
நிமிர்த்தியவளும்
நீதான்..
சாய்த்துப் போனவளும்
நீதான்.
எனக்காக
உறங்கிய பகலை விட
உனக்காக
விழித்திருந்த
இரவுகள் ஏராளம்.
மாற்றம் தந்தவள்
நீ.
இன்னும்
மாறாமலே இருப்பவன்
நான்.
என்
ஏழு பொழுதுகளில்
எனக்காக விடிந்தவை
ஒன்றுமில்லை.
நீ
சட்டெனக் கடிக்கும்
உன்
நிகத்தைகூட
பாவம் என்றவன்
நான்.
நீ
என்
உயிரை பிய்த்தபோதும்
உனதழகில்
கிறங்கிக் கிடந்தவன்
நான்.
உனக்கு
நன்கே தெரிந்த
என்
முகத்தையே
மறக்கமுடிந்தால்,
உனக்கே
சரியாய்ப் புரியாத
என்
இதயத்தை
எப்படி
ஞாபகம் வைத்திருப்பாய்?
12 comments:
ஆஹா! என்ன ஒரு ஃபீலிங்? என்ன ஒரு கவிதை! அமல் கலக்கல் கவிதை! நிஜமாவே!
என்ன அமல் சொந்தக்கதையோ அவ்வளவு உருக்கமாக சொல்லியிருக்கிறியள்.
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
ஆஹா! என்ன ஒரு ஃபீலிங்? என்ன ஒரு கவிதை! அமல் கலக்கல் கவிதை! நிஜமாவே!
மிக்க நன்றி மணி.
அம்பலத்தார் said...
என்ன அமல் சொந்தக்கதையோ அவ்வளவு உருக்கமாக சொல்லியிருக்கிறியள்.
வணக்கம் அம்பலத்தார், ஐயோ இப்புடி புரளிய கிளப்பி என் கலியாணத்தில தபேலா வாசிச்சுப் போடாதேங்கோ ஐயா.. ஹி ஹி ஹி..
காதலும் காதலின் உணர்வுக்கோர்
புரிதலும் புரிதல் நிமித்தமாய்
ஒரு அழகிய கவிதை..
உண்மைதான் இரவில் முழித்திருக்காவிட்டால் "வடை போச்சே"ன்னுதான் கூவனும்..!!
ஹி ஹி!!!!!!!!;-) ;-)
எனக்காக
உறங்கிய பகலை விட
உனக்காக
விழித்திருந்த
இரவுகள் ஏராளம்.//
உண்மைதான் அமல்.
மிக அருமையான உள்ளம் உணர்ந்தக்கவிதை. வாழ்த்துகள்
வணக்கம் அமல் அண்ணா,
இதயத்தை மறந்தவலை இமைப் பொழுதும் மறக்காதவராய் கவிதையாக கொடுத்திருக்கிறீங்க.
ரொம்பத் தான் பீல் பண்றீங்களோ?
மகேந்திரன் said...
காதலும் காதலின் உணர்வுக்கோர்
புரிதலும் புரிதல் நிமித்தமாய்
ஒரு அழகிய கவிதை..
மிக்க நன்றி மகேந்திரன் அண்ணா..
காட்டான் said...
உண்மைதான் இரவில் முழித்திருக்காவிட்டால் "வடை போச்சே"ன்னுதான் கூவனும்..!!
ஹி ஹி!!!!!!!!;-) ;-)
ஹி ஹி ஹி... நமஸ்தே மாம்ஸ், உண்மைதான்... இப்பிடித்தான் நிறம்ப பேர் வட போச்சேன்னு இருக்காங்க...
அன்புடன் மலிக்கா said...
உண்மைதான் அமல்.
மிக அருமையான உள்ளம் உணர்ந்தக்கவிதை. வாழ்த்துகள்//
வணக்கம் அக்கா, உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
நிரூபன் said...
வணக்கம் அமல் அண்ணா,
இதயத்தை மறந்தவலை இமைப் பொழுதும் மறக்காதவராய் கவிதையாக கொடுத்திருக்கிறீங்க.
ரொம்பத் தான் பீல் பண்றீங்களோ?
ஆமா.. பீலிங் பாஸ் பீலிங்.. உங்கள மாரி நிறையபேருக்கு லவ் பெயிலியர் பாஸ்.. அவ்வ்வ்வவ்...
Post a Comment