உன்னை
வெறுப்பதற்கு
காரணங்கள்
சொல்லித்தராதே
எனக்கு.
காரணமின்றியே
உன்னை
நேசித்தவன்
நான்.
வெங்காயத்தை வெறுக்க
கண்ணீரிற்கு
உபதேசம் பயனில்லை.
உனது பெயரில்
விலைபோகும்
விபச்சாரியைக் கூட,
கைபிடிக்க
சம்மதிப்பவன்
நான்.
நீ
இல்லையெனில்,
உன்
நினைவோடு
குடும்பம் நடாத்த
பழகிக் கொண்டவன்
நான்.
உன் கழுத்தில்
தாலி ஏறும் வரை,
கனவிலே
உன்கூடவே
தாம்பத்தியம் நடாத்தும்
வித்தை தெரிந்தவன்
நான்.
ஒன்றை
புரிந்துகொள்,
உனக்கும் எனக்கும்
உள்ள பந்தம்,
உணவிற்கும்
உப்பிற்கும் உள்ள
சொந்தம்.
உப்பில்லையேல்
உணவு குப்பையில்,
நீ இல்லையேல்
வாழ்க்கை சாக்கடையில்.
4 comments:
வெங்காயத்தை வெறுக்க
கண்ணீரிற்கு
உபதேசம் பயனில்லை.///
ரசித்தேன் இந்த வரிகளை..
இலகு நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதே உங்கள் தனிச்சிறப்பு.. தொடர்க....
கந்தசாமி. said...
வெங்காயத்தை வெறுக்க
கண்ணீரிற்கு
உபதேசம் பயனில்லை.///
ரசித்தேன் இந்த வரிகளை..
இலகு நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதே உங்கள் தனிச்சிறப்பு.. தொடர்க....
///
வணக்கம் ஐயா, மிக்க மிக்க நன்றிகள்.
இனிய காலை வணக்கம் அண்ணர்,
அவள் இல்லாத வாழ்க்கை நரகம் தான் என்பதனை உவமான, உவமேயங்களூடாகச் சொல்லியிருக்கீறீங்க.
அவள் நினைவுடன் வாழ்வதும் சுகம் தானே!
இப்படியும் ஒருவனால் காதலில் நேர்மையை கடைபுடிக்க முடியுமா?? அழகு அழகு
காதலை ரசித்த ஒருவனால் தான் இப்படியாக வாழமுடியும்
வாழ்த்துக்கள் சகோ
Post a Comment