Thursday, January 26, 2012

காலி செய்து வலி தந்தாய்..



நீண்டு கடந்த
நாட்களின் பின்
தூரத்திலாவது
உன்னை
கண்டபோதுதான்
கனவுகள் மரித்தாலும்
என் - கண்கள்
இன்னும்
உயிர்வாழ்வதை உணர்ந்தேன்.

இமைக்காமல்
பார்த்திருக்கலாம்.
கண்ணுள் வந்த உன்னை
இமைத்து
உடனே
அழித்துவிட
இஷ்டம் இல்லை எனக்கு.

உறக்கத்திலிருந்த
என்
உணர்வுகளின்
பற்றைகளுக்குள்
தீமூட்டிப் போனது
உன்
திடீர் தரிசனம்.

இதயத்தை
காலி செய்தாய்
நேற்று.
பின்னர்,
என்
கண்களுக்குள்
ஏன்
வலி தந்தாய்
இன்று?

உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது,
என்
உறக்கம்
கண்களில்.

காதலியாய்
பார்த்துப் பழகிய
கண்கள்,
கண்டவுடம்
கண்டபடி கூசின.
முதல் முறை
உன்னை
யாரோ ஒருவராய் பார்க்க.

உனக்கும்
எனக்கும்
ஒன்றுதான்
வித்தியாசம்.
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.

22 comments:

மகேந்திரன் said...

புத்தம் புதுசாய் பூத்த
புது மலரின் வாசம் இங்கே கவிதையில் வீசுகிறது சகோ...

பிரிதலும் பிரிதலின் நிமித்தத்தின் அழகிய
வார்த்தைக் கோர்வைகளுடன்
இயல்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்...

பி.அமல்ராஜ் said...

மகேந்திரன் said...
புத்தம் புதுசாய் பூத்த
புது மலரின் வாசம் இங்கே கவிதையில் வீசுகிறது சகோ...

பிரிதலும் பிரிதலின் நிமித்தத்தின் அழகிய
வார்த்தைக் கோர்வைகளுடன்
இயல்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்...///

வணக்கம் அண்ணா, நலமா? எப்பொழுதும் ஓடோடி வந்து என்னை தட்டிக்கொடுக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைவான நன்றிகள்.

கந்தசாமி. said...

இறுதி வரிகள் பிரமாதம் பாஸ் ...

பி.அமல்ராஜ் said...

கந்தசாமி. said...
இறுதி வரிகள் பிரமாதம் பாஸ் ...//

மிக்க மிக்க நன்றி பாஸ்..

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

இரு பொருளில் ஒரு கவிதை என்பதன் அர்த்தம் இக் கவிதையில் தொனிக்கிறது.

ஒன்று காதலியையும் பாடியிருக்கிறீங்க என்று எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்தது நீங்கள் நேசிக்கும், விட்டு விலக முடியாதவாறு உங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் எழுத்தினையும் பாடியிருக்கிறீங்க என்று அர்த்தம் கொள்ளலாம்.

//உனக்கும்
எனக்கும்
ஒன்றுதான்
வித்தியாசம்.
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.
//


இமைக்காமல்
பார்த்திருக்கலாம்.
கண்ணுள் வந்த உன்னை
இமைத்து
உடனே
அழித்துவிட
இஷ்டம் இல்லை எனக்கு.
//

பி.அமல்ராஜ் said...

வணக்கம் நிரூபன்,

நீங்கள் சொல்வது உண்மைதான் நிரூ.. கருத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

dhanasekaran .S said...

உனக்கும்
எனக்கும்
ஒன்றுதான்
வித்தியாசம்.
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.

அருமையான சொல்லாடல் வாழ்த்துகள்

கோகுல் said...

இந்த காதலே இப்படித்தான்.

sasikala said...

நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.
இரு உறக்கத்திற்கும் வித்தியாசம் தந்த வரிகள் அருமை

தீபிகா(Theepika) said...

வழிகிற வலி
காலியான இதயத்தை
கண்ணீரால் நிரப்புகிறது.
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
பிரிவின் வலி மிதக்கிறது.

பி.அமல்ராஜ் said...

dhanasekaran .S said...
உனக்கும்
எனக்கும்
ஒன்றுதான்
வித்தியாசம்.
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.

அருமையான சொல்லாடல் வாழ்த்துகள்//

வணக்கம் நண்பா, வருக. கருத்திற்கு மிக்க நன்றி.

பி.அமல்ராஜ் said...

கோகுல் said...
இந்த காதலே இப்படித்தான///

வணக்கம் கோகுல், நீண்ட நாட்களுக்குப் பிறகு.. நலமா?
உண்மைதான்.. இது உங்கள் அனுபவமாக இருக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். ஹி ஹி ஹி

பி.அமல்ராஜ் said...

sasikala said...
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.
இரு உறக்கத்திற்கும் வித்தியாசம் தந்த வரிகள் அருமை//

வணக்கம் அக்கா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

பி.அமல்ராஜ் said...

தீபிகா(Theepika) said...
வழிகிற வலி
காலியான இதயத்தை
கண்ணீரால் நிரப்புகிறது.
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
பிரிவின் வலி மிதக்கிறது.//

வணக்கம் தீபிகா அக்கா, நலமா? கருத்திற்கு மிக்க நன்றிகள்.

K.s.s.Rajh said...

பாஸ் கவிதை செம பிரமாதமாக இருக்கு
கடைசி வரிகள் சான்சே இல்லை சூப்பர்

காட்டான் said...

அட எல்லாரும் கவிதையை சூப்பர் என்கிறார்களே.. நான்மட்டும் மாற்றியா சொல்லமுடியும்? என்றாலும் அவளை மறக்க எப்படி தூங்க முடியுமாய்யா? ஹி ஹி !!

அழகான கவிதை..!!

பி.அமல்ராஜ் said...

K.s.s.Rajh said...
பாஸ் கவிதை செம பிரமாதமாக இருக்கு
கடைசி வரிகள் சான்சே இல்லை சூப்பர்//

வணக்கம் ராஜ்.. மிக்க சந்தோசம். நன்றி.

பி.அமல்ராஜ் said...

காட்டான் said...
அட எல்லாரும் கவிதையை சூப்பர் என்கிறார்களே.. நான்மட்டும் மாற்றியா சொல்லமுடியும்? என்றாலும் அவளை மறக்க எப்படி தூங்க முடியுமாய்யா? ஹி ஹி !!

அழகான கவிதை..!!
//

வாங்க மாம்ஸ், நீங்களும் கட்டாயம் அப்பிடிதான் சொல்லணும் எண்டு இல்லை. நல்ல கேள்வி மாம்ஸ். தூக்கம் வாறதுதான் கஷ்டம், தூக்கம் வந்துட்டா அப்புறம் எதுவும் ஞாபகம் வராதே.. அதுதான் மேட்டர். ஹி ஹி ஹி.. நன்றி.

♔ம.தி.சுதா♔ said...

////உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது////

என்னைத் தொட்ட இடம் இது தான்...

அருமையாக இருக்கிறது அமல்...

பிரேம் குமார் .சி said...

//உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது,
என்
உறக்கம்
கண்களில்.//மிகவும் பிடித்தது அன்பரே இவ்வரிகள்

பி.அமல்ராஜ் said...

♔ம.தி.சுதா♔ said...
////உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது////

என்னைத் தொட்ட இடம் இது தான்...

அருமையாக இருக்கிறது அமல்...
//


வணக்கம் மதி, வருகைக்கும் உங்கள் தட்டிக்கொடுப்பிற்கும் நன்றிகள்.

பி.அமல்ராஜ் said...

பிரேம் குமார் .சி said...
//உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது,
என்
உறக்கம்
கண்களில்.//மிகவும் பிடித்தது அன்பரே இவ்வரிகள்
//

வணக்கம் பிரேம் குமார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

Popular Posts