முதலாவதாக வெளிவந்த இந்த கட்டுரைகளே இந்த இலக்கிய உலகத்திற்கும், இப்பொழுது எனக்கு இருக்கும் அதிகமான இலக்கிய நண்பர்களுக்கும் என்னை முதலாவதாக அறிமுகப் படுத்திவைத்தது எனலாம். இந்த அறிமுகம் என்னை மன்னார் அமுதனின் அக்குரோணி வெளியீடு விழாவில் இடம்பெற்ற கவியரங்கம் (நன்றி மன்னார் அமுதன்), ஜீவநதியின் நான்காம் ஆண்டு கவியரங்கம்(நன்றி பரணீ மற்றும் துஷி), லண்டன் தமிழ் வானொலியில் வெளியான எனது கன்னி நேர்காணல், வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற முதலாவது தொலைகாட்சி நேர்காணல் போன்ற பல காத்திரமான, சுவாரஸ்யமான இலக்கிய அனுபவத்திற்கு என்னை கொண்டு சென்றது. அத்தோடு பல மூத்த இலக்கிய படைப்பாளிகளுடனான நட்பையும் பெற்றுத்தந்திருக்கிறது.
வார்ப்பு இணைய இதழில் வெளியாகிய எனது கவிதை நூல் பற்றிய ரசனைக்குறிப்பை காண இங்கே சொடுக்கவும்:
http://www.vaarppu.com/review.php?rvw_id=88
தமிழ் ஆதேர்ஸ் இணைய இதழில் வெளியாகிய எனது கவிதை நூல் பற்றிய ரசனைக்குறிப்பைக் காண இங்கே சொடுக்கவும்:
http://tamilauthors.com/04/148.html
தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையான 'இருக்கிறம்' சஞ்சிகையில் வெளியான ரசனைக்குறிப்பு:
லண்டன் தமிழ் வானொலியில் இடம்பெற்ற எனது செவ்வியை செவிமடுக்க இங்கே சொடுக்கவும்:(நன்றி ஷைபா மாலிக் மற்றும் நாடா மோகன்)
LTR - எனது நேர்காணல்
வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற செவ்வியின் வீடியோ பதிவை வெகு விரைவில் பகிர்வேன்.(நன்றி கவிஞர் அஸ்மின்)
இதன் தொடர்ச்சியாக இன்று வீரகேசரியில் வெளியாகியிருக்கும் எனது நூல் பற்றிய விமர்சனம். இந்த விமர்சனத்தை எழுதிய வெலிகம ரிம்ஸா அவர்களுக்கும் வீரகேசரி வாரவெளியீட்டிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
.
2 comments:
அமல்..மறக்காமல் ஏற்றி விடடவர்களை திரும்பிப் பார்க்கும் உங்கள் குணம் கண்டிப்பாக உங்களையும் வாழ்வில் ஏற்றிவிடும் என்பதும் உண்மை.. ( வாழ்க தொண்டு.. வளர்க துண்டு........
வணக்கம் அமல் அண்ணா,
உங்களுக்கு இச் சிறியேனின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
தொடர்ந்தும் காத்திரமான படைப்புக்களோடு பயணியுங்கள்.
போர்ச் சூழலின் பின்னர் நான் ரசிக்கும் எம் படைப்பாளிகளுள் உங்களின் படைப்புக்கள் அதிகளவான வாசக நேயர்களினை நோக்கி நகர்ந்திருக்கின்றது எனும் செய்தியினை இப் பதிவினூடாக அறியும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
Post a Comment