Thursday, December 22, 2011

மதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.


கவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை  விரும்பாதோரும்  இவை ஆட்கொள்ளாதோரும்  இருக்கவே  முடியாது. அவ்வாறான  இந்த உணர்வியல் விடயங்களை எமக்கு இலகுவாக கிடைக்கச்செய்யும் ஒரு ஊடகம் தான் நம்ம தமிழ் சினிமா.

பரந்துபட்ட சினிமா உலகத்தில் எத்தனையோ புதிய புதிய படைப்புக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தும், அவை அனைத்துமே ரசிகர்களின்  மனங்களில்  தங்க  முடிவதில்லை. அதேபோல  சில படைப்புக்கள் வந்தவுடனேயே மனங்களில் ஏறி நிரந்தரமாக அமர்ந்துகொண்டு எங்கள் ரசனைக்குள் ரகளை செய்யக்கூடியவை. இவ்வாறான படைப்புக்களில் முதல் இடம் பெறுபவை இந்த திரைப்பட பாடல்கள். திரைப்படம் வருவதற்கு முன்னாலே வெளிவந்துவிடுகின்ற இந்த பாடல்கள் அந்த திரைப்படத்திற்கான தலை எழுத்தாகவும் அமைந்து விடுகின்றன. பாடல்களை வைத்துக்கொண்டு திரைப்படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள் எப்பொழுதுமே சினிமாவில் அதிகம். அந்தவகையில் வெளிவரும் பாடல்கள் சில எங்கள் ரசனையை பாடாய் படுத்தாமல் போய்விடுவதில்லை.

இவ்வாறான இந்த பாடல்களில் மிகப் பிரதானமாக மூவரின் பங்கு இருக்கிறது. பாடல் ஆசிரியர், இசை இயக்குனர், பாடகர். இந்த மூன்று பேருமே இந்த இசை உலகத்தில் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கக் கூடியவர்கள். அதற்கு நல்ல கூட்டணி மனநிலை அவசியம். இளையராஜா, வாலி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, ஹரிஹரன் பின்னர் ஹரிஸ் ஜெயராஜ், ந.முத்துக்குமார், கார்த்திக் என்கின்ற எனக்கும் பிடித்த ஒரு வெற்றிக் கூட்டணி இன்னும் இருக்கிறது. (இதை விடவும் பல உண்டு)

இந்த கூட்டணிகளிலே எனக்கு அதிகம் பிடிக்கும், லயக்கும் ஒரு நபர் இந்த பாடலாசிரியர். அவர்களால்  எழுதப்படும்  எங்களை  மயக்கும்  அந்த வரிகளுக்காகவே அவர்களை எமக்கு பிடித்துப் போகிறது. கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார் என நீளும் எனது பிடித்தமான சினிமா பாடலாசிரியர்கள் (கவிஞர்களைப் பற்றி சொல்லவில்லை) என்கின்ற வரிசையிலே அண்மைக்காலமாய் இன்னொருவரும் சேர்ந்திருக்கிறார். அவர்தான் வெறுமனே வயசான, கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் வாரிசு மதன் கார்கி.


ஷங்கரின் இந்திரன் திரைப்படத்தின் 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ' என்கின்ற பாடலோடு சினிமாவில் அறிமுகமானதில் இருந்து கார்க்கியை எனக்கு பிடித்துப்போனது. அவரது அந்த இந்திரன் பாடல் ஒருவரின் முதல் பாடல் என்கின்ற மட்டத்தை தாண்டி அனுபவ பாடலாசிரியருக்குரிய ஒரு முகத்தைக் காட்டியமை அவரை இலகுவாக அனைவரும் உயர்வாய் எடுத்துக்கொள்ள வழிகோலியது எனலாம். எனக்கும் கார்கி என்கின்ற ஒரு பாடலாசிரியரை அதிகம் பிடித்துக்கொள்ள காரணமானவை அவரது வெறும் நான்கு பாடல்கள் தான்.

ஒன்று இந்திரன் பட 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ', இரண்டாவது கோ பட 'என்னமோ  ஏதோ', மூன்றாவது 180 பட 'நீ கோரினால்', நான்காவது  இப்போ  மனங்களை  வசீகரிக்கும்  நண்பன் திரைப்பட "அஸ்க் லஸ்க்கா" பாடல்.


இந்த சகல பாடல்களிலும் ஒரு வித்தியாசமான ஒரு வசீகரம் இருப்பதை நான் கண்டுகொண்டேன். அதுவே என்னை முதல் முதல் ரசிக்க வைத்த விடயம். நான் பொதுவாகவே இசையையும் கவிதையையும் அதிகம் ரசிப்பவன் என்பதாலோ என்னவோ கார்கியின் பாடல்களை நல்ல கவிதைகளாகவே பார்க்க முடிகிறது. கார்கியின்  இந்த நான்கு பாடல்களுமே மெகா கிட் ஆனா பாடல்கள். அண்மைக்காலங்களில்  நான்  அதிக தடவைகள் கேட்ட பாடல் என்கின்ற பெருமையை முதலில் கோ படத்தின் என்னமோ ஏதோ பாடலும் இப்பொழுது நண்பன் திரைப்படத்தின் அஸ்க் லஸ்க்கா எடுத்துக்கொண்டன. (இதன் ப்ரோமோ வடிவம் மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தது இந்த பதிவு எழுதும் வரை.)

கார்கியின் இந்த இரண்டு பாடல்களிலும் நான் மயங்கிப் போனது சுவாரசியமான விடயம். இந்த என்னமோ ஏதோ பாடலின் வரிகள் ஒரு காந்தசக்தி கொண்டவை. ஒவ்வொரு வரிகளிலும் தனது தந்தையின் ரத்தம் தெரிகிறது.


ஏனோ குவியமில்ல குவியமில்ல ஒரு காட்சிப்பேளை
உருவமில்லா உருவமில்லா நாளை.
நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே..
இந்த வரிகள் மிகவும் இயல்பானவை. ஆனாலும் இதற்குள் முக்கியமான ஒரு விடயம் என்னவெனில் புதிய கருத்தை புதிய வார்த்தைகளால் ஆனால் இயல்பாக சொல்கின்றமை. அதுவும் மெலடி என்பதால் அந்த டியுன் இற்கும் முண்படாமல்.. என்ன அழகு.

இதைபோலவே, அடுத்து  நம்  மனங்களை  காற்றில்  பறக்க வைத்துக்கொண்டிருக்கும் நண்பன் திரைப்பட அஸ்க் லஸ்க்கா பாடல். எத்தனை முறை கேட்டாலும் கவி வரிகள் ரசனையை முத்தமிடுகிறதே தவிர  அலுத்துப்  போவதாய்  இல்லை. ப்ரோமோ  பாடலை  மட்டும் கேட்டுவிட்டு இந்த பதிவை போடும் அளவிற்கு அந்த பாடல் என்னை கவர்ந்து தொலைத்தது உண்மைதான்.


லூட்டோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டும் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே....
இந்த வரிகளை என்னால் உதடுகளிலிருந்து வாபஸ் பெறவே முடியவில்லை. நேற்று மதியம் முதல் உதட்டிற்கும் குரல் வளைக்கும் இடையில் சலிப்ன்றி ஓடித்திரிகிறது இந்த வரிகள். இதே போல குரலில் கேட்காவிடினும் (ப்ரோமோ பாடலில் இந்த வரிகள் இல்லை) வரிகளாய் ஜன ரஞ்சகம் செய்த இன்னும் சில வரிகள்.

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை
நீ கொள்ளை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே..

யப்பா... அவர்  பாடல்களில்  நான்  அவதானிக்கும்  இரண்டு விடயங்களிற்காக, கார்க்கியை எனக்கு அதிகம் பிடிக்கிறது இப்பொழுது காரணம்,

ஒன்று, தந்தை  போன்ற  அதீத தேடல் கார்கியின் பாடல்களை இன்னுமொரு தளத்திற்கு கொண்டு போய்விடுகிறது. உதாரணமாக இதுவரை எழுதியுள்ள சுமாராக ஐம்பது பாடல்களில் இரண்டு பாடல்கள் வேற்று மொழிகளில் எழுதப்பட்டவை. ஒன்று ஏழாம் அறிவில் வந்த ஒரு சீன மொழிப் பாடல், இன்னொன்று 180 திரைப்படத்திற்காய்  எழுதிய  அந்த  போர்த்துகீஸ் மொழிப்பாடலுமாகும்.

இரண்டாவது, வார்த்தை ஜாலங்களும், யாரும் எண்ணாத கோணத்திற்கு கருத்துக்களை கொண்டுபோய் நிறுத்தும் விதமும். இவ்வாறாக இந்த இரண்டு சிறப்பியல்புகளும் கார்க்கியை ஒரு சிறந்த பாடலாசிரியராக மாற்றும் என்பதில் எவரிற்கும் நம்பிக்கை உண்டு.


மதன் கார்க்கியை, கவிப்பேரரசின் மகன் என்பதற்கல்ல, ஒரு இயல்பான, ரசனை  மிக்க, அழகான  கவிதைகளை  பாடலாய்  தரும்  ஒரு  இளம் பாடலாசிரியராக  எனக்குப்  பிடிக்கும். இன்னும்  பல  பாடல்களுக்காய் காத்திருக்கும்  நல்ல  அழகிய  கவிதைப்  பாடல் விரும்பிகளுள்   நானும் ஒருத்தன்.


கோ திரைப்பட 'என்னமோ ஏதோ' திரைப்பட பாடலை கேட்க.
என்னமோ ஏதோ

நண்பன் திரைப்பட 'அஸ்க் லஸ்க்கா' ப்ரோமோ பாடலைக் கேட்க்க.
அஸ்க் லஸ்க்கா_ப்ரோமோ

நண்பன் திரைப்பட 'அஸ்க் லஸ்க்கா' முழு பாடல் வரிகளையும் பார்க்க.
'அஸ்க் லஸ்க்கா' வரிகள்_மதன் கார்கி ப்ளாக்.


.

12 comments:

Unknown said...

இவரின் அனைத்து பாடல்களுமே தனித்தன்மை கொண்டவையாய் அமைந்திருக்கின்றன!

Unknown said...

இவரின் அனைத்து பாடல்களுமே தனித்தன்மை கொண்டவையாய் அமைந்திருக்கின்றன!

ஆகுலன் said...

அறிவியல் சொற்கள் பாடல்களுக்கு இன்னும் மேருகூடுகின்றது...

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

நிரூபன் said...

வாழ்த்துக்கள் அமல் அண்ணா,
விரிவான கருத்தினைப் பின்னர் வழங்குகின்றேன்.

பி.அமல்ராஜ் said...

நன்றி நிரூ..

பி.அமல்ராஜ் said...

எனது பதிவிற்காய் மதன் கார்கி இடமிருந்து எனக்கு வந்த டிவிட்டர்.

madhankarky Madhan Karky
One of the best reviews I have received for #Nanban's #AskLaska | http://rajamal.blogspot.com/2011/12/blog-post_22.html | (thanks : @AmalrajFrancis) #fb
15 minutes ago Favorite Retweet Reply

பி.அமல்ராஜ் said...

உண்மைதான் மைந்தன், ஆகுலன்.

Anonymous said...

Promising yougster who is continuing the cameo work left by writer the great sujatha providing technical support by all means to tamil copy cat directors

நிரூபன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

நிரூபன் said...

அண்ணே, வேலை பிசியால் நண்பன் பாடல்களை கேட்க முடியவில்லை.
பாடலைக் கேட்க முன்பதாகவே பாடலின் ஒவ்வோர் வரிகளும் மனதுள் ஊடுருவி விட்டது எனும் உணர்வினை உங்களின் இந்த விமர்சனம் தந்திருக்கிறது,

பி.அமல்ராஜ் said...

வணக்கம் நிரூ,

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. புதிய வருடம் உங்களிற்கும் நீங்கள் விரும்பும் சகலதையும் அடைய வழி கோல வேண்டும் என வாழ்த்துக்கிறேன். கருத்திற்கும் நன்றி.

Popular Posts