வணக்கம் நண்பர்களே. நலமா? இன்றைய பதிவு கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.
எப்பொழுதுமே உணர்வுகள் அழகானவை. என்னைப்பொறுத்த வரையில், மனித வாழ்க்கையை அழகுற பேணுவதில் இந்த உணர்வுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உணர்வுகள் இல்லாத மனிதர்கள் ஏன் விலங்குகள் கூட இல்லை. கல்லையும் நம்மையும் பிரிக்கும் மிக முக்கியமான காரணி இந்த உணர்வுதான். உடலை மற்றவர் மதிக்கக் காரணமாக இருப்பதும் இந்த உணர்வுகள் தான். இந்த உணர்வுகள் இன்றேல் எங்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தாலே தலை சுற்றும்.
இந்த உணர்வுகள் நமது வாழ்க்கையை இன்பமாக மட்டுமே வைத்திருக்கின்றன என்று நான் சொன்னால் நீங்கள் என்னை என்ன செய்வீர்கள் என்று நன்றாகவே புரியும். ஆமாம், உணர்வுகள் எந்தளவிற்கு சந்தோசத்தை கொடுக்கிறதோ அதேபோல பல துன்பங்களுக்கும் அதிகம் காரணமாக அமைந்திவிடுகின்றன என்பதையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இந்த உணர்வுகளே எமது அன்றாட வாழ்வின் அழுகை தொடங்கி காதல் வரை சகலதிற்கும் மிக முக்கியமான காரணங்களாக அமைந்து விடுகின்றன. உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர்கள் உணர்வுகளின் வலிமையை அதிகம் தெரிந்துகொள்வார்கள். அதாவது இந்த உணர்வுகள் வலிமை மிக்கவை. திருமண தொடங்கி தற்கொலை வரை சகல சாதக பாதக மனித செயற்பாடுகளிற்கும் அடிப்படை காரணம் இந்த உணர்வுகள்தான்.
இந்த உணர்வு சம்மந்தப்பட்ட விடயங்களை நம்முடைய உடல் சட்டகத்தில் எந்த அக உறுப்பு கட்டுப்படுத்துகிறது? அது மூளையா அல்லது இதயமா? என்கின்ற கேள்விகள் அந்தக் காலம் தொடங்கி உளவியலை ஆட்டிப்படைத்த ஒரு தர்க்கம் ஆகும். இறுதியாக இந்த உணர்வுகள் ரீதியான அதிகமான செயற்பாடுகளில் இந்த மூளைக்கும் இதயத்திற்கும் யார் கட்டுப்படுத்துவது என்பதில் எப்பொழுதுமே ஒரு தற்காலிக தெளிவின்மை இருப்பதாக சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.
அப்படியெனின், உணர்வு ரீதியான அநேக விடயங்களை இதயம் கட்டுப்படுத்துகிறது. அதற்காக அந்த எல்லா விடயங்களையும் மூளையும் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கில்லை. அதனால் பலதடவைகளில் இந்த மூளையும் இதயமும் முட்டிமோதிக் கொள்கின்றன. சில சந்தர்ப்பங்களில் சில முடிவுகளை எடுப்பதற்கு மூளை முன்மொழிகின்ற வழியையா அல்லது இதயம் முன்மொழிகின்ற வழியையா பின்பற்றுவது என்பதில் மனிதர்கள் அதிக நேரத்தை செலவு செய்து விடுகிறார்கள். எப்பொழுதுமே மூளை அறிவு சார்ந்ததும், நமது இதயம் உணர்வு சார்ந்ததும் என்பதை ஞாபகம் வைத்திருத்தல் வேண்டும்.
நம்மில் அநேகமானவர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் இதயங்களையே பின்தொடர்கிறார்கள். ஒவ்வொருத்தரினுள்ளும் வித்தியாசம் வித்தியாசம் நிறைந்த இதயமும் மூளையும் காணப்படுகிறது என்கிறார் உளவியலாளர் சார்லி ஷீன். இதனாலேயே ஒவ்வொருத்தர் எண்ணங்களும், சிந்தனைகளும், முடிவுகளும், வாழ்க்கை முறைமைகளும் வித்தியாசமடைகின்றன. எப்பொழுதுமே இதயத்தை பின்தொடர்பவர்கள் உணர்வியல் விடயங்களோடு அதிகம் ஒட்டியவர்களாகவே இருக்கிறார்கள். அதிகம் உணர்ச்சிவசப்படும் ஒருத்தனின் இதயமே மூளையை கட்டுப்படுத்துகிறது.
எமக்கு வரும் அதிகமான துன்பங்களுக்கு நாம் அதிகம் நம் இதயத்திற்கு செவி சாய்ப்பதும், இதயத்தை பின் தொடர்வதுமே காரணமாகிப் போகிறது. அதுவும், காதல் போன்ற உணர்வியல் விடயங்களில் அதிகமானோர் தங்கள் இதயங்களை மட்டுமே பாவித்துக்கொள்கிறார்கள். மூளை பாவிக்கப் படுவது இல்லை. திரும்பவும், அறிவு சார்ந்த விடயங்கள் மூளையோடு தொடர்புபட்டவை என்பது எமக்கு தெரியும். எப்பொழுதுமே எமது இதயம் தேனர் நிலையான (positive) பக்கத்தையே அதிகம் சார்வன. அதனாலோ என்னவோ இதயம் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதுமே குறித்த சந்தர்ப்பத்திற்கு சந்தோசமானதாக அமைந்தாலும் பின்னர் துன்பத்தையே கொடுக்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதென்றால் மூளையோடு ஒப்பிடும் பொழுது எமது இதயம் ஆளுமை குறைந்தது எனலாம். ஆளுமை நிறைந்த முடிவுகளை அதிகம் மூளையே எடுக்கிறது.
ஆக, எமது வாழ்வியலில் பல உணர்வு ரீதியான விடயங்களை தனித்தே இதயம் சார்ந்து நோக்காமல் கொஞ்சம் மூளை சார்ந்தும் ஜோசித்தல் அவசியம். அதிலும், இளைஞர்கள் எப்பொழுதுமே வெறும் இதயத்தை மட்டும் பயன்படுத்துவதை குறைத்தல் நீண்ட நோக்கில் நன்மையைத் தரும். காதலில் அதிகம் விழுபவர்கள் வெறும் இதயத்தை மட்டும் கேட்டு செயற்படுபவர்களே என்கிறது அண்மைய உளவியல் ஆய்வு ஒன்று. விசேடமாக காதலில் முடிவுகளை நீங்கள் எட்டும் பொழுது கொஞ்சம் இதயத்தை விலக்கி மூளை சம்மந்தப்படுத்தி சிந்தித்தல் மிக மிக ஆரோக்கியமான ஒன்றாக அமையும். இதயம் சரி என்று சொல்லும் பல விடயங்களை மூளை பிழை என்று சொல்லும். காரணம், இதயம் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. மூளை அறிவை அடிப்படையாகக் கொண்டது.
எப்பொழுதுமே செண்டிமெண்ட் பேசுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் எப்பொழுதும் மூளையை விட இதயத்தையே அதிகம் நம்புபவர்கள். இவர்கள் வாழ்க்கை முறை குறுகிய கால சந்தோசம் என்கின்ற இலக்கைக் கொண்டதே தவிர நீண்ட கால நோக்கு இல்லை. அதிகமான இளைஞர்கள் உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுத்தே தங்கள் வாழ்க்கைகளை அழித்துக்கொள்கிறார்கள். சுகத்திற்காக போ என்று சொல்லும் இதயம், அதனால் வரும் பின் விளைவை மூளை ஜோசிக்கும் வரை தாமதிப்பதில்லை. இதனாலேயே அதிக இளவயது பாலியல் தவறுகள் நிகழ்கின்றன.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இதயம் சொல்வது எப்பொழுதும் ஜாலியாக இருக்கும் ஆனால் பின்னர் வரும் அதன் விளைவு கஷ்டமாக இருக்கும். மூளை சொல்வது எப்பொழுதும் கஷ்டமாக இருக்கும் ஆனால் விளைவு சந்தோசமிக்கதாகவும், உங்களுக்கு நன்மை பயப்பனவாயும் இருக்கும். இதயத்தை கூடவே வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் மூளை சொல்வதையே செய்யுங்கள். உங்கள் உணர்வு ரீதியான வாழ்வியல் சிறக்கும்.
13 comments:
பார்த்தால் இதயமும் மூளையும் கணவன் மனைவி போல் இருக்கிறது....
வணக்கம் அண்ணா,
உணர்வுகள் தான் மனிதனை இயக்குகின்றன என்பதனை உளவியலுடன் ஒப்பிட்டு விளக்கிச் சொல்லியிருக்கிறீங்க.
நல்லதோர் பதிவு.
வாழ்க்கையில் எமது படிநிலைகள் ஒவ்வொன்றையும் கடக்கும் போது சிந்திக்க தூண்டும் பதிவு.
வேல் தர்மா said...
பார்த்தால் இதயமும் மூளையும் கணவன் மனைவி போல் இருக்கிறது....
ஹி ஹி ஹி.. உண்மை போலதான் தெரிகிறது.. அனுபவம் இல்லை பாஸ்..
நிரூபன் said...
வணக்கம் அண்ணா,
உணர்வுகள் தான் மனிதனை இயக்குகின்றன என்பதனை உளவியலுடன் ஒப்பிட்டு விளக்கிச் சொல்லியிருக்கிறீங்க.
நல்லதோர் பதிவு.
வாழ்க்கையில் எமது படிநிலைகள் ஒவ்வொன்றையும் கடக்கும் போது சிந்திக்க தூண்டும் பதிவு.
வணக்கம் நிரூபன். நலமா? மிக்க நன்றி.
வணக்கம் பாஸ்
மிக அருமையாக சொல்லியிருக்கிறீங்க நல்ல பகிர்வு
உணர்வுகள் தான் எப்பவும் மனிதனை ஆழ்கின்றன.உணவற்ற மனிதன் வெரும் ஜடமே
K.s.s.Rajh said...
வணக்கம் பாஸ்
மிக அருமையாக சொல்லியிருக்கிறீங்க நல்ல பகிர்வு
உணர்வுகள் தான் எப்பவும் மனிதனை ஆழ்கின்றன.உணவற்ற மனிதன் வெரும் ஜடமே
வணக்கம் பாஸ்.. உண்மைதான்.. கருத்திற்கு நன்றி.
இதயம் சொல்லிக் கேட்பதை விட மூளை சொல்வதைக் கேட்டால் முன்னேற்றம் அடையளாம் என்பதைச் சொல்லிச் செல்லும் அருமையான பதிவு.
இதயம் சொல்லிக் கேட்பதை விட மூளை சொல்வதைக் கேட்டால் முன்னேற்றம் அடையளாம் என்பதைச் சொல்லிச் செல்லும் அருமையான பதிவு.
தனிமரம் said...
இதயம் சொல்லிக் கேட்பதை விட மூளை சொல்வதைக் கேட்டால் முன்னேற்றம் அடையளாம் என்பதைச் சொல்லிச் செல்லும் அருமையான பதிவு.//
மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.
அது சரி அமல் என்னை போல மூளை இல்லாதவர்கள் எதை கேட்கலாம்? ஹி ஹி
காட்டான் said...
அது சரி அமல் என்னை போல மூளை இல்லாதவர்கள் எதை கேட்கலாம்? ஹி ஹி//
என்ன மாம்ஸ், இதுவேறையா??? சொல்லவே இல்ல. எனக்கும் ஒரு சிறு சந்தேகம் இருந்ததுதான். சரி எதுவாயினும், நீங்கள் கொடுத்து வைத்தவர். அதுதான் உங்களுக்கு மூளைக்காச்சலே வராதே.. ஹி ஹி ஹி
////மூளையா அல்லது இதயமா? என்கின்ற கேள்விகள் அந்தக் காலம் தொடங்கி உளவியலை ஆட்டிப்படைத்த ஒரு தர்க்கம் ஆகும்////
அரிஸ்டோட்டில் கூட இப்படித் தான் கூறினார்... ஆனால் இதயமாற்று அறுவைச் சிகிச்சை பலவற்றை தவிடு பொடியாக்கி விட்டது...
இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_29.html
Post a Comment