கனியவைத்தது
என்
கவிதை.
உன்னிடம் மட்டும்
அது
அது
கல்லாய்ப் போனது.
என்
இதயத்தை
இதயத்தை
சுவாசித்திருக்கிறார்கள்
பலர்.
அதை
வாசிக்கக்கூட
முடியாமல் போனது
உன்னால்.
கருவண்டின்
கானத்தைக் கூட
ரசித்திருக்கிறார்கள்
அநேகம் பேர்.
உன்னால்
இந்த
குயில் பாட்டைக்கூட
சகிக்க முடியாமல் போனது.
நீர்மட்டம்
பார்த்து
ஆம்பல்கள் வளர்ந்தன.
நீ மட்டும்
ஆம்பலுக்காய்
நீர்மட்டத்தை மாற்றினாய்.
இந்த
நிலாவைப்பார்த்து
நின்று ரசித்தனர்
பலர்.
நீ - அதை
பிசாசு என்றாய்.
நீ
மாறுபட்டவள்தான்
பெண்களில்.
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும்,
ஒரே விடயத்தில்
நீயும்
பெண்தான்.
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்.
பி.கு. இது ஒட்டுமொத்த தாய்க்குலத்தையும் குற்றம் கூறும் கவிதை என யாரும் சண்டைக்கு வராதீர்கள். இது குறித்த ஒரு சந்தர்ப்பத்திற்காய் புனையப்பட்ட கவிதை என்பதை நமது மக்கள்ஸ் அனைவரிற்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எனது ஏனைய கவிதைகளைப் படிக்க கீழே சொடுக்கவும்.
17 comments:
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்.///////
பெண்களும், பெண்ணுரிமை வாதிகளும் கோபித்தாலும் பரவாயில்லை! இதுதான் உண்மை அமல்! பெண்களைப் பற்றிய திருத்தமான ஒரு மதிப்பீடு இது!
ஹி ஹி ஹி ஹி நானும் பல வரைரங்களைத் தவறவிட்டு, கற்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன்!
அருமையான கவிதை அமல்!
unmaiyil aval emaaraatha pen...! kavithai nallaa irukku vaalththukkal
எனக்கு புரிஞ்சிடுச்சு... நீங்கதானே அந்த வைரம்...
அருமை.
வாழ்த்துகள்.
////என்
இதயத்தை
சுவாசித்திருக்கிறார்கள்
பலர்.
அதை
வாசிக்கக்கூட
முடியாமல் போனது
உன்னால்.////
ஹி.ஹி.ஹி.ஹி அருமை அருமை
சிறப்பான கவிவரிகள் பாஸ்
மிக நன்றாக உள்ளது கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் மணி..
உங்கள் கருத்திற்கு நன்றி.. ம்ம்ம்.. உண்மைதான்.. இந்த கவிதைக்காய் முகப்புத்தகத்தில் சிலர் என்னை காட்டோ காட்டின்னு காட்டுறாங்கப்பா.. முடியல என்னால..
வணக்கம் மதுரை சரவணன்,
ம்ம்ம்.. இருக்கலாம்.. நன்றி.
@ Philosophy Prabhakaran,
வணக்கம் பாஸ்.. ஏன் இந்த கொலவெறி??? காமெடி பண்ணாதேங்கப்பா.. ஹி ஹி ஹி
வணக்கம் ரத்னவேல் ஐயா,
உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..
@ K.s.s.Rajh,
வணக்கம் பாஸ்.. அப்பிடியா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...
@ kovaikkavi,
வணக்கம் அக்கா, மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..
பலர் கவிதை என்னும் பெயரில் புலம்பல்கள் பதிவிடுகிறார்கள்.
நீங்கள் புலம்பல் என்னும் பெயரில் உன்னத கவிதைகள் பதிகின்றீர்கள்.
வாழ்த்துக்கள்
//கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்.
//
உண்மைதான்...
ஆனால் இருப்பதின் அருமை இல்லாதபோதுதான் தெரியும் என்பது போல் இனி கற்களை பார்க்கும்போதெல்லாம் வைரத்தை தவற விட்டுட்டோமேன்னு நினைத்து நகரும் நாட்கள் நரகமாய் கழிப்பாள் இல்லையா :-)
வாழ்த்துக்கள்
எல்லாரும் ரசிக்கும் குணங்கள் அவளுக்கு மட்டும் கசப்பாய் இருக்கும்படியாக சுட்டப்பட்ட ஒவ்வொரு வரிகளும் அருமை
வாழ்த்துக்கள் சகோ
வேல் தர்மா said...
பலர் கவிதை என்னும் பெயரில் புலம்பல்கள் பதிவிடுகிறார்கள்.
நீங்கள் புலம்பல் என்னும் பெயரில் உன்னத கவிதைகள் பதிகின்றீர்கள்.
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி வேல் தர்மா.
ஆமினா said...
//கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்.
//
உண்மைதான்...
ஆனால் இருப்பதின் அருமை இல்லாதபோதுதான் தெரியும் என்பது போல் இனி கற்களை பார்க்கும்போதெல்லாம் வைரத்தை தவற விட்டுட்டோமேன்னு நினைத்து நகரும் நாட்கள் நரகமாய் கழிப்பாள் இல்லையா :-)
வாழ்த்துக்கள்
எல்லாரும் ரசிக்கும் குணங்கள் அவளுக்கு மட்டும் கசப்பாய் இருக்கும்படியாக சுட்டப்பட்ட ஒவ்வொரு வரிகளும் அருமை
வாழ்த்துக்கள் சகோ//
உண்மைதான் அக்கா. மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.
Post a Comment