
என்னைபொறுத்த வரையில் ஒரு நடுநிலையான சினிமா ரசிகனாக ஒரு திரைப்படம் என்னை எந்தவழியில் எல்லாம் பாதித்திருக்கிறதோ அவை அனைத்தையும் எழுத்தில் சொல்லிவிடுவதில் எந்த தப்பும் இருப்பதாய் தெரியவில்லை. நாம் நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ தீயதை, பிடிக்காததை மறைத்துவிட வேண்டும் என்றோ எனது மனநிலையில் என்றுமே நான் சிந்தித்ததில்லை. அதற்காக எனது ரசனை நடுநிலமையானதாகவும், நல்லதை மட்டும் கொண்டாடுவதாக இருக்காமையும் அவசியம். சரி.. இவற்றை விடுத்து விடயத்திற்கு வருகிறேன்.
இங்கு நான் அந்த படம் தொடர்பாக விமர்சனம் எழுத வரவில்லை. விருப்பமும் இல்லை. காரணம் எனது விமர்சனம் சிலவேளைகளில் எனது சில நண்பர்களை மனம் நோகப் பண்ணலாம் என்பதால். ஆனால், எப்பொழுதுமே ஒரு திரைப்படத்தை பார்த்து வந்ததன் பின் அது தொடர்பாக மனதில் எழும் உணர்வுகளை எழுத்துக்களில் கொட்டிவிட்டால் நின்மதியாக தூங்கி விடலாம். அந்தவகையில் இந்த வேலாயுதம் என்னில் ஏற்படுத்திய உணர்வு, ரசனை மீதான தாக்கங்களை (நான் ரசித்த விடயங்களை மட்டும்) சொல்லிவிடுகிறேன்.

முதலில், நான் ஒரு தீவிர இசை ரசிகன் என்பதனால் என்னை அதிகம் கட்டிப்போட்ட பாடல்களோடு இதை ஆரம்பிக்கலாம். என்னதான் சொன்னாலும், ஆத்திசூடி ஆத்திசூடி என மெட்டுப் போட்டு பாடிய விஜய் அன்டனியால் 'மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ' என ஒரு சாகடிக்கும் (இசையால்) மெலோடியை கொடுக்க முடிந்தது ஆச்சரியம் தான். முதலில் அவரிற்கு வாழ்த்துக்கள்.
இந்த மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ என்கின்ற பாடல் என்னை அதிகம் பாதித்தது உண்மைதான். எப்பொழுதுமே எமது உணர்வுகளை அல்லது ரசனையை எமக்கு தெரியாமலேயே சில விடயங்கள் தொட்டு போய்விடுகின்றன. அவ்வாறான ஒரு சந்தர்பத்தை இன்று நான் இந்த பாடலை பார்த்து கேட்ட போது உணர்ந்துகொண்டேன். திரையிலே அந்த இனிமையான இசை முடிந்ததும் எப்பொழுது வீடு போய் இரண்டு காதுகளிலும் எனது ஹெட் போனை அணிந்து உச்ச சத்தத்தில் ஆசை தீர கேட்பேன் என ஆவல் பட்டு அவசரப்பட்டேன். என்னவோ, அந்த இனிமையான மெட்டும், பாடல் வரிகளும் அதற்கு காரணங்கள் என்று மட்டும் கூறி வரிகளிற்கு ஏற்றாற்போல் கொஞ்சற் குரலில் பாடிய சங்கீதாவை ஓரம் கட்டி விட முடியாது. இவரின் குரல் மிக முக்கிய காரணம் அந்த பாடல் மனங்களில் அப்படியே ஓரமாய் போய் படிந்துகொல்வதற்கு.
நானே செடி வளரும் தோட்டம் ஆனேன் யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்
என்ற வரிகளை எப்படி எனது உதடுகளில் இருந்து அகற்றுவது எனதெரியவில்லை. இன்னும் வாயில் அங்கும் இங்கும் இந்தப் பாடல்தான்.
வேர்வை துளி முகத்தில் வைர கற்கள் அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்
இந்தவரிகள் யாரைத்தான் ரசிக்கவிடாமல் பண்ணக்கூடியவை. கேட்டவுடனேயே எனது ipod வரை ஓடிச்சென்று குந்திக்கொண்ட பாடல்களில் மங்காத்தாவின் நண்பன் பாடலிற்கு அடுத்ததாய் இந்த "மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ, கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ.." பாடல்தான். (7ஆம் அறிவு பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை காரணம் அவற்றை திரையில் இன்னும் அனுபவிக்கவில்லை..). இப்படத்தின் மற்ற பாடல்களும் சூப்பர் தான். அதிலும் ரத்தத்தின் ரத்தமே பாடலும், முளைச்சு மூணு இலையும் விடல என்கிற பாடலும் எனது கைதட்டை பெற்றனவே. ரத்தத்தின் ரத்தமே எனது நண்பனை அதிகம் கவர்ந்தது என்னை அந்தளவிற்கு பாதிக்கவில்லை. (அதற்கு எனக்கு ஒரு தங்கை இல்லாதது காரணமோ தெரியவில்லை.) ஆனாலும் அது ஒரு நல்ல செண்டிமெண்ட் பாடல்தான்.
அடுத்து, சண்டைக்காட்சிகள். என்னவோ ஏதோ எனக்கு பிடித்திருந்தன. இம்முறை கொஞ்சம் யதார்த்தத்திற்கு முரண் படமால் சண்டைக்காட்சிகளை அமைத்திருப்பது மகிழ்ச்சி. அடுத்து விஜயின் கோழி பிடிக்கும் கதை.. சிறப்பான ஒரு கற்பனை என்றே தோணியது. அத்தோடு ஆங்காங்கே கோழி என்ற பெயரில் இரட்டை அர்த்த பேச்சுக்களும் கலக்கல் தான். இதுவரை நான் பார்த்த கதைகளில் இரட்டை அர்த்த வார்த்தைகள் மிகச்சரியாக பொருந்திய சந்தர்ப்பங்கள் இதுதான் என சொல்ல தோணுகிறது. அந்த இடங்களில் திரையரங்கு அதிர்கிறது. அனைத்து இளம் ரத்தங்களின் சார்பிலும் சபாஷ் ராஜா.. ஹி ஹி ஹி ...
இறுதியாக, எப்படி சொல்வது.. (கொஞ்சம் வெக்கமா இருக்கு பாஸ்..) நம்ம ஹன்சிகா.. படத்திற்கு ஒரு பிளஸ். எனது மனதிற்கும் ஒரு ரிலாக்ஸ். 'இன்னா தண்டி உடம்பும் இடுப்பும்..' என தன்னை மறந்து ஆவென பார்த்துக்கொண்டிருந்த நண்பனை ஆமோதிக்கவே வேண்டியதாயிற்று. ஆமா, யாரோ சொன்னது போல பிசைஞ்சு எடுத்த ரொட்டி மாவுதான்.. இதுவரை நான் ரசிக்காத ஒரு நாயகி... இன்றோடு நம்ம பாடும் அவுட். ஐயோ ஐயோ.. கொண்ணுட்டாயா. ஒரு சின்ன கேள்வியோடு வெளியே வந்தேன். போகிற போக்கில் நமிதாவை ஓரம் கட்டிவிடுமோ இந்த குண்டு பொண்ணு???
தானும் தன்னுடைய வேலையும் என்று வந்துபோகும் ஜெனிலியா அடக்கமாக (நடிப்பில்) இருக்கிறார். படத்தின் கதையோடு ஹன்சிகாவை விட ஜெனிலியா அதிகம் ஒன்றிப் போவதால் நேரம் எடுத்து அவரை ரசிக்க முடியவில்லை.. ஒரு கட்டத்தில் படத்திற்கு எதற்காக ஹன்சிகாவின் தேவை என்றும் எண்ண தோன்றியது?? எங்களை உசுப்பேத்த மட்டும்தானா??
ஆக, இவை மட்டும்தான் என்னை அதிகம் கவர்ந்த விடயங்கள். படம் சூப்பரோ, சூப்பர் இல்லையோ, நான் மேலே சொன்ன எனக்கு பிடித்த விடயங்கள் அனைத்தும் சூப்பருங்க. இந்த விடயங்களை அதிகம் ரசித்ததில் இந்த மாலை எனக்கு போதுமானதாகவே நிறைவேறியது.
மறந்திடாம அந்த பாடல வடிவா கேட்டுடுங்க மக்கள்ஸ்... உங்கள் மனதையும் உசுப்பி போகும்..
.
3 comments:
உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .
வணக்கம் பாஸ் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் இனி தொடர்ந்து வருகின்றேன்..நன்றி
இனிய காலை வணக்கம் பாஸ்,
எனக்கும் வேலாயுதம் பாடல்கள் பிடிக்கும்,
வித்தியாசமான முறையில் கலைஞர்களின் பங்களிப்பினை அலசியிருக்கிறீங்க.
Post a Comment