கனவு வெளியில்
என்னை
காதல் செய்பவளே,
காதருகே வந்து
ஒரு
காதல்
கதை சொல்.
என்
செவிப்பறை கொஞ்சம்
செம்மையாகட்டும்.
மேகம் எடுத்து - உன்
மோகக் கையால்
ஒரு
கீறல் இடு - என்
தோரணை மூக்கில்.
மூக்குத்துவாரம்
உன்
வாசனையோடு
வாழ்ந்துவிடட்டும்.
எட்டி வந்து - என்
உதடு தொட்டு
ஒரு
கோலம் போடு - உன்
பஞ்சணை இதழால்.
பங்கஸ் ஏறிய
என்
பழைய உதடு
பள பளக்கட்டும்.
வானம் மூடிய - உன்
கருங்கூந்தல் எடுத்து
என்
முகம் மூடு.
வாடிக் களைத்த
என்
திருமுகம் கொஞ்சம்
மறுபடியும் மலரட்டும்.
இல்லையெனில்,
ஓடிவந்து
ஒட்டறை போர்த்திய
என்
ஆறடிக் கிடங்கை
ஆசிர்வதித்துப் போ.
என்
மானங்கெட்ட காதல்
மண்ணோடு
மடியட்டும்
நீயில்லாமல்.
17 comments:
வாழுவதும் வாழாமல் போவதும் உன்னால்தான்
என காதலிக்குச் சொல்லிப் போகும்
உணர்வு பூர்வமான கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி அண்ணா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஒட்டறை போர்த்திய
என்
ஆறடிக் கிடங்கை
ஆசிர்வதித்துப் போ.
அழகிய வரிகள் அருமை
வணக்கம் சசிகலா அக்கா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அழகான சொற்களால் கோர்க்கப்பட்ட
தோற்றமிகு ஆரமாய் கவிதை ஜொலிக்கிறது
அழகு அழகு
ஓட்டறை போர்த்திய அருமையான வார்த்தைக் கோவை கொண்ட காதலின் ஏக்கம் தொனிக்கும் கவிதை அழகு அண்ணா!
அண்ணே..
காதல் வார்த்தையாலே ரசிகர்களின் மனங்களைக் கொன்னுட்டீங்க.
அவள் வந்து தழுவிட ஏங்கும் ஆறடி மேனியின் உள்மன உணர்வினை இங்கே கவிதை அழகுறச் சொல்லுகிறது.
மகேந்திரன் said...
அழகான சொற்களால் கோர்க்கப்பட்ட
தோற்றமிகு ஆரமாய் கவிதை ஜொலிக்கிறது
அழகு அழகு//
மிக்க நன்றி அண்ணா.
தனிமரம் said...
ஓட்டறை போர்த்திய அருமையான வார்த்தைக் கோவை கொண்ட காதலின் ஏக்கம் தொனிக்கும் கவிதை அழகு அண்ணா!//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நிரூபன் said...
அண்ணே..
காதல் வார்த்தையாலே ரசிகர்களின் மனங்களைக் கொன்னுட்டீங்க.
அவள் வந்து தழுவிட ஏங்கும் ஆறடி மேனியின் உள்மன உணர்வினை இங்கே கவிதை அழகுறச் சொல்லுகிறது.//
வணக்கம் நிரூ, மிக்க நன்றி.
அருமையான கவிதை நண்பரே
வணக்கம் தனசேகரன், உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்.
காதல் வரிகள் கவருகின்றன ..வாழ்த்துக்கள்
கோவை நேரம் said...
காதல் வரிகள் கவருகின்றன ..வாழ்த்துக்கள்//
வணக்கம் நண்பரே, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
உணர்ச்சிக்கவிதை - பாராட்டுக்கள்
மனசாட்சி said...
உணர்ச்சிக்கவிதை - பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி நண்பா.
/// உன்
பஞ்சணை இதழால்.
பங்கஸ் ஏறிய
என்
பழைய உதடு
பள பளக்கட்டும்.////
சகோ இப்போது anti fungus பவுடர் சாதாரண மருந்துக் கடைகளிலும் கிடைக்குறது வாங்கிப் போடலாமே.... (லொல்ஸ்)
Post a Comment