Saturday, January 14, 2012

ஒரு கவிதைக்கு அக்கப்போரா?

வணக்கம் நண்பர்களே. எல்லாரும் பொங்க ரெடியா?? (யோவ்வ்.. தண்ணிப் பொங்கல் இல்ல.. அரிசிப்  பொங்கல்...) அனைவரிற்கும் முன்கூட்டிய தித்திக்கும் அன்பான பொங்கல் தின வாழ்த்துக்கள். சரி இனி விடயத்திற்கு வருவோம்.

இது  ஒரு  விளக்கப்பதிவு  மட்டுமே. நான்  எப்பொழுதும்  மனிதர்களின் கருத்துக்களை  மதிப்பவன். எனது  நாக்கை  மதிக்க  தெரிந்த  எனக்கு அடுத்தவன் நாக்கையும் மதிக்கத் தெரியும். தெரிய வேண்டும். ஆனால் நம்மில் பலர் தங்கள் வார்த்தைகளை மதிக்கத்தெரிந்த அளவிற்கு அடுத்தவர் கருத்துக்களை மதிக்கத் தெரிவதில்லை.


அண்மையில் எனது வலைப்பூவில் நீ மாறுபட்டவள்தான்!  என்கின்ற ஒரு கவிதையை பதிவிட்டிருந்தேன். இந்த கவிதையை வாசித்தவர்கள் தங்கள் தங்கள்  கருத்துக்களை  அவரவர்  ஆளுமை, பாலிசிக்கு  ஏற்ப சொல்லியிருந்தார்கள். அதில் எனக்கு வந்த சில கருத்துக்கள் நான் பெண்களை  மட்டமாக  மதிப்பிட்டிருப்பதாகவும், பெண்களை கேவலப்படுத்தும் ஒரு ஆணாத்திக்கப் போக்காளன் நான் எனவும் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

நான்  எப்பொழுதும்  மற்றவர்  கருத்துக்களை, உணர்வுகளை  எப்படி மதிக்கிறேனோ அப்படி மற்றவர்களும் எனது கருத்துக்களை, உணர்வுகளை மதிக்க  வேண்டும்  என  ஆசைப்படுபவன். சில  வேளைகளில்  அது வாய்க்கும். பல வேளைகளில் போட்டுக்கும். அதுவும் இலக்கிய உலகில் நான் வாங்கின அடி எக்கச்சக்கம்.

சரி அந்த கவிதையில் அப்படி என்னதான் இருக்கிறது என்றால் கடைசி பந்தி ஒன்று இப்படி,

"நீ
மாறுபட்டவள்தான்
பெண்களில்.
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும்,
ஒரே விடயத்தில்
நீயும்
பெண்தான்.
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்."

பூரண கவிதையையும் படிக்க நீ மாறுபட்டவள்தான்!

முதலில்  இது  ஒரு  கவிதை. தனது  உணர்வுகளை  வரிகளில் கொண்டுவருவது  கவிஞனின்  அடிப்படை  உரிமை. ஆனால்  அது சமூதாயத்தையோ அல்லது குறித்த ஒருவரையோ பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கின்ற நியதியையும் நான் மதிக்கிறேன். காதலால் அல்லது ஏதோவொரு சந்தர்ப்பத்தால் பெண்களை வெறுக்கும் ஒரு இளைஞனின் உணர்வுகள்  எனது  வரியில்  வந்திருக்கிறது. பெண்கள்  மீதான  எனது பார்வையும் அதுதான். இது எனது கருத்து. யாரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. மதித்தால் போதும்.


எனக்கும் அம்மா, அக்கா, நண்பிகள் என்றெல்லாம் பெண்கள் நெருக்கத்தில் இருக்கிறார்கள்தான். இவர்களிடமும்  இந்த  குறையை  நான்  பார்த்தே இருக்கிறேன் என்றால் அதை நான் எதற்காக வெளியில் சொல்ல தயங்க வேண்டும். இந்த விடயத்தை சரியான சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும் நான் சொல்லியிருக்கிறேன். அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் இதை பொதுமைப் படுத்தும் நோக்கில் சொல்லவில்லை என்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இங்கு பிழையாகிவிடும்.

ஆண்களிலும் பல குறைவான இயல்புகள் இருக்கத்தான் செய்யும் பலரது கருத்துக்களில். இந்த  கவிதை  ஆண்கள்  எல்லாம்  ஆளுமை  நிறைந்த, வைரங்களை மட்டும் தேடுபவர்கள் என்று சொல்லவில்லை. அதைவிடுத்து, எனது கருத்தில் இது உண்மை என்றால் அது சிலர் கருத்தில் பொய்யாக இருக்கலாம். இதெல்லாம் நம் சிந்தனை ஆளுமை சம்மந்தப்பட்ட விடயம் தானே. உதாரணமாக  அண்மையில்  வந்த  கொலைவெறி  பாடலை  ஒரு சுவாரசியமான  ஜனரஞ்சக  பாடலாக, ஒரு  மனதை  தொடும்  இசையாக அனுபவித்தவர்கள் சந்தோசப் படுகிறார்கள். அதன்  வரிகளை  மட்டும், இலக்கியப் போக்கில் பார்ப்பவர்கள் கொதிக்கிறார்கள். இது  அவர்  அவர் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில்தானே தங்கி இருக்கிறது.

ஒரு சகோதரி என்னை இந்த கவிதைக்காய் வெறுக்கிறேன் என்று முகப் புத்தகத்தில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார். நான்  'நீங்கள்  பாவம்..'  என்று மட்டும்  பதில்  அனுப்பினேன். என்னை  வெறுக்கும்  அளவிற்கு  இந்த கவிதையில்  என்ன  இருக்கிறது  என்று  தெரியவில்லை  எனக்கு. கனக்க  வேண்டாம். இப்பொழுது  இந்த  சகோதரி  இந்த  கவிதையை  உண்மையாக்கிப் போகவில்லையா?

இந்த விடயம் தொடர்பாக எனது போக்கை மாற்ற விரும்பினாலும் எதையும் அனுபவிக்கும் வரை அதை எப்படி மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியும். சரி அதை விடுவோம். பெண்கள் மீதான பார்வை என்றுமே எனக்கு ஆணாதிக்கப் போக்கில் இருந்ததில்லை. பெண்களை புகழ்பவர்கள் நல்லாவர்களா? பெண்களின் எதிர்மறையான விடயங்களை சொல்பவர்கள் ஆணாத்திக்கவாதிகளா? இந்தகவிதையில் நான் சொல்லவரும் விடயம் பெண்கள் எல்லாரும் இப்படித்தான் என்பதை விட இப்படி இல்லாமல் இருந்தால் நல்லது என்பதுதான். (நன்றி கமல்ஹாசன்..)

ஆணாதிக்கம், பெண்ணியம் என்றெல்லாம் பேசுபவர்கள் இந்த சொற்களின் அர்த்தம் சரியாக தெரிந்துதான் பேசுகிறார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. நீங்களே  சொல்லுங்கள், எங்களது  கருத்துக்களை மற்றவர்கள்  ஏற்றுக்கொள்ள  வேண்டாம். மதிக்கலாம்  அல்லவா? ஒவ்வொருத்தரின்  ஆளுமையும், எண்ணத்தின்  வீரியமுமே  எமது பாலிசியினை தீர்மானிக்கின்றன. இந்த  பாலிசியே  நமது  கருத்துக்களை தீர்மானிக்கின்றன. அதை முதல் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இது தொடர்பில் என்ன சொல்கிறீர்கள்? உங்கள்  கருத்துக்களை கேட்கவும் ஆவல்.

16 comments:

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

அமல், நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களை மதிப்பவர் என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்து இருக்கிறேன்! மிகவும் அருமையானது உங்கள் கொள்கை!

மேலும் அந்தக் கவிதையில் அப்படி எந்தத் தப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! அது பெண்களின் பொதுவான இயல்புகளை நளினமாகவும் மிகநாகரிகமாகவும் சொன்ன ஒரு கவிதை!

அதில் எந்த அடக்குமுறையும் இல்லை! கீப் கொண்டினியூ அமல்!

பி.அமல்ராஜ் said...

இனிய மாலை வணக்கம் மணி,

மிக்க நன்றி. நிற்சயமா கண்டினியு பண்ணுவேன் மணி.. கொஞ்சம் தைரியம் இருக்கு.. ஹி ஹி

elizabeth said...

ஒவ்வொருவரது பார்வையும் எண்ணங்களும் ஒவ்வொருவிதம் அதிலே இதுவும் ஒருவிதம். உங்கள் கவிச்சிந்தனை அந்த சகோதரியின் சிந்தனையில் வேறுவிதமாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அவருக்கும் கருத்துச்சுதந்திர உண்டுதானே ஏற்றுக்கொள்ளுங்கள் நண்பரே......

பி.அமல்ராஜ் said...

வணக்கம் எலிசபெத்,

அதுவும் சரிதான்.. அப்படியும் இருக்கலாம். பட், மற்றவரின் கருத்து சுத்தப் பிழை என்பதும், தங்கள் கருத்துக்களை மற்றவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திப்பதும் பிழைதானே. அதிலும், பெண்களின் எதிர்மறை இயல்புகளை பேசினால் அது ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்வதில் லாஜிக் இருக்கிறதா?
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

பி.அமல்ராஜ் said...

மிக்க நன்றி ரத்தினவேல் ஐயா. உங்களிற்கும் உங்கள் குடும்பத்தாரிற்கும் எனது இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

காட்டான் said...

அட இதுக்கு போய் அலட்டிக்கலாமா? அதில் அப்படி ஒன்றுமே இல்லை.. இவற்றை மனதில் நிறுத்தாது தொடருங்கள் அமல்..!!

பி.அமல்ராஜ் said...

மிக்க நன்றி காட்டான் மாமா.. உங்களுக்கும் மாமிக்கும் மருமக்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

படைப்புகள் என்பது நாலும் கலந்ததுதான்.
மனதில் பட்டதை எழுதுவது.
யாரையும் பட்டவர்த்தமாக குற்றம் சாட்டக்கூடாதே தவிர
மனதில் பட்டவற்றை சூசகமாக சொல்வதில் தவறேதுமில்லை.

கவலை ஒழித்து தொடருங்கள் உங்கள் பணியை.
வாழ்த்துக்கள் நண்பரே.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா, உண்மைதான்.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
உங்களிற்கும் உங்கள் குடும்பத்தாரிற்கும் எனது இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

சந்ரு said...

ஒவ்வொருத்தருடைய சிந்தனைகளும் வேறுபட்டவை....

பொங்கல் வாழ்த்துக்கள்

பி.அமல்ராஜ் said...

வணக்கம் சந்ரு அண்ணா, உண்மைதான்..
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

ஃப்ரீயா விடுங்க...

பி.அமல்ராஜ் said...

ஹி ஹி நன்றி பிரபாகரன் அண்ணா...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

அமல் அண்ணே, கொஞ்சம் பிசியாக இருக்கேன். இவ் இரு பதிவுகளையும் பின்னர் வந்து படிக்கிறேன்.

மன்னார் அமுதன் said...

//எல்லாரும் பொங்க ரெடியா?? (யோவ்வ்.. தண்ணிப் பொங்கல் இல்ல.. அரிசிப் பொங்கல்...)//

ஆரம்பமே அட்டகாசமா இருக்கு...

//"நீ
மாறுபட்டவள்தான்
பெண்களில்.
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும்,
ஒரே விடயத்தில்
நீயும்
பெண்தான்.
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்."//

அந்தக் கவிதையில் இந்த வரிகள் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது...

நல்ல கவிதை

Popular Posts