பகலவனுக்கும்
பந்தி வைக்கும்
நாள்.
உலகை உருட்டும்
அவனுக்கு
உலை வைப்பதில்
என்ன தவறு?
செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்.
வயல் பூக்க
வாரிக்கொடுத்தவன்
இந்த
வள்ளல்.
அவனுக்கு
ஒரு பானைப் பொங்கல்..
செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்.
இன்று
புலரும் திங்கள்,
புதுமை செய்யட்டும்.
பொசுங்கிய உடல்களில்,
பிதுங்கிய கண்களில்,
கனத்த கனவுகளில்,
காணாமல் போன சுதந்திரத்தில்,
கண்டித்துப் போன மகிழ்ச்சியில்,
மாரடித்துப்போன சாவுகளில்...
இன்னும்
சவுக்கடி வாங்கும்
தமிழ் மனங்களில்
ஏதாவது
புதுமை செய்யட்டும்..
புதிய திங்கள்
பூவாய்ப் பூக்கட்டும்
தமிழர் மேல்.
பட்ட துன்பங்கள்
பாழாய்ப் போகட்டும்
பாரின் மேல்.
எனது நண்பர்கள், இலக்கிய நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், உறவுகள் அனைவரிற்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
6 comments:
பொங்கிவரும் பொங்கல் போல்
புத்துணர்ச்சி பொங்கட்டும்
தங்கட்டும் எந்நாளும் நிறைவான மகிழ்ச்சியுமே. ....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்.
வயல் பூக்க
வாரிக்கொடுத்தவன்
இந்த
வள்ளல்.
அவனுக்கு
ஒரு பானைப் பொங்கல்..
செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
பாருங்கள் அமல் தமிழர்கள் இயற்கையை எவ்வளவு புரிந்து வைத்துள்ளார்கள் என்று. சூரிய வழிபாடு தமிழர்களை தவிர எங்கும் நான் பார்த்ததில்லை..!!
அருமையான தை திருநாள் கவிதை..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்..!!
நிஜமாவே அருமையான கவிதை அமல்! அதிலும்,
உலகை உருட்டும்
அவனுக்கு
உலை வைப்பதில்
என்ன தவறு?
என்ற வரிகள் மிகவும் அழகானவை + அர்த்தம் உள்ளவை!
மீண்டும் பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா!
வணக்கம் அண்ணா,
இனிய கவிதையினை, எம் இன்னல் நீங்கும் வண்ணம் நாம் பொங்க வேண்டும் எனும் உணர்வோடு கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
//இன்று
புலரும் திங்கள்,
புதுமை செய்யட்டும்.
பொசுங்கிய உடல்களில்,
பிதுங்கிய கண்களில்,
கனத்த கனவுகளில்,
காணாமல் போன சுதந்திரத்தில்,
கண்டித்துப் போன மகிழ்ச்சியில்,
மாரடித்துப்போன சாவுகளில்...
இன்னும்
சவுக்கடி வாங்கும்
தமிழ் மனங்களில்
ஏதாவது
புதுமை செய்யட்டும்..//
அருமையான வரிகள் அமல்.. சிறப்பான கவிதை
மகேந்திரன் said...
பொங்கிவரும் பொங்கல் போல்
புத்துணர்ச்சி பொங்கட்டும்
தங்கட்டும் எந்நாளும் நிறைவான மகிழ்ச்சியுமே. ....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.//
வணக்கம் மகேந்திரன் அண்ணா, மிக்க நன்றி. உங்களிற்கும் பொங்கல் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
Post a Comment