நான் வந்ததும்
நீ போனதும்
காதல் மரித்ததும்
காவியம் ஆனதும்
எல்லாமே - நம்
காலத்தின் கணக்கில்
காலமாய்ப் போச்சே..
நீ சிரித்தாய்
நான் எரிந்தேன்
நீ காதல் சொன்ன நேரம் - நான்
கனவினில் மரித்தேன்.
உன் மனம் திருடினேன்
நீ - என்னை
தினம் வருடினாய்..
முட்டிப்போன நம் மூச்சும் கூட
மணம் முடிப்பதாய் சொன்னாய்.
அன்றும் நம்
விதியின் கணக்கு
விளங்கவே இல்லை நமக்கு.
ஒட்டி உறவாடி - உன்னை
ஓரமாய் களவாடி,
உள்ளங்கையில் நிறுத்தி
ஒய்யாரமாய் முத்தமிட்டேன்.
உன் கன்னக்குழியில் - ஓரமாய்
ஒடுங்கிய சிரிப்பில் - கொஞ்சமாய்
உலகமே மரித்தது.
அன்றும் அது
கருகிப்போன
காலத்தின் கணக்கு என
மறந்தே போச்சே..
உயிரில் கலந்து
உவத்திரம் செய்தாய்,
உதிரம் கொதிக்க
திராவகம் ஊற்றினாய்,
காதலில் கனிந்து
காவியம் இனிக்கையில்
கம்பீரமாய் சொன்னார்கள்.
'இவள் ஒரு சாதி
அவன் மறு சாதி..'
சாதி வந்ததும்,
எப்படி ஒட்டும் - இந்த
காதல் தப்பும்?
மனதை பிரித்து
காதலை எரித்து
சாதியை மதித்தார்கள்
எப்படி புரியும் - இந்த
காடையர்களுக்கு காதல்??
'இது விதியின் வழக்கு - புரிஞ்சுக்கோ
எல்லாமே ஒரு கணக்கு..'
மரணம் தழுவி - நாம்
காரணம் கேட்டபோது
விவரணம் சொல்கிறார்கள்
இப்படி - அந்த
சாதி பாடும் சாக்கடைகள்,
'இது விதியின் வழக்கு - புரிஞ்சுக்கோ
எல்லாமே ஒரு கணக்கு..'
நன்றி 'கவிதை நேரம்', லண்டன் தமிழ் வானொலி.
.
8 comments:
எல்லாமே ஒரு கணக்கு.. //
நன்றாக எழுதுகிறீர்கள் ........
நன்றி ..
இனிய காதலை இடை நடுவே சாதி பிரிக்கும் கொடுமையினை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.
மிக்க நன்றி ஸ்டாலின்..
@ நிரூ,
வணக்கம் நண்பா.. நலமா?? நீண்ட நாட்களுக்கு பின்.. நன்றி நன்றி..
சா-தீ!
ஏக்க இறைவனின் திருப்பெயரால்..
கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்
வாழ்த்துகள் பயணங்கள் தொடரட்டும் ...
சாதியத் தீயினால் மரணம் தழுவிய காதலர்கள் அனைவருக்கும் இந்தக் கவிதையைச் சமர்ப்பணமாக்கலாம். நாம் சொல்லவேண்டியதை இவர் சொல்லியிருக்கிறார் என்ற எண்ணத்தோடு அவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையும்.
அருமையான கவிதை அமல்... வாழ்த்துக்கள்
Post a Comment