மனதில் உளத்திக்கொண்டிருக்கும் விடயங்களை எழுதித் தொலைத்து விட்டால் மனம் அமைதியாகிவிடும் என்பதுதான் வலைப்பூவின் அடிப்படை சித்தார்ந்தம். நானும் அதற்காகவே இந்த புலம்பலை தொடங்க வேண்டியதாயிற்று. சரி இவற்றை எதற்காக சொல்கிறேன் என்றால் இன்று உங்களிடம் கொண்டுவரும் பதிவும் இப்படிப்பட்ட ஒரு மனதை அலட்டிக்கொண்டிருக்கும் ஒரு விடயம்தான். நீண்ட நாட்களாக காத்துக்கிடந்த பதிவு என்பதால் உடனடியாகவே விடயத்திற்குள் செல்லலாம்.
இந்த கொலைவெறி என்பதே நிறையப் பேருக்கு ஒரு கொலை வெறியான கடுப்பை ஏற்படுத்தக்கூடிய வார்த்தை. இந்த அனிருத் மற்றும் தனுசின் கொலைவெறி என்கின்ற பாடல் இன்று நான்கு கோடி மக்களையும் தாண்டி ரசிக்கப்படுகிறது என்றால் இந்தப்பாடலின் வெற்றியை எம்மால் யூகிக்க முடியும். அதேபோல, இந்த கொலைவெறிப் பாடல் போதுமான அளவு எதிர்ப்பையும், காரசாரமான விமர்சனங்களையும் சம்பாதிக்கத் தவறவில்லை. அதிலும் சிலர் கடுமையாக, வெறித்தனமாக தனுஷை விமர்சிக்கும் அளவிற்கு இந்தப் பாடல் சிலரை அதிகம் பாதித்திருக்கிறது என்பதும் உண்மைதான்.
'மூணு' என்கின்ற திரைப்படத்திற்காய் அனிருத்தின் இசையில் தனுஷ் எழுதிப் பாடிய பாடல் இந்த கொலைவெரிடி என்கின்ற பாடல். இந்தப் பாடல் வெளியாகிய நாட்களில் இருந்து அதிகபடியான மக்கள் இணையத்தில் பார்வையிட்ட அல்லது கேட்ட பாடல் என்கின்ற ஒரு இமையத்தை எட்டிபிடிப் பிடித்தது இந்தப் பாடல்.
'மூணு' என்கின்ற திரைப்படத்திற்காய் அனிருத்தின் இசையில் தனுஷ் எழுதிப் பாடிய பாடல் இந்த கொலைவெரிடி என்கின்ற பாடல். இந்தப் பாடல் வெளியாகிய நாட்களில் இருந்து அதிகபடியான மக்கள் இணையத்தில் பார்வையிட்ட அல்லது கேட்ட பாடல் என்கின்ற ஒரு இமையத்தை எட்டிபிடிப் பிடித்தது இந்தப் பாடல்.
இந்தப் பாடல் இரண்டு வகையான சர்ச்சைகளை பொதுவாக தோற்றுவித்தது. ஒன்று, பெண்ணிய வாதிகளும், பெண்ணியம் போற்றும் தரப்பினரும், பெண்களும் இந்தப் பாடல் பெண்களை கேவலப் படுத்துவதாயும் அவமானப் படுத்துவதாயும் இருக்கிறது என்கின்ற ஒரு பிரச்சனை. இரண்டாவது, தமிழ் உணர்வாளர்களும், தங்களை தமிழ் மொழியின் காருணியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் இந்தப் பாடல் தமிழை அவமதிப்பதாயும், தமிழ் மொழியை கொலை செய்வதாயும் இருக்கிறது என்பது அடுத்த பிரச்சனை. இந்த இரண்டுமே இந்தப் பாடல் தொடர்பான மிகப் பிரதானமான இரு எதிர்மறை விமர்சனங்கள் ஆகும்.
இப்ப விடயத்திற்கு வருவோம். நீங்களே சொல்லுங்க, இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்னவோங்க, என்னால் இவற்றை ஏற்றுகொள்ள முடிவதில்லை. இதெல்லாம் சிறு பிள்ளை தனம் என்றே எனக்கு தோணும். ஏன் எனக்கு இவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதற்காக, அவர்கள் விமர்சனம் அவர்கள் கருத்தில், கணிப்பில் சரியாக இருக்கலாம். எனது பார்வையில் இவற்றை என்னால் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
முதலில் அனைவரும் இதுவொரு சினிமா திரைப்படப் பாடல் என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டும். திரைப்படத்திற்காய் உருவாக்கப் படும் பாடல்களின் இயல்புகள் எப்படிப்பட்டவை. அடிப்படையில், சினிமா என்பதே ஒரு பொழுதுபோக்கு சாதனமே. ஆக, சினிமா இலக்கியத்தையோ, தமிழ் மொழி இலக்கனங்கலையோ திருப்திப் படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ரசிகனை பொழுதுபோக்க வைத்தால் சரி. அதன் இலட்சியம் முடிந்து விடும். இன்னுமொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கவிஞர்களின் இலக்கியப் படைப்புக்கள் வேறு. ஜனரஞ்சகப் படைப்புக்கள் வேறு. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதனால், சினிமாப் பாடல்கள் எல்லாம் இலக்கியக் கவிதைகள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இப்பொழுது சினிமாப் பாடல் ஒன்று தமிழ் மொழியைக் கொலைசெய்கிறது என்றால் 'சிக்கு புக்கு ரயிலே..', 'முக்காலா முக்காபுல்லா', 'ஒ மக சீயா', 'ஆத்திசூடி', 'மை நேம் இஸ் பில்லா..' போன்ற பாடல்களை ஏன் கொண்டாடினீர்கள்? தமிழ் சினிமாவில் யாரையா தமிழ் இலக்கியத்தில் பாடல் எழுதுகிறார்கள் பாப நாச சிவன், கண்ணதாசன தவிர.? சரி அதை விடுங்கள் மங்காத்தா பல்லேலக்கா பாடலை கொண்டாடினீர்களே.. அந்த பாடல் தமிழ் மொழிக்கு மகுடம் சேர்த்திருக்கிறதா? எல்லாவற்றையும் விட, தமிழ் சினிமாப் பாடல் ஒன்று தமிழை கொச்சைப் படுத்துகிறது என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாய் தெரியவில்லையா? அப்படியெனின், காலா காலமாய் அதிகமான சினிமாப் பாடல்கள் தமிழை கேவலப் படுத்தித்தானே வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அடுத்து, ஜனரஞ்சகம் என்கின்ற ஒரு விடயம் இருக்கிறது. அதுவும் பொழுதுபோக்கு சினிமாவில் இது மிக மிக முக்கியம். அடுத்து சினிமாப் பாடல் எப்பொழுதும் குறித்த ஒரு சந்தர்ப்பத்திற்காகவே எழுதப்படுகிறது. இந்தப் படத்தில் இப்படியான ஒரு பாடல் தேவைப்படும் சந்தர்ப்பம் ஒன்று வந்திருக்கலாம். இதை தனுஷே ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். தமிழை வளர்ப்பதற்கு பல இடங்கள் இருக்கிறது நண்பர்களே.. தனுஷின் கொலை வெறிப் பாடலில்தான் உங்க தமிழ் நேயத்தை காட்டணும் என்று இல்லை.
நானும் இலக்கிய பரப்பில் இருக்கும் ஒருத்தன் என்ற வகையில் தயவுசெய்து இலக்கியத்திற்கும் ஜனரஞ்சக படைப்புக்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொண்டால் இவ்வாறான விமர்சனங்கள் வருவதைக் குறைக்கலாம். கவிதைக்கும் பாடலுக்கும் கூட சிறு சிறு வேறுபாடுகள் இருக்கின்றன. பாடல் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பேச்சு மொழியை பிரதிபலிக்க வேண்டி இருக்கலாம். அப்பொழுது இலக்கணப் பிழை இருக்கிறது என்று யாராவது கொடி பிடிக்க முடியுமா? இந்த கொலைவெறிப் பாடலை வெறும் ஜனரஞ்சக சினிமாப் பாடலாய் மட்டும் ரசிக்கிறவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. நானும் தமிழன். எனக்கும் தமிழ் மேல் உங்களைப் போன்று பற்று உண்டு.. சிலவேளைகளில் உங்களைவிட அதிகமாகவே.
அடுத்து, நமது பெண்கள் அந்தப் பாடல் தங்களை அவமதிப்பதாயும், கேவலப் படுத்துவதாயும் சண்டைக்கு வருகிறார்கள். அதைவிட ஒரு நகைச்சுவையான விடயம் என்னவென்றால் தென் இந்தியாவில் அதிகம் பெண்களையே இந்தப் பாடல் கவர்ந்திருப்பதாக தனுசினதும், அனிருத்தினதும், ஐஸ்வர்யாவினதும் டுவீடறிற்கு வந்த தகவல்கள் சொல்கின்றனவாம். ஆக, தங்கள் பிரச்சனைக்கு உதவியாய் இந்த பிரச்சனையை உருவாக்கியவர்கள் நான் மேலே சொன்ன அந்த தமிழ் பிரியர்கள்தான் என்பதை நான் சொன்னாலும் பிழையில்லை.
இதிலே அப்படியென்ன பிழை இருக்கிறது என்று தெரியவில்லை. திரும்பவும், அப்படி ஒரு பெண் ஆணை ஏமாற்றுவதாக அந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக இப்படி ஒரு பாடலை உருவாக்கியிருக்கலாம் இல்லையா? (அதுதான் உண்மையும்) தங்களை சரியாக சொல்லாமல் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் பாடல் இருக்கிறது என்று வரிந்து கட்டிக்கொள்ளும் பெண்களும் சில ஆண்களும் 'தேவதாசு கதையைப் போல என் கதையாச்சு..', 'கடவுளே போதும் நிறுத்து..' மற்றும் 'யம்மா யம்மா காதல் பொன்னம்மா..' போன்ற பாடல்களை நீங்கள் கேட்டதே இல்லையோ? கீழே உள்ள பாடலை கொஞ்சம் பாருங்கள். பிறகு சொல்லுங்கள். இந்தப்பாடலை விட கொலைவெறிப் பாடல் பெண்களைப் பற்றி அப்படி என்ன தவறாக சொல்லியிருக்கிறது என்று.
இந்த பாடல் எல்லாவற்றையும் இவ்வளவுகாலம் கேட்டு முடித்து விட்டு இப்பொழுது பெண்களைப் பற்றி தவறாக ஒரு பாடல் சொல்கிறது என்று கதை விடுவதுதான் எனக்கு ஆச்சரியம். ஆக, ஒட்டு மொத்தத்தில், திரும்பவும் சொல்கிறேன் இந்த கொலைவெறிப் பாடலை வெறும் இசை ரசனைமிக்க ஒரு சினிமாப் பாடலாக மட்டும் பாருங்கள். எந்த தவறும் தெரியாது.
இந்தப்பாடலை நான் அதன் இசைக்காகவும், தமாசாக எழுத்தப்பட்ட வரிகளுக்காகவும், அதை அழகாக (தனது பாணியில்) பாடியிருக்கும் தனுஷுக்காக்கவுமே பிடிக்கும். அதையும் தாண்டி, ஒன்றுமே இல்லாத இந்தப்பாடல் BBC, CNN வரைக்கும் போனதன் ஆச்சரியமும் என்னை இந்தப் பாடல் கவர்வதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். ரசனைகளுக்கு வரம்புகள் போடாத எவனும், அதை அதை அது அதுவாக பார்க்கின்ற எவனும், சினிமாப் பாடலிற்கும் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டை சரியாக தெரிந்துகொண்ட எவனும், இசை என்பது மொழிகள் தாண்டிய ஒரு இன்பம் என்பதை அனுபவிக்கத் தெரிந்த எவனும் இந்த கொலைவெறிப் பாடலை கொண்டாடுவான்.
இன்னுமொரு விடயம் முடிப்பதற்குள், இந்த பாடலிற்கு பல வித்தியாசம் வித்தியாசமான பிரதிகள் ஒவ்வொரு நாட்டிலும் உருவாகியிருக்கின்றன. அந்தவகையில் இதுவரை வந்த இந்த கொலைவெறி வெர்ஷன்களில் எனக்கு பிடித்தவை இரண்டு. ஒன்று பிரபல பாடகர் சோனு நிஹாம் அவர்களின் மகன் பாடியது. மற்றது நம்ம யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான தமிழ் வெர்ஷன். இவை இரண்டையும் நான் அதிகம் ரசித்ததுண்டு.
பிரபல பாடகர் சோனு நிஹாம் அவர்களின் மகன் பாடியது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான தமிழ் வெர்ஷன்.
பி.கு. இந்த தமிழ் வெர்ஷன் தொடர்பான எனது கருத்து "இப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்." அவ்வளவுதான். ஹி ஹி ஹி. இருந்தும் இந்த வெர்ஷனில் பாடியிருக்கும் நண்பரின் குரலிற்கும், வரிகளிற்கும் வாழ்த்துச் சொல்லாமல் இருக்க முடியாது.
இன்னுமொரு விடயம் முடிப்பதற்குள், இந்த பாடலிற்கு பல வித்தியாசம் வித்தியாசமான பிரதிகள் ஒவ்வொரு நாட்டிலும் உருவாகியிருக்கின்றன. அந்தவகையில் இதுவரை வந்த இந்த கொலைவெறி வெர்ஷன்களில் எனக்கு பிடித்தவை இரண்டு. ஒன்று பிரபல பாடகர் சோனு நிஹாம் அவர்களின் மகன் பாடியது. மற்றது நம்ம யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான தமிழ் வெர்ஷன். இவை இரண்டையும் நான் அதிகம் ரசித்ததுண்டு.
பிரபல பாடகர் சோனு நிஹாம் அவர்களின் மகன் பாடியது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான தமிழ் வெர்ஷன்.
பி.கு. இந்த தமிழ் வெர்ஷன் தொடர்பான எனது கருத்து "இப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்." அவ்வளவுதான். ஹி ஹி ஹி. இருந்தும் இந்த வெர்ஷனில் பாடியிருக்கும் நண்பரின் குரலிற்கும், வரிகளிற்கும் வாழ்த்துச் சொல்லாமல் இருக்க முடியாது.
9 comments:
சினிமாக்காரர்களிடம் தமிழ் சேவையையும் பெண்னிய கருத்துக்களையும் எதிர் பார்போரை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.. :-)
காட்டான் said...
சினிமாக்காரர்களிடம் தமிழ் சேவையையும் பெண்னிய கருத்துக்களையும் எதிர் பார்போரை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.. :-)
ம்ம்ம்.. உண்மைதான் காட்டான் மாமா, காமெடி பண்ணுராங்கையா..
நீங்க சுட்டிக்காட்டின பாடல்களுக்கு குறைகண்டு பிடிப்பவர்கள் பதில் சொல்லியே ஆகணும்...
ஒருத்தன் நல்லா வாறது பிடிக்காடி இப்டி தான் ...சினிமா வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..
வணக்கம் அமல் அண்ணா,
சினிமாவைச் சினிமாவாகப் பார்ப்பதை விடுத்து கொல வெறி கொண்டு அலைந்தால்...
இப்படியானோரின் கருத்துக்கள் வருவது தவிர்க்க இயலாதது தான்.
நல்ல உதாரணங்கள் ஊடாக பெண்ணியம், மற்றும் இதர விடயங்களுக்கு சூடு போட்டிருக்கிறீங்க.
தளவாடி said...
நீங்க சுட்டிக்காட்டின பாடல்களுக்கு குறைகண்டு பிடிப்பவர்கள் பதில் சொல்லியே ஆகணும்...//
அவ்வ்.. எதுக்கு இந்த ஆசை எல்லாம் ..
தளவாடி said...
ஒருத்தன் நல்லா வாறது பிடிக்காடி இப்டி தான் ...சினிமா வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..//
இப்புடியே மனச தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.. நன்றி தளவாடி சுஜி. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
நிரூபன் said...
வணக்கம் அமல் அண்ணா,
சினிமாவைச் சினிமாவாகப் பார்ப்பதை விடுத்து கொல வெறி கொண்டு அலைந்தால்...
இப்படியானோரின் கருத்துக்கள் வருவது தவிர்க்க இயலாதது தான்.
நல்ல உதாரணங்கள் ஊடாக பெண்ணியம், மற்றும் இதர விடயங்களுக்கு சூடு போட்டிருக்கிறீங்க.//
வாங்க பாஸ்.. ரொம்ப பிஸி போல.. நன்றி நிரூபன்.
வணக்கம் அமல், எங்களை நாங்களே மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை உணர்த்தும் நல்ல பதிவு. எதற்கெடுத்தாலும் குறை கூறும் காலாச்சார காவலர் வேசமிடுவோரை நினைத்தால் சிரிப்பு எரிச்சல் வேதனை எல்லாம் சேர்ந்து வருகிறது. சினிமாவை Just ஒரு பொழுதுபோக்கு சாதனமாக எடுத்துகொள்வதுடன் நிறுத்திக்கொள்ளவேண்டுமே அன்றி அதிலும் இலக்கியத்தை தேடவேண்டியதில்லை
Post a Comment