ஐந்தே மீட்டரில்
அவன்.
ஐந்தங்குலப் பார்வையோடு
இவள்.
அவன்
அழைப்பதாயும் இல்லை.
இவள்
நகர்வதாயும் இல்லை.
ஐந்தே மீட்டரில்
ஒரு
சேக்ஸ்பியர் நாடகம்.
அவன்
தொலைபேசி அடிக்க,
ஹலோ சொன்னது
இவள்.
இவள்
கைக்குட்டை
கீழே விழ
வருத்தப்பட்டவன்
அவன்.
அதே
ஐந்து மீட்டர்
அநாதரவாய்...
அவனுக்கும்
இவளுக்கும்
இடையில்.
இறுதியாய்,
அவன்
ஹலோ சொன்னான்,
இவள் முகத்தில்
கிலோக்கணக்கில்
புன்னகை.
நீண்டு
நிமிர்ந்த
நடுவிரலை ஆட்டி,
வா என்றான்
அவன்.
அவளோ,
விரலைக் கடித்தபடி
விடுக்கெனக் குனிந்தாள்
வெட்கத்தில்.
இந்த
ஐந்துநிமிடம் போதும்,
அவள்
வெட்கத்தை
இவன் படிக்க,
இவன்
தட்பத்தில்
அவள் துடிக்க.
மரங்கள்
தலை சாய்த்து நிற்க,
மாலை
மங்கிக் கருக,
வந்த காதல்
இருவரிற்கும்
அதே
ஐந்து மீட்டர் தொலைவில்
அம்மணமாய்..
'நீ சொல்'
இவன் பேச,
'நீயே சொல்'
அவள் வீச,
பார்வைகள் மட்டும்
காதலில்.
இறுதியில்,
அவன் செரும
இவள் நிமிர
'காதலிக்கிறேன்' என்றான்
அவன்.
இவளோ
மனதிற்குள் சொன்னாள்,
'நல்லவேளை
நீ சொன்னாய் - இல்லையேல்
என்
ஈகோவிடம்
நான்
தோற்க வேண்டியிருந்திருக்கும்.
கடந்த
ஐந்து வருடங்களின் பிறகு.."
8 comments:
காதலைச் சொல்லாமல் விடுவதில் ஈகோவும் தடையாகின்றது என்ற விடயத்தை அழகாய்ச் செல்லுகின்றகவிதை.
இன்று எத்தனையோ உறவுகள் சீரழிந்து போவதற்கு இந்த ஈகோ தானே காரணம்! மிக அருமையான வார்த்தைக் கோர்வையில் கவி வடித்துள்ளீர்கள் அமல்! சூப்பர்!
//இவளோ
மனதிற்குள் சொன்னாள்,
'நல்லவேளை
நீ சொன்னாய் - இல்லையேல்
என்
ஈகோவிடம்
நான்
தோற்க வேண்டியிருந்திருக்கும்.
கடந்த
ஐந்து வருடங்களின் பிறகு.."
//
super.. ego vaalththukkal
இன்றைய காதலின் சமநிலையற்ற தன்மையை
அழகாக கவியாக்கியமை மிக நன்று சகோ....
அருமையான கவிதை வாழ்த்துகள்
கவிவரிகள் அவ்வளவு இயற்கையாக வந்திருக்கு. அனுபவத்தில் வந்த கவிவர்கள் போலும்.
வணக்கம் அண்ணர்,
நல்லதோர் கவிதையினைக் கொடுத்திருக்கிறீங்க.
பலரின் காதலுக்கு முன்னால் ஈகோ என்ற ஒன்று தடையாக நிற்கிறது என்பது உண்மை தான்.
வணக்கம் பாஸ்
ஈகோவினால் பல காதல்கள் சொல்லாமலே விடப்பட்டு இருக்கின்றன
உங்கள் கவிதை அருமையாக இருக்கு
Post a Comment