Wednesday, January 4, 2012

நாகரீக பொண்டாட்டி.


நாகரீகம் என
நாங்கள் - உங்கள்
உடையை விட 
உடலைத்தான் 
அதிகம் பார்த்திருக்கிறோம்.

நாகரீகம் என
நாடகம் போடுகிறீர்கள்.
உங்கள்
கணவன் மட்டும்
முக்காட்டோடே
முகம் காட்ட முடியாமல் 
மூலையில் இருக்கிறான்
தெரியுமா உங்களுக்கு?

"உன்
பொண்டாட்டியில் 
குறைவாய் இருக்கும் 
ஆடையை விட
தெளிவாய் தெரியும் 
உடல் 
எடுப்பாய் இருக்கிறது!!"
என்கிறார்கள்
வீதியில் நிற்பவர்கள். 

22 comments:

K said...

எனக்கு நவநாகரிகம் + ஆடைக்குறைப்பு இவயெல்லாம் பிடிக்கும் என்றாலும், உங்கள் கவிதை நச் சென்று உள்ளது அமல்!

வாழ்த்துக்கள்!

காட்டான் said...

என்னது கணவர்கள் முக்காடு போடுகிறார்களா..? 
"அவளை தொடுவானேன் கவலைப்படுவானேன்" என்பதை போல் அந்த உடைகளை வாங்கி கொடுத்து வீதியில் இருப்போரை இரசிக்க விட்டு முக்காடு போடுவதில் பயனில்லை..!!!! ;-)  ;-)

காட்டான் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

அடைக்குறைப்புப்பற்றி வார்த்தைக்குறைப்புச்செய்து ஈர்ப்புடன் கவர்ச்சிக்கவிதை தந்துவிட்டியள். நறுக்கென குறைந்தவார்த்தைகளில் நிறைவான கவிதை.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் மணி அண்ணே,

ஆமாம் எனக்கும் பிடிக்கும் ஆனாலும் சிலர் கடுப்பேத்துகிறார்களே.. அவர்களுக்காகத்தான்.. நன்றி மணி சார்.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் காட்டான் மாமா,

இவ் வகையறாக் கணவர்கள் தாங்கள் தங்கள் மனைவிமாரிற்கு அதிகம் சுதந்திரம் கொடுப்பதாய் பெருமைப் படுகிறார்களோ?? உங்கள் இன்னுமொரு கருத்து அளிக்கப்பட்டிருக்கிறதே காட்டான் மாம்ஸ்.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அம்பலத்தார்,

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

நிரூபன் said...

வணக்கம் அமல் அண்ணா,

கவிதையைப் படிக்க முன்னாடி படம் தான் மனசைத் தொடுகிறது. ஹே...ஹே..

நிரூபன் said...

நாகரிக மோகத்தில் மனைவிக்குச் சுதந்திரம் கொடுத்து விட்டு மறைவாகப் பதுங்குவோர் பற்றி ஒரு கிண்டல் கவிதை வடித்திருக்கிறீங்க.

இக் கால யதார்த்தத்தினைச் சொல்லும் கவிதையை ரசித்தேன்.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் நிரூபன்,

ஹி ஹி... மிக்க நன்றி.

Unknown said...

கவிதை 'நச்!' வாழ்த்துக்கள்!

காட்டான் said...

ஒரே கொமொன்ஸ்தான் இரண்டு தடவை பதியப்பட்டதால் ஒன்றை நீக்கிவிட்டேன்.. டெலிபோனில் எழுதினால் இப்படிதான்..!!)

Vel Tharma said...

எளிமையான தமிழில் இனிய கவித...

Saravanan MASS said...

ரசித்தேன்
படித்தேன்

சிரித்தேன்... உங்க கவிதைக்கு தகுதியான ஒரு பெண்னை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த‌தை நினைத்து!

பி.அமல்ராஜ் said...

வணக்கம் ஜீ,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

பி.அமல்ராஜ் said...

ஓ.. அப்படியா காட்டான் அங்கிள்.. ஓகே. ஓகே.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் வேல் தர்மா அண்ணா,

கருத்திற்கு மிக்க நன்றி.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் சரவணன் மாஸ்,

கருத்திற்கு நன்றி. ஹி ஹி ஹி.. ஓ.. அப்பிடியா அண்ணா.. அப்ப நீங்க எழுத வேண்டிய கவிதைய நான் எழுதிட்டேனோ??? ஹா ஹா

சுதா SJ said...

அமல் மணியின் கருத்துத்தான் என் கருத்தும் :)))))

ஆடை குறைப்பில் என்ன இருக்கு!!!
ஹீ ஹீ ......

மாறும் உலகில் மாறுவதுதானே அழகு.... தேங்கி இருந்தால் குட்டை ஆகிடுவோம் பாஸ் :)

ஆனாலும் மாற்றம் அடையும் நாகரீகம் போல் உங்கள் கவிதையும் செம அழகு :))

பி.அமல்ராஜ் said...

வணக்கம் துஷி,

ஆமாம். உங்கள் இருவர் கருத்தோடும் எனக்கு உடன் பாடு இருக்கிறது. ஆனாலும், இந்த நவநாகரீகம் எண்டு சிலர் பலர் தங்கள் தேகத்திற்கு ஒட்டாத ஆடைகளை அணிந்து நம்ம சாகடிக்கிராங்களே அவங்கள சொன்னேன் பாஸ். அதோட முகப் புத்தகத்தில் ஒரு சகோதரிக்கு சொன்ன கருத்து ஒன்றையும் இங்கே தருகிறேன் துஷி,

//நானும் நவ நாகரீகத்தை விரும்புபவன்தான் சகோதரி. இக்கவிதை நாகரீகம் என்ற போர்வையில் நடக்கும் அநாகரீகமான ஆடை விரும்பிகளை பற்றியது மட்டுமே. மனிதன் ஒரு சமூகப் பிராணி. அவரவர் உடுத்தும் ஆடைகள் அவரவர் உரிமை. ஆனால், இந்த ஆடை விவகாரம் என்பது பாலியல் இச்சைகளின் தூண்டலுடன் தொடர்புடையது. இதனாலேயே, இவ்வாறான அநாகரீக ஆடை விரும்பிகளை சமூகம் வெறுக்கிறது. அப்படியெனின் இதுவும் ஒரு சமூகப் பிரச்சனை என்று சொல்வதில் தவறிருக்கிறதா?//

மற்றும் படி, ஆமா அதெல்லாம் நல்லாத்தானே இருக்கு நமக்கு .. ஹி ஹி ஹி

சுதா SJ said...

அப்போ அமல் நம்ம இனம் :))))

பி.அமல்ராஜ் said...

ஹி ஹி ஹி

Popular Posts