங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஒரு கேள்விய கேளுங்க...அதுக்கு பதில் தெரியாத நாய்கள்......... எவன் பந்தாஇல்லாம மனிதன் மாதிரி கதைகிறனோ அவன மட்டும் கொஞ்சம் மதிங்க... ஸ்ரீ லங்கா வும் ஒண்டுதான் வெளி நாடும் ஒண்டுதான்...

இது அனைவருக்கும் பொருந்தாது.....இலங்கை தமிழன் 99.9% கு பொருந்தும்.
இங்கு பெரிய பெரிய போஸ்டிங்ல தமிழன் இ ருக்கிறான்...அவங்க நல்லவங்க, நாட்டை பற்றி கதைக்கவும் மாட்டாங்க குறை சொல்லவும் மாட்டாங்க ...பிள்ளைகள் தமிழ் படிக்க ஆசை படுவாங்க...இன்னும் பல ...நேரம் இல்லாததால் மீண்டும் சந்திப்போம் ...

பி.அமல்ராஜ் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா,

உண்மைதான். ஊடகங்களின் பிற்போக்கு மாறும் வரை இந்த மொழி பற்றிய விழிப்புணர்வுகள் என்றுமே மேசைக்கு கீழ்தான் இருக்கும்.

பி.அமல்ராஜ் said...

ஆமினா said...
நானெல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு போனாலும் தமிழ்ல்லதேங்க பேசுவேன்.. இங்கிலீசு பேசுறவிங்களாம் மனுஷங்களா... அதுனால தான் ரொம்ப காலமா இங்கிலிபீசு கத்துக்காமலேயே காலத்த ஓட்டுறேனுங்க்கோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

வணக்கம் ஆமினா அக்கா, இது என்ன கொடுமையா இருக்கு? இங்கிலீசு ஏறாததுக்கு இப்பிடி ஒரு சமாளிபிகேசனா? அவ்வ்வ்வ்...

பி.அமல்ராஜ் said...

தனிமரம் said...
இதுவும் ஒரு வேசம் தான் நாங்களும் மொழியைத் தெரிந்து கொண்டுவிட்டோம் என்ற எகத்தாளம் ஆனாலும் கனி இருக்க காய் நுகர்வது போல நல்ல தமிழ்வார்த்தைகள் இருக்க இப்படியான இரண்டாம் தரமான வார்த்தை உதிர்க்கும் போது எனக்கும் கடுப்பாகும் என்ன செய்வது இதுதான் சுதந்திரம் என்பவர்கள் மீது சாணியா பூசமுடியும் அண்ணா!///


வணக்கம் பாஸ், நம்மால் ஆதங்கப் படுவதைத் தவிர என்ன பண்ண முடியும்? நன்றி பாஸ்.

பி.அமல்ராஜ் said...

K.s.s.Rajh said...
//// அந்த பொண்ணு போட்டிருந்த சட்டையும் அது பேசின தமிழும் ஒரே அளவு.
////
ஹி.ஹி.ஹி.ஹி அண்ணன் என்னமா கவனிச்சி இருக்கார்//

அவ்வ்வ்வ்.. நம்ம வீக்னசு லீக்கா போயிட்டே...

பி.அமல்ராஜ் said...

K.s.s.Rajh said...
பாஸ் இப்படி எனக்கு பல அனுபவங்கள் உண்டு பல பதிவுகளை சுட்டிக்காட்டி இருக்கேன் என்ன பன்ணுவது.அந்த பெண்ணின் சட்டையையும்.அவள் ஆங்கிலத்தையும் ரசிக்கவேண்டியதுதான் அவ்வ்வ்வ்வ்
//

சரியாச் சொன்னீங்க பாஸ். அத விட வேற என்ன பண்ணமுடியும்??? இதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்கம். அவ்வ்வ்வ்..

பி.அமல்ராஜ் said...

நண்பர் கன்னி (Kanny), வணக்கம். உங்கள் கருத்து காத்திரமானது ஆனாலும் அதை சொல்லும் விதத்தை கொஞ்சம் நாகரீகமாக மாற்றலாம் இல்லையா.. புரிந்துகொண்டமைக்கு நன்றிகள்.

காட்டான் said...

வணக்கம் அமல்!
இந்த வெளிநாட்டுக்காரங்க தொல்லைக்கு அளவே இல்லாம போச்சு..!!

பி.அமல்ராஜ் said...

வணக்கம் மாம்ஸ், உண்மைதான்.. அதுவும் இங்க, ஈழத்துக்கு வாரவங்க சாகடிக்கிறாங்கையா ? அதிலையும் ஒரு கொடும என்ன எண்டால், அவர்கள் நினைக்கிறார்கள் போல இங்கு உள்ள எங்களுக்கு இங்கிலீசு, முள்ளுக்கரண்டி, பிஸ்சா இதெல்லாம் தெரியாது எண்டு.. ஐயோ.. ஐயோ..

குறையொன்றுமில்லை. said...

தமிழுக்கு அமுதென்று பேர்.

ஹாலிவுட்ரசிகன் said...

முகப்புத்தகத்தில் (பேஸ்புக்கில்) இன்று பார்த்த ஒரு படம். இந்தப் பதிவுக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இங்கு க்ளிக்கவும்

Unknown said...

Merkur & Ferencia: Merkur & Ferencia Merkur
Merkur & Ferencia merkur - Merkur & 출장샵 Ferencia Merkur in Solingen, Germany - Merkur - https://tricktactoe.com/ Merkur 토토사이트 goyangfc Merkur - MERKUR - Merkur & Ferencia https://febcasino.com/review/merit-casino/ Merkur

Popular Posts