தம்பி,
நம்மைப் பார்ப்பதற்கு
எவரிற்கும் நேரமில்லை.
மனிதர்கள்
ஏழாம் அறிவு பார்ப்பதில்
பிஸியாய் இருக்கிறார்கள்.
கவலை வேண்டாம்.
உன்னைப் பார்க்க
நான் இருக்கிறேன்.
என்னைப்பார்க்க
கடவுள் இருக்கிறான்.
பிள்ளையைப் பெற்று
கணவனிடம்
கொடுப்பார்கள்
அன்னையர்கள்.
உன்னை பெற்று
என்னிடம் கொடுத்தவள்
நம் தாய்.
உனக்கு
சாப்பாடு கொடுப்பதற்கே
சாயங்காலம் வரை
பிச்சை எடுக்கிறேன்.
இந்த மனிதர்களோ
அதிகம்
மிச்சம் பிடிக்கிறார்கள்.
போதாது என்றாலும்
உன்னைக் காட்டி
பிச்சை கேட்க
எனக்கு இஷ்டம் இல்லை.
கொஞ்சம் பொறு தம்பி,
இன்னும் - எனக்கு
கொஞ்சம் வயது வரட்டும்.
வேலைக்கு போய்
அதிகம் சம்பாத்திக்கிறேன்
உனக்காய்.
காரணம்,
இப்பொழுதெல்லாம்
எனக்கு - எவரும்
வேலை கொடுக்கமாட்டார்கள்.
சிறுவர் துஸ்பிரயோகமாம்.
மடியில்
கண்ணார தூங்கு.
அவர்கள்
மாடிகளை விட
இந்த
படிகளில் - என்
மடி
சுகமாய் இருக்கும்.
சூப்பிப் போத்தல்
வாங்கித்தந்த கனவான்
நல்லா இருக்கணும்.
அதற்குள்
கொஞ்சம்
பால் கேட்டால்
கண்டபடி ஏசுகிறார்
அந்த கடைக்காரர்.
மனதற்ற அவரின் பாலைவிட
மனதார நான் தரும்
இந்த தண்ணீர்
உனக்கு நல்லம்.
தம்பி,
திரும்பவும்
உனக்கு
கண்டிப்பாய் ஒன்று சொல்கிறேன்.
உன்
வாயை மூடித் தூங்கு.
நமக்கு அருகில்
உமிழ்ந்து போபவர்கள்
உன் வாய்க்குள்
உமிழ்ந்துவிடலாம்.
அவர்கள்
பணக்கார எச்சில்
உன்னை
நோய்வாய்ப் படுத்தலாம்.
தம்பி,
நீ அழுவதெல்லாம்
ஒன்று
பசிக்கு
இன்னுமொன்று
தாகத்திற்கு.
அவர்கள் குழந்தைகள்
அழுகிறார்கள்
கிண்டர் ஜோய்க்கும்
வொன்டர் வேர்ல்டுக்கும் .
எனக்கும்
உனக்கும்
ஒரே நம்பிக்கைதான்.
அது
கடவுள்.
படம்: நன்றி அதிர்வு.
இன்றைய தினமே நான் இட்ட இன்னுமொரு பதிவை வாசிக்க கீழே சொடுக்கவும்:
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.
இன்றைய தினமே நான் இட்ட இன்னுமொரு பதிவை வாசிக்க கீழே சொடுக்கவும்:
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.
8 comments:
வணக்கம் அண்ணா,
மனதை நெருடும், மதனை தொடும் கவிதையைத் தந்திருக்கிறீங்க, பெற்றோரை இழந்த பின்னர் தன் தம்பியின் அரவணைப்பில் ஆதரவு ஏதுமின்றி உணவிற்கு அல்லாடியவாறு வாழும் ஓர் சிறுவனின் உணர்வுகளை உணர்வைத் தொடும் கவிதையில் வடித்திருக்கிறீங்க.
நெகிழவைத்த வரிகள்.
வரிகள் அத்தனையும்
வலிகள்..
வலி.. வலி.. வலிகள்.. வரிகளில்
நிரூபன் said...
வணக்கம் அண்ணா,
மனதை நெருடும், மதனை தொடும் கவிதையைத் தந்திருக்கிறீங்க, பெற்றோரை இழந்த பின்னர் தன் தம்பியின் அரவணைப்பில் ஆதரவு ஏதுமின்றி உணவிற்கு அல்லாடியவாறு வாழும் ஓர் சிறுவனின் உணர்வுகளை உணர்வைத் தொடும் கவிதையில் வடித்திருக்கிறீங்க.
வணக்கம் வணக்கம், நன்றி நிரூபன்.
அன்புடன் மலிக்கா said...
நெகிழவைத்த வரிகள்.
வரிகள் அத்தனையும்
வலிகள்..
மிக்க நன்றி அன்புடன் மல்லிக்கா.
மனசாட்சி said...
வலி.. வலி.. வலிகள்.. வரிகளில்
மிக்க நன்றி மனசாட்சி.
மனசை குடைகிறது வரிகள்.. எனினும் இதற்று சமூகத்தை மட்டும் குற்றம் சொல்ல முடியாது?
ஆமா.. ஏற்றுக்கொள்கிறேன் காட்டான் மாமா. கருத்திற்கு நன்றி..
Post a Comment