என்னை
கட்டிப் போடுவதும்
காட்டிக் கொடுப்பதும்
என்
கவிதைகள்தான்.
எனது கவிதை
எங்கும் பேசும்.
ஆனால்,
எனது
கவிதை பற்றி - நான்
எங்கும் பேசியதில்லை.
முட்டிமோதும்
உணர்வுத் தொல்லைகளை
எப்பொழுதுமே
புணர வைப்பவை
எனது
கவிதைகள்.
சிலர்
சொல்வதைப்போல்
வரிகள் அமைக்க
முடிவதில்லை
என்
கவிதைகளில்.
காரணம்,
உணர்வில் பிறக்கும்
வரிகளை
கொலை செய்வதில்
எனக்கு
உடன்பாடு இல்லை.
என்னை
விமர்சிப்பவர்கள்
அதிகம்
நேசிப்பது
என்
கவிதைகளைத்தான்.
இலகுவாக,
இவை
கவிதைகளா
என்பார்கள்?
இரண்டு வரிகளை
இலகுவாய் போட்டாலும்
புருவம் உயர
ரோமம் நிமிர
உணர்வு தித்திக்க
உதிரம் பத்திக்க
உள் மனதில்
ஒரு
வருடல் பிறக்கணும்.
அதுதான்
கவிதை.
இதற்காகவே
பேனா பிடிக்கிறேன்.
இந்த
பேரும் புகழும்
எனக்கும் வேண்டாம்
என்
கவிதைக்கும் வேண்டாம்.
வாசகனுக்காகவே
எழுதுகிறேன்.
என்றும்
என் கவிதைகளை
வாசகம் செய்யவேண்டியது
அவனே.
நான் அல்லன்.
பி.கு. என் அன்பிற்குரிய விமர்சகர் ஒருவரிற்கு எழுதி அனுப்பியது.
16 comments:
வாவ்.....! ஒவ்வொரு வரியும் கலக்கல் அமல்! இதுதான் கவிதை! இப்படித்தான் இருக்கணும் கவிதை! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!
”எனது கவிதை
எங்கும் பேசும்.
ஆனால்,
எனது
கவிதை பற்றி - நான்
எங்கும் பேசியதில்லை.”
இதனால் தான் உங்களைப் பற்றி நாம் நாங்கள் பேசுகிறோம் அமல்! வாழ்த்துக்கள்!
///////
எனது கவிதை
எங்கும் பேசும்.
ஆனால்,
எனது
கவிதை பற்றி - நான்
எங்கும் பேசியதில்லை
//////////
இதுதான் அழகு...
தம் கவிதைகளைப்பற்றி இந்த உலகமே பேச வேண்டும்...
வணக்கம் அமல்!
உண்மைதான் உங்களுக்காக உங்கள் கவிதைகள் பேசுகின்றன.உங்கள் கவிதைக்காக நீங்கள் பேசினால் அது தற்புகழ்ச்சி..!!!!
வாழ்த்துக்கள்..
/////
இரண்டு வரிகளை
இலகுவாய் போட்டாலும்
புருவம் உயர
ரோமம் நிமிர
உணர்வு தித்திக்க
உதிரம் பத்திக்க
உள் மனதில்
ஒரு
வருடல் பிறக்கணும்.
அதுதான்
கவிதை.
////////
இந்த அத்தனையும் கொடுத்தால்தான்
வள்ளுவன் நிற்கிறான்...
பாரதி மீசை இன்னும் இறங்கவேயில்லை...
பாரதிதாசன் இன்னும் வாழ்கிறான்..
கண்ணதாசன் ஒளிர்கிறான்...
வைரமுத்து மிளிர்கிறார்..
இன்னும்... இன்று பிறக்கும் ஒரு கவிஞன வரை...
அவன் கவிதையால் இந்த உலகில் உயிர் வாழ்வான்...
அழகிய படைப்பு அமுல்ராஜ்....
வாழ்த்துக்கள்...
வணக்கம் அமல் அண்ணா,
நான் சொல்ல நினைத்ததை மணி மேலே சொல்லிட்டான்!
உங்கள் படைப்புக்களைப் பற்றி நாம் பேசுவோம்! எம்மைப் போன்ற வாசகர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்!
அது தான் படைப்பாளிக்கு முழு நிறைவைக் கொடுக்கும்!
சிலர் நீண்ட வரிகளில் விளக்கக் கவிதை சொல்வார்கள்.
ஆனால் நீங்களோ சிக்கனமான வரிகளில் சிந்திக்கும் கவி கொடுத்திருக்கிறீங்க.
//இரண்டு வரிகளை
இலகுவாய் போட்டாலும்
புருவம் உயர
ரோமம் நிமிர
உணர்வு தித்திக்க
உதிரம் பத்திக்க
உள் மனதில்
ஒரு
வருடல் பிறக்கணும்.
அதுதான்
கவிதை.//
கவிதைக்கு வரைவிலக்கணம் கவிதையிலே nice
கலக்கிடிங்க அமல்... சரோஜா சாமானிக்கல்லா........
நச்சென்று நல்லாவே எழுதிக்கொண்டு பெயர்மட்டும் புலம்பல் என்று! அடிக்கடி புலம்புங்கோ கேட்க ஆவலாக இருக்கிறன்.
பி.அமல்ராஜ் said...
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
வாவ்.....! ஒவ்வொரு வரியும் கலக்கல் அமல்! இதுதான் கவிதை! இப்படித்தான் இருக்கணும் கவிதை! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!
”எனது கவிதை
எங்கும் பேசும்.
ஆனால்,
எனது
கவிதை பற்றி - நான்
எங்கும் பேசியதில்லை.”
இதனால் தான் உங்களைப் பற்றி நாம் நாங்கள் பேசுகிறோம் அமல்! வாழ்த்துக்கள்!
///
என் மேல் உள்ள நம்பிக்கைக்கும், எனது கிறுக்கல்களை கொண்டாடுவதற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மணி.
கவிதை வீதி... // சௌந்தர் // said...
/////
இரண்டு வரிகளை
இலகுவாய் போட்டாலும்
புருவம் உயர
ரோமம் நிமிர
உணர்வு தித்திக்க
உதிரம் பத்திக்க
உள் மனதில்
ஒரு
வருடல் பிறக்கணும்.
அதுதான்
கவிதை.
////////
இந்த அத்தனையும் கொடுத்தால்தான்
வள்ளுவன் நிற்கிறான்...
பாரதி மீசை இன்னும் இறங்கவேயில்லை...
பாரதிதாசன் இன்னும் வாழ்கிறான்..
கண்ணதாசன் ஒளிர்கிறான்...
வைரமுத்து மிளிர்கிறார்..
இன்னும்... இன்று பிறக்கும் ஒரு கவிஞன வரை...
அவன் கவிதையால் இந்த உலகில் உயிர் வாழ்வான்...
அழகிய படைப்பு அமுல்ராஜ்....
வாழ்த்துக்கள்...
///
மிக்க மிக்க நன்றி சௌந்தர் அண்ணா உங்கள் வாழ்த்துக்கும், உற்சாகத்திற்கும், கருத்திற்கும்.
காட்டான் said...
வணக்கம் அமல்!
உண்மைதான் உங்களுக்காக உங்கள் கவிதைகள் பேசுகின்றன.உங்கள் கவிதைக்காக நீங்கள் பேசினால் அது தற்புகழ்ச்சி..!!!!
வாழ்த்துக்கள்..
///
மிக்க மகிழ்ச்சி மாம்ஸ்.. தேங்க்ஸ்.
நிரூபன் said...
வணக்கம் அமல் அண்ணா,
நான் சொல்ல நினைத்ததை மணி மேலே சொல்லிட்டான்!
உங்கள் படைப்புக்களைப் பற்றி நாம் பேசுவோம்! எம்மைப் போன்ற வாசகர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்!
அது தான் படைப்பாளிக்கு முழு நிறைவைக் கொடுக்கும்!
சிலர் நீண்ட வரிகளில் விளக்கக் கவிதை சொல்வார்கள்.
ஆனால் நீங்களோ சிக்கனமான வரிகளில் சிந்திக்கும் கவி கொடுத்திருக்கிறீங்க.
///
வணக்கம் நிரூபன், மிக்க நன்றிகள்.
அம்பலத்தார் said...
கலக்கிடிங்க அமல்... சரோஜா சாமானிக்கல்லா........
///
நன்றி அம்பலத்தார், ஆமா அதுக்கு ஏன் நம்ம சரோஜாவ கூபிடுறீங்க
யோசிக்க வைத்த -
கவிதை!
arumai!
நிஜக்கவிதையின் நிழல்கள்
பிம்பமாக......
நினைவுகளாக......
வாழ்த்துக்கள்.....
Post a Comment