Friday, January 6, 2012

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.


வணக்கம் நண்பர்களே. எழுதுவதற்கு பல விடயங்கள் இருந்த பொழுதும் நேற்று எனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது குறித்த சந்தர்ப்ப சூழ்நிலையில் எனக்கு நான் சிறுவயதில் விரும்பிப் படித்த  'Shake it off and take a step up' என்ற அந்த  ஆங்கிலக்  கதை  ஞாபகம்  வந்தது.  நீங்களும்  அதை கேட்டிருப்பீர்கள் அல்லது வாசித்திருப்பீர்கள். அந்த கதையை சிறுவயதில் கேட்டாலும் அந்த கதை சொல்லும் பாடம் எமது வாழ்க்கை முழுவதற்கும் பொருந்தக்கூடியது. சரி முதல் கதை. பின்னர் பாடம்/அறிவுரை.

விவசாயி ஒருவரிடம் ஒரு கழுதை இருந்தது. அது அவரது நீண்டகால சொத்து. ஒரு நாள் இந்த விவசாயியைத் தேடிவந்த சரசு அக்காவோடு அவரது தோட்டத்துக் கொட்டிலினுள் இருந்து அளவளாவிக்கொண்டு இருந்த பொழுது (??) அவரது கழுதையின் அழுகை சத்தம் தோட்டத்தின் தெற்கு பக்கமிருந்து ஓலமாய் ஒலித்தது. தனது கழுதைக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என தீர்க்கமாய் அறிந்த விவசாயி சரசு அக்காவ கொஞ்ச நேரம் அப்படியே இருக்கச் சொல்லிவிட்டு (அப்படியே மீன்ஸ், பேசிக்கொண்டு இருந்தவாறே..) கழுதையின் அழுகைச் சத்தம் வந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தார்.


அங்கு சென்று பார்க்கும் பொழுதுதான் அவரது கழுதை தவறுதலாக அருகில் இருந்த பெரிய கிணற்றினுள் விழுந்து விட்டதை பார்த்த அந்த விவசாயி அதற்கு என்ன செய்யலாம் என அவசர அவசரமாக சிந்திக்கத் தொடங்கினார். இரண்டு விடயங்கள் அவர் சிந்தனையில் வந்து டமார் என விழுந்தது. ஒன்று அந்த கழுதை மிகவும் வயதான் ஒரு ஓல்டு கழுதை. அதனால் முன்பு போல அது இது என்று எதுவுமே செய்ய முடிவதில்லை. சாவுக்கு இந்தா அந்தா என்று இருக்கிறது அந்த கழுதை. இரண்டாவது, அந்த கிணற்றை மூடிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இன்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பாழடைந்த கிணறு இப்பொழுதெல்லாம் எதற்கும் பிரயோசனப் படுவதில்லை.

ஆக, இந்த இரண்டு விடயங்களையும் ஆராய்ந்த இந்த பாவி மனுஷன் ஒரு முடிவிற்கு வந்தது. 'ஓகே. கழுதைக்கும் சாகிற வயசு. கிணறும் மூடவேண்டி இருக்கு. ஆகவே, அப்படியே கழுதைய உள்ளே விட்டு இந்த கிணற்றை மண்ணையும் குப்பைகளையும் கொட்டி மூடிவிடுவோம்.' இதுதான் அந்த விவசாயி எடுத்த இறுதி முடிவு. (அட பாவி.. பட் இந்த டீலிங் நல்லாதானே இருக்கு..) எனவே, ஊராரை உதவிக்கு அழைத்து அந்த கிணற்றை மூட ஆரம்பித்தனர் அனைவரும்.


சவலை எடுத்து ஒவ்வொரு தடவையாக ஒவ்வொருவரும் சுற்றியிருந்த அழுக்குகளையும் மண்ணையும் வாரி அள்ளி அந்த கிணற்றினுள் போட ஆரம்பித்தனர். ஒவ்வொரு சவல் அழுக்கும் கிணற்றினுள்ளே விழும் பொழுதும், அதுதான் கிணற்றினுள் இருக்கும் அந்த கழுதையின் மேல் விழும் பொழுதும் அந்த கழுதை குவீர் குவீர் என சத்தமிட்டு அழுதது. இவர்களும் விடுவதாய் இல்லை. சிறிது நேரம் சென்றதும் கழுதையின் சத்தம் இல்லாமல் போக அந்த விவசாயி 'அப்பாடா அது செத்துட்டுது.. சத்தத்த காணோம்..' என எண்ணியபடி கிணற்றை எட்டிப் பார்த்து மலைத்து நின்றார்.

ஒவ்வொரு முறை தனக்கு மேலே இந்த அழுக்குகள் விழுந்ததும் தனது உடலை ஒருமுறை குலுக்கியதும் அந்த அழுக்குகளும் மண்ணும் கீழே விழுந்துவிடுகின்றன. பின்னர் கீழே விழுந்த அந்த அழுக்குகள் மீது ஒரு எட்டு வைத்து மேலே ஏறி நின்றுகொண்டிருந்தது அந்த கழுதை. இதைப் பார்த்த விவசாயி, அதன் புத்திசாதூரியத்தை எண்ணி வியந்து தொடர்ந்தும் அழுக்குகளையும் மண்ணையும் அள்ளிப் போடும் படி மற்றவர்களை கேட்டுக்கொண்டார். அவர்களும் அவ்வாறே தொடர்ந்து அவற்றை கழுதை மேலே போட்டுக்கொண்டிருந்தனர். நம்ம புத்திசாலிக் கழுதையும் அவரது பாணியிலே உடலை உலுப்பி கீழே தட்டிவிடுவதும் பின்னர் அதன் மேல் ஒரு படி ஏறி மேலே வருவதுமாய் இருந்தது.

சொற்ப நேரத்தில் கிணற்றை திரும்பிப் பார்த்து மலைத்துப் போய் நின்றனர் அனைவரும். காரணம் மேலே மேலே வந்து வந்து இப்பொழுது கிணற்றின் மேல் விளிம்பில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தது கழுதை. அடுத்த சவல் அழுக்கை அள்ள, சிம்பிள் ஆக வெளியே குதித்து தனது எஜமான்  அருகே  போய்  நின்றது  கழுதை. இறுதியில்  கிணறு மூடப்பட்டாலும்  கழுதை தப்பிக் கொண்டது.பாடம். (ஓடாதேங்கோ, இது அந்த பாடம் இல்ல... வாழ்க்கைப் பாடம்.. ஹி ஹி ஹி)

வாழ்க்கை உங்கள் மேலே எல்லா வகையான குப்பைகளையும் கொட்டிக்கொண்டே இருக்கும். அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி இந்த கழுதை செய்தது போன்று அழுக்கை தட்டிவிட்டு அதன் மேல் ஏறி நடப்பது தான். 'Shake it off and take a step up'. அதிலும், நாம் உடனடியாகவே அந்த கிணற்றிலிருந்து வெளியில் வர முடியாது.. கொஞ்சம் கொஞ்சமாய் தொடர்ந்தும் அதே முயற்சியை செய்யும் போதுதான் வெளியே வரமுடியும்.


அடுத்து ஒரு மொக்க அட்வைஸ். (???)

சந்தோசமாக இருக்க பிரதானமாக 5 வழிகள்.
  1. மன்னிப்பு. வெறுப்பு, பகைமையிலிருந்து உங்கள் மனங்களை அப்புறப்படுத்திக்கொள்ளுங்கள்.
  2. கவலைகளிலிருந்து இலகுவாக வெளியே வரக்கூடிய வழிகளைத் தேடிக்கொள்ளுங்கள்.
  3. எளிமையாக வாழுங்கள், உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்திப்  பட்டுக்கொள்ளுங்கள்.  
  4. அதிகம் கொடுங்கள்.
  5. கொஞ்சமாய் எதிர்பாருங்கள்.

என்னப்பா.. மொறைக்கிறீங்க... ஓவரா சாகடிச்சிட்டேனா? சரி சரி.. விடுங்கப்பா.. உங்கள் பொறுமைக்கு ரொம்ப தேங்க்ஸ். மீண்டும் சந்திப்போம்.

பிற்குறிப்பு: கதையில் அந்த சரக்கு சாரி சரசு அக்காக்கு இறுதியில் என்ன நடந்திச்சு எண்டு யாராவது சின்சியரா கேட்டீங்க.. கடுப்பாகிடுவன். அது இந்த ஒரிஜினல் கதையில இல்லேங்க.. நான் சும்மாமாமா சேர்த்தது.


இன்றைய தினமே நான் இட்ட இன்னுமொரு பதிவை வாசிக்க கீழே சொடுக்கவும்:
மாடி என்ன, என் மடியே உனக்கு!


12 comments:

K said...

ஹா ஹா ஹா செம கதை அமல்! சூப்பர்! இப்படித்தான் பாசிட்டிவ்வா திங் பன்ணணும்! ரியலி கிரேட்!

அப்புறம் அந்த 5 அடவைசும் கலக்கல்!

நீங்கள் சொன்ன கழுதைக் கதையுடன், நண்பன் படத்தில் வரும் ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் பாடல் ஒத்துப் போவதை அவதானித்தீர்களா அமல்?

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
25 December 2011 02:13

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
சின்ன வயசு ஞாபகங்களை மீட்டு, கொஞ்சம் மெரு கூட்டி கதையினை தந்திருக்கிறீங்க.

இந்தக் கதையில யாருக்காச்சும் நீங்க உள்குத்து போடலையே?
ஏதோ நம்மால முடிஞ்சது.

நிரூ....பார்ரா....நீ சண்டைய மூட்டி விடுறது என்றேஎ அலையுறாய்;-)))))

நிரூபன் said...

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
25 December 2011 02:13//

அடப் பாவிங்களா, நீங்க இங்கேயுமா?

பி.அமல்ராஜ் said...

வணக்கம் மணி,
மிக்க நன்றி மணி. ஆமாம் நீங்கள் சொன்னதன் பின்னர்தான் அதைக் கேட்டேன். உண்மைதான். ஹா ஹா ஹா

பி.அமல்ராஜ் said...

வணக்கம் நிரூ,

அண்டைக்கே சொன்னன் வீணா கோத்துவிட வேண்டாம் எண்டு.. அதுக்கெல்லாம் உங்ககிட்டையும் மணிகிட்டையும் ட்ரைனிங் எடுத்திட்டுத்தான் முயற்சி செய்யணும். ஹி ஹி ஹி ஹி

அம்பலத்தார் said...

பழைய கதையானாலும் சுவாரசியமாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறையள் அமல்.

சந்தோசமாக இருக்க பிரதானமாக 5 வழிகள். நல்லதைத்தானே கூறியிருக்கிறியள் அப்புறம் எதற்கு
// மொக்க அட்வைஸ். (???)// என அடைமொழி.

அம்பலத்தார் said...

இனி என்னை எவராவது கழுதையென திட்டினால் சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்.

காட்டான் said...

மச்சான் சொல்லிபோட்டார் என்று யாராவது கழுத என்று திட்டினீங்க தொலைச்சு போடுவன். அப்படி அழைப்பதற்கு அக்காவுக்கு மட்டுமே உரிமை இருக்கு!!??

அப்புறம் அமல் அந்த சரசக்காவும் சேர்ந்துதானே கிணத்துக்குள்ள மண் கொட்டினவா?

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அம்பலத்தார்,

ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.
அட்வைஸ் எண்டாலே மொக்கை எண்டுதானே நிறைய பேர் நினைக்கினம்.. ஆமா ஆமா.. நானும் கழுதை என்றால் கொவப்படுவதில்லை.. இப்படி மனிதராய் இருப்பதை விட அப்பிடி கழுதையா இருக்கலாமே.. ஹி ஹி ஹி ஹி

பி.அமல்ராஜ் said...

காட்டான் மாமா, நிச்சயமா அப்பிடி சொல்லமாட்டம்... டோன்ட் வொறி.. ஆமா, சரசு அக்காவும் சேர்த்துதான் கொட்டினவ.. மண்ணை...ஹி ஹி

Popular Posts